வகுப்பறை வாத்தியார் இன்று காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் கலாய்த்தல் திணைக்கு (அதர் ஆப்ஷனில்) வருகை தர இருக்கிறார்.
அது சமயம் தன் மாணவக் கண்மணிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களை உடனுக்குடன் பின்னூட்டங்கள் வாயிலாக தெளிவு படுத்த இசைவு தெரிவித்திருக்கிறாருங்கோ! யாரும் ஜாதகம், ராசிபலன், கைரேகை, குறிசொல்லுறது - இப்படிப்பட்ட டாபிக்லே கேள்விகளைக் கொண்டு வராதீங்க! அப்படி வருபவர்கள் பெஞ்சு மேலே நிறுத்தி வைக்கப் படுவார்கள்!
எல்லாரும் அவங்களுக்கு முடிஞ்ச அளவு கேள்விகளோட பட்டியலைத் தயார் பண்ணிகிட்டு
கலாய்த்தல் திணைப் பக்கம் வந்துடுங்கோன் என்று வாத்தியாரின் சார்பாக கேட்டுக் கொல்கிறேன்! கேள்விகளில் சீரியஸான கேள்விகளைத் தவிர்த்திடுமாறும் சொல்லி இருக்கிறார். சீரியஸ் டாபிக் பேசி போரடிப்பதாகவும், ஒரு நாள் ரிலாக்ஸ் செய்து கொல்லவே கலாய்த்தல் திணைக்கு வருகை புரிறார் என்பதும்தான் காரணமாம்!
ஜாலியான கேள்வி பதில் செஷன் 10.30 மணிக்கு ஆரம்பம்!
உங்க கேள்விகளை ஒரு சிறு தாளில் எழுதி சட்டாம்பிள்ளைக்குப் பதிலாக நாமக்கல் சிபி கைல கொடுத்தீங்கன்னா சிபி வாசிக்க, வாத்தியார் யோசிக்க, கேள்வி பதில் செஷன் படு சூப்பரா போகுமுன்னேன்!
ஜாலி செஷன் ஸ்டார்ட் ஆகட்டும்! மாணவக் கண்மணிகள் ஐயங்கள் தீரட்டும்!
கும்மி,
வாத்தியார்
|
This entry was posted on 8:29 AM and is filed under
கும்மி
,
வாத்தியார்
. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
34 பின்னூட்டங்கள்:
வணக்கம் சிபி மற்றும் மாணவக் கண்மணிகள், பதிவர் பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம்!
வணக்கம் வாத்தியார் சார்!
பயணம் இனியதாக இருந்ததா?
நல்லபடியா இருந்தது சிபி!
இந்த வினாடி வினா நிகழ்ச்சியை ஏற்பாடு செஞ்சதுக்காக இந்தாங்க உங்களுக்கு ஒரு பொன்னாடை!
ஆஹா! மிக்க நன்றி ஐயா!
(இன்னும் நீங்க திருந்தலையா?)
உங்க அன்புக்கு நான் பாத்திரம் ஆனதுக்கு நான் ரொம்ப பெருமைப் படுறேன்!
நான் கூட அவர் அன்புக்கு பாத்திரம் ஆவனந்தான்!
அப்போ நானு?
//யாரும் ஜாதகம், ராசிபலன், கைரேகை, குறிசொல்லுறது - இப்படிப்பட்ட டாபிக்லே கேள்விகளைக் கொண்டு வராதீங்க! //
சூனியம் வைப்பது தொடர்பான கேள்விகளுக்கு அனுமதி உண்டா ?
வாத்தியா சென்னை விஜயமா ? மாதாந்திர சுற்றுப் பயணமா ? எந்த லாட்ஜில் தங்குகிறார் ?
//வாத்தியா சென்னை விஜயமா ? மாதாந்திர சுற்றுப் பயணமா ? எந்த லாட்ஜில் தங்குகிறார் ?
//
கலாய்த்தல் தி(ண்)ணையில் தங்கிவிட்டு இன்று மாலையே கிளம்பி விடுகிறார்!
//சூனியம் வைப்பது தொடர்பான கேள்விகளுக்கு அனுமதி உண்டா ?
//
தாராளமாக!
தாங்கள் சொல்வது சொ.செ.சூ.வை தொடர்பாகத்தானே!
:)
வாத்தியார் என்றவுடன் நம்மைப் பத்தின பதிவுதான்னு நினைச்சிட்டேன் வந்துட்டேன்!
அட வாத்தியார் என்றவுடன் நான் எம்.ஜி.ஆர்னு நினைச்சிட்டேன்!
இருந்தாலும் நம்மைப் பொறுத்த வரை இவரும் அவரு மாதிரிதான்!
நானும் 4 கேள்வி கேட்டுக்கிறேன்!
ஐயா,
கவிதாயிணி என்ற பெயரை வாஸ்து ஜோதிடப் படி கவிதா இனி என்று மாற்றிக் கொண்டிருக்கிறேன்!
பயனளிக்குமா?
//கவிதாயிணி என்ற பெயரை வாஸ்து ஜோதிடப் படி கவிதா இனி என்று மாற்றிக் கொண்டிருக்கிறேன்!
பயனளிக்குமா?
//
நல்ல கேள்வி!
