019 : ஆமை புகுந்த வீடு....!
7:56 PM | Author: நாமக்கல் சிபி

நம்ம ஹரிஹரன் அவர்களோட உலகத்துல ஆமை புகுந்த வீடு ஏன் விளங்காதுன்னு சான்றோர்கள் சொன்ன விளக்கத்தை அதாவது கல்லாமை, அறியாமை, முயலாமை, இல்லாமைம் இயலாமை, பொறாமை போன்ற ஆமைகளைச் சுட்டிக் காட்டி கூறியிருந்தனர்.

இந்த காலத்து பசங்களுக்கும் பிடிபடற மாதிரி ஒரு ஈசியான லாஜிக்கலான விளக்கம் எனக்கும் தோன்றியது. அதைத்தான் இங்கே சொல்கிறேன்.
(காமெடி, கீமெடியெல்லாம் இல்லை).

அதாவது நம்ம வீடுகளில் பாம்பு, பூரான், தேள் போன்றவற்றை பார்த்தால் நாம் என்ன செய்வோம். உடனடியாக அடித்துக் கொள்வோம்/கொல்வோம். அல்லது குறைந்தபட்சம் வீட்டை விட்டு வெளியேற்றவாவது செய்வோம். அதுவும் படு வேகமாக. அவை உள்ளே நுழையும்போது பார்த்தாலே கூட உடனடியாக கம்பு எங்கே இருக்கிறது என்று தேடிச் செல்வோம்.

அப்படியிருக்க வெகு மெதுவாக நகரும் இந்த ஆமையானது வீட்டிற்குள் வரும் வரை விரட்டாமல் வீட்டினுள் அனுமதிக்கின்றனர் என்றால் அவ்வீட்டிலோர் எப்பேர்ப்பட்ட சோம்பேறிகளாயிருப்பர். சோம்பேறிகள் நிறைந்த வீடு எப்படி இருக்கும். உழைப்பு இருக்காது. உழைப்பு இல்லாத வீட்டில் என்ன செல்வம் இருக்கும்? ஒன்றும் இருக்காது. அதாவது சோம்பேறிகள் நிறைத வீடோ, சமுதாயமோ ஒன்றுக்கும் உதவாமல் விளங்காமல்தான் போகும்.
|
This entry was posted on 7:56 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

10 பின்னூட்டங்கள்:

On Mon Nov 20, 09:49:00 PM , ramachandranusha(உஷா) said...

அடடா :-))))

 
On Tue Nov 21, 12:42:00 AM , லதா said...

//உடனடியாக அடித்துக் கொள்வோம்//
நாங்கள் எல்லாம் அப்படி அடித்துக்*கொள்ள* மாட்டோம். :-)))

 
On Tue Nov 21, 01:10:00 AM , Santhosh said...

எப்படி தலை உங்களால மட்டும் இப்படி எல்லாம் முடியுது. நீங்க இதை இந்த பிளாக்கில் போட்டதுக்கு பதில் பித்தானந்தா ஏரியாவுல போட்டு இருந்தா சரியா இருந்து இருக்கும் :))

 
On Tue Nov 21, 01:10:00 AM , Santhosh said...

எப்படி தலை உங்களால மட்டும் இப்படி எல்லாம் முடியுது. நீங்க இதை இந்த பிளாக்கில் போட்டதுக்கு பதில் பித்தானந்தா ஏரியாவுல போட்டு இருந்தா சரியா இருந்து இருக்கும் :))

 
On Tue Nov 21, 01:59:00 AM , மாசிலா said...

உங்களது கருத்துடன் நானும் ஒத்துப்போகிறேன்.
இதுவே சரியெனப்படுகிறது.

 
On Tue Nov 21, 06:14:00 AM , துளசி கோபால் said...

//உடனடியாக அடித்துக் கொள்வோம்//

எதுக்காக நம்மை நாமே அடித்துக் கொள்வது?

கொள்வோம்= கொல்வோம்:-)))

சீக்கிரம் ட்யூஷனுக்கு வந்து சேரவும்:-)))

 
On Tue Nov 21, 03:50:00 PM , Hariharan # 03985177737685368452 said...

ஏதோ என்னால முடிஞ்சதுல இருந்து உங்களால முடிஞ்சதைத் தந்திருக்கின்றீர்கள்.

ISO 9001/2 rated டபுள் டிஸ்டில்டு பிலாசபியாக்கியதற்கு நன்றிகள் நாமக்கல் சிபி!

 
On Tue Nov 21, 04:39:00 PM , ALIF AHAMED said...

http://www.dailythanthi.com/article.asp?NewsID=298144&disdate=11/21/2006


இப்ப சந்தோசம் தானே...::)))

கலாய்க்கறதுன்னா எனக்கும் பிடிக்கும். ஆனா கலாய்க்கறது நானா(கவும்) இருக்கணும்::)

 
On Tue Nov 21, 05:17:00 PM , G.Ragavan said...

ஐயோ..ஐயோ...ஐயகோ! இப்படி ஒரு விளக்கம் இதுவரைக்கும் நான் கேட்டதில்லை. ஆனாலும் நல்லாயிருக்குதுங்க. அந்தக் காலத்துல ஆமையப் புழுக்கி உண்ட வழக்கமும் இருந்திருக்காம். அதுக்குக் கூட வீட்டுக்குள்ள நொழஞ்ச ஆமையப் பிடிக்காம இருந்திருக்காங்கன்னா...என்ன சோம்பேறியா இருந்திருப்பாங்க.

 
On Tue Nov 21, 05:53:00 PM , பொன்ஸ்~~Poorna said...

//பித்தானந்தா ஏரியாவுல போட்டு இருந்தா சரியா இருந்து இருக்கும் :)) //

சந்தோஷை வழிமொழிகிறேன் குருவே... :))