பெயரை மட்டும் மாற்றிக் கொல்லுவதால் பயனேதும் இல்லை சகோதரி(அக்கா என்று சொல்லலாம்தானே)
தாங்கள் இனிமேல் புதிதாக எதுவும் எழுதாமல் இருக்க வேண்டும்!
அதுதான் பிற பதிவர்களுக்கு பலனளிக்கும்!
ஐயா,
கிரக நிலைகளின் படி நாமக்கல் சிபியின் மொக்கையிலிருந்து எங்களுக்கு எப்போது விடுதலை கிடைக்கும்?
இந்த வருடம் புதுகைத் தென்றல் பிளாக்கிற்கு காலநிலை எப்படி? அதைக் கொஞ்சம் சொல்லுங்களேன் ஐயா.
:)))))
திருமங்கலம் தேர்தல் களத்தில் இலவசச் "சரக்கு" என்ற செய்தியால் வகுப்பறையில் பாதிப்பேர் நாமக்கல்லார் தலைமையில்
அங்கே சென்று விட்டார்கள். அவர்களைத் தேடிப்பிடித்துக் கண்டித்துக் கூட்டிவர வாத்தியாரும் சட்டாம்பிள்ளை உனாதானாவும் அங்கே சென்றிருக்கிறார்கள்.
மேட்டரைத் திசை திருப்ப 'இந்த சென்னை விஜயம்' பதிவு உதவாது!
/கவிதாயிணி என்ற பெயரை வாஸ்து ஜோதிடப் படி கவிதா இனி என்று மாற்றிக் கொண்டிருக்கிறேன்!
பயனளிக்குமா?
//
நல்ல கேள்வி!
பெயரை மட்டும் மாற்றிக் கொல்லுவதால் பயனேதும் இல்லை சகோதரி(அக்கா என்று சொல்லலாம்தானே)
தாங்கள் இனிமேல் புதிதாக எதுவும் எழுதாமல் இருக்க வேண்டும்!
அதுதான் பிற பதிவர்களுக்கு பலனளிக்கும்!//
ஹா ஹா... ஏன் இந்த கொலவெறி..!!
நாங்களெல்லாம் உங்கள் அன்புக்கு பாத்திரம் ஆக முடியாதா?
தமிழிஷ் ஓனர் யார் என்று உங்கள் ஞான திருஷ்டியில் பார்த்து சொல்ல முடியுமா ஐயா?
9 aam idathil raagu irunthaa kandippaa kashtapadanuma?
நாங்களும் வாத்தியாரின் அன்புக்கு பாத்திரமாவோம் ஒரு நாள்!
வாத்தியார் அய்யா! (தற்போதைய நிலவரப்படி) முத்துலெஷ்மி கயல்விழிக்கு அடுத்ததா என்ன பெயர் வச்சுப்பாங்கன்னு கொஞ்சம் சோழி உருட்டி சொல்ல முடியுமா?
நான் எப்போ தான் ஒழுங்கா ரிப்பேர் இல்லாம இருப்பேன்னு நாடி பார்த்து சொலுங்க சார்!
அட நான் பதிவு படிக்க நேரமில்லன்னு போஸ்ட் போட்டதும் அபி அப்பா இப்படி எல்லாம் பின்னூட்டம் போடறீங்களா..? :))
@ கவிதா... அது நீங்க இல்லங்க வேற கவிதாயினி .. தொடர்ந்து நாலு கவிதை எழுதினா உங்களுக்கு இதே நிலை தான்.. :)))
@ கவிதா... அது நீங்க இல்லங்க வேற கவிதாயினி .. தொடர்ந்து நாலு கவிதை எழுதினா உங்களுக்கு இதே நிலை தான்.. :)))//
அட இன்னொரு கவிதா இருக்காங்களா?? பார்த்ததே.. இல்ல.. :((
இன்னொரு கவிதா இல்லிங்க.. அது காரணப்பெயர் .. கவிதை எழுதியதால் வந்த கவிதாயிணி பட்டம்.. ஹிஹி..
இன்னொரு கவிதா இல்லிங்க.. அது காரணப்பெயர் .. கவிதை எழுதியதால் வந்த கவிதாயிணி பட்டம்.. ஹிஹி..//
:) முத்து.. புரிஞ்சிக்கிட்டேன்... அவங்க காயத்திரி.. நானு கவிதா.. எப்படி தெளிவா இருக்கேன் பாருங்க :)))
//அட இன்னொரு கவிதா இருக்காங்களா?? பார்த்ததே.. இல்ல.. :((
//
என்ன எங்கள் பாலைத் திணை கவிதாயிணியைத் தெரியாதா?
அணில்குட்டியை எப்போ குழம்பு வைக்கலாம்னு நல்ல நேரம் பார்த்துங்க வாத்தியார் ஐயா!
//:) முத்து.. புரிஞ்சிக்கிட்டேன்... அவங்க காயத்திரி.. நானு கவிதா.. எப்படி தெளிவா இருக்கேன் பாருங்க :)))//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
எனக்கு அணில் பிரியாணி தான் பிடிக்கும்!
அது யாரு 0 சட்டாம்பிள்ளை உனா தானா ? தெரிலயே
## cheena (சீனா) said...
அது யாரு 0 சட்டாம்பிள்ளை உனா தானா ? தெரிலயே##
எங்க அண்ணன் தான் ச்சீனா சாரே!!