இப்பதிவின் எண்ணமும் ஆக்கமும் என்னுடையது! தட்டச்சு மட்டுமே அவருடையது ! அலுவலகப் பணிகளுக்கிடையிலும் நான் சொல்லச் சொல்ல குறிப்பெடுத்துக் கொண்டு இப்பதிவினை எனக்காக தன் வலைப் பூவில் வெளியிட இசைந்த எனதருமை (எனதெருமை அல்ல) அண்ணன் நாமக்கல் சிபி அவர்களுக்கு நன்றி!
கடந்த ஒரு வருடமாக "பிரிவும் பிரிவின் நிமித்தமும்" என்ற துயரத்தின் வலிகளையே என் கவிதைகளில் வாசித்து துயரங்களை தத்தமது நெஞ்சங்களில் பாரங்களாய் ஏற்றிக்கொண்ட இதயங்களுக்கு எனது நன்றியினை இன்று தெரிவித்துக் கொள்கிறேன்!
இழந்து விட்ட ஒரு நட்பின் காயத்தால் துயரங்களை என் வரிகளில் விதைத்து வந்த நான், பதிவுலகில் கிடைத்த சொந்தங்களின் அன்பு மழையில் கொஞ்சம் திக்கு முக்காடிப் போயிருக்கிறேன்! என் பிறந்த நாள் அன்று (என்)வரலாறு காணாத அளவில் தொலைபேசி அழைப்புகள் வாயிலாகவும், பதிவுகளின் வாயிலாகவும் வந்த வாழ்த்துக்களின் எண்ணிக்கையில் மலைத்துப் போயிருக்கிறேன்!
இப்படிப்பட்ட நல்லிதயங்களின் மேலா நான் இத்தனை நாள் துயரங்களின் பாரங்களை ஏற்றி வைத்திருக்கிறேன்? தொலைக் காட்சித் தொடர்களை விடவும் அழுவாச்சி காவியங்களை நான் இங்கி அரங்கேற்றி இருக்கிறேன் என்று பலர் சொல்லியபோதும் நான் சிந்திக்காமல் இருந்து விட்டேன் என்பதை இன்றெண்ணிப் பார்த்து வருந்தி இருந்தபோதுதான் அண்ணன் சிபி அவர்களின் அன்பான ஆலோசனை கிடைத்தது!
"துயரங்கள் வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கலாம்! ஆனால் துயரங்கள் மட்டுமே வாழ்க்கை அல்ல! வாழ்வின் ஒவ்வோர் பக்கத்திற்கும் சென்று பார்த்து வாழ வேண்டும்! பிரிவுகளின் துயரமே நிரந்தரமாகிவிடலாகாது!
புதுப் புது உறவுகளின் வரவுகளே வாழ்வை மகிழ்ச்சிகரமானதாக்கும்!
பழையன மறத்தலும் புதியன நினைத்தலும் வாழ்வை களிப்புடையதாக்கும்!" என்ற அவரது அன்பான ஆலோசனையால் சில கணங்கள் சிந்தித்து
இனி துயரங்களின் சுவடுகள் நிறைந்த பாலைத் திணையை - கும்மிகளின் எல்லை தொடும் "கும்மித் திணை" யாக்கி வாசிப்பவர்களின் மனதை, எண்ணத்தை இலேசாக்கி வாய்விட்டுச் சிரித்துச் செல்லும்படியாக கும்மிப் பதிவுகள் மட்டுமே இடுவது என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததோர் தீர்மானத்தை இந்த இனியதொரு நாளில் எடுத்திருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறேன்!
இனி "பாலைத் திணை" - "பிரிவும் பிரிவின் நிமித்தமும்" என்பதை அழித்து விட்டு "கும்மித் திணை" - கும்மியும் கும்மி நிமித்தமும் என்றே எழுதவிருக்கிறேன்!
இனி எனது வலைப் பூ பாலை நிலம் அல்ல!
அது ஒரு நகைச்சுவைச் சோலைவனம்!
கும்மித் திணை,
காயத்ரி!
28 பின்னூட்டங்கள்:
பாலைத்திணை என வறண்ட பூமியை செழிப்பாக்கும் பொருட்டு கும்மித்திணை ஆக்கத் துணிந்த டாக்டர் காயத்ரிக்கு எங்களது பணிவான வாழ்த்துக்கள்...
நடுராத்திரி பதிவை போட்டு கும்மக்கூட வாய்ப்புத் தர சங்கத்து 'தள'யைக் கண்டிக்கிறோம்....
என்னம்மா கலாய்ச்சுருக்கீங்க நம்ம காயத்ரி அக்காவா பாவம் அவங்க :)))))
//தமிழ் பிரியன் said...
பாலைத்திணை என வறண்ட பூமியை செழிப்பாக்கும் பொருட்டு கும்மித்திணை ஆக்கத் துணிந்த டாக்டர் காயத்ரிக்கு எங்களது பணிவான வாழ்த்துக்கள்...
//
தமிழ் என்னங்க இன்னுமா பிரியல சாரி புரியல :)))
//ஆயில்யன். said...
//தமிழ் பிரியன் said...
பாலைத்திணை என வறண்ட பூமியை செழிப்பாக்கும் பொருட்டு கும்மித்திணை ஆக்கத் துணிந்த டாக்டர் காயத்ரிக்கு எங்களது பணிவான வாழ்த்துக்கள்...
//
தமிழ் என்னங்க இன்னுமா பிரியல சாரி புரியல :)))//
தல, இது கூட பிரியாதா? கலாய்த்தல் திணை ஆரம்பித்ததே இதுக்கு தானே.... ;) ;)
ஒப்பாரிய எங்கே வேணுமின்னாலும் வெச்சுக்குங்க. ஆனா முன்னாடியே சொல்லிருங்க, அப்போதான் எஸ்கேப் ஆக வசதியா இருக்கும். ஒரு வருஷம் ஆகிப்போச்சா? நல்லா இருங்க..
//என்னம்மா கலாய்ச்சுருக்கீங்க நம்ம காயத்ரி அக்காவா பாவம் அவங்க //
ஆயில்யன்,
கலாய்ச்சதில்லைங்க இந்தப் பதிவு!
அவங்களே கலாய்த்தல் திணைல போடுங்கன்னு சொல்லி, பஸ்ல போய்கிட்டிருக்கும்போது சொல்ல சொல்ல நான் ஒரு வார்த்தை விடாம அப்படியே எழுதி வெச்சி போட்ட பதிவுங்க இது!
:))
வாழ்த்துக்கள்....
//கடந்த ஒரு வருடமாக "பிரிவும் பிரிவின் நிமித்தமும்" என்ற துயரத்தின் வலிகளையே என் கவிதைகளில் வாசித்து துயரங்களை தத்தமது நெஞ்சங்களில் பாரங்களாய் ஏற்றிக்கொண்ட இதயங்களுக்கு எனது நன்றியினை இன்று தெரிவித்துக் கொள்கிறேன்!//
என்னாது....
அப்ப எதையுமே படிக்காம பின்னூட்டம் போட்டுட்டு போன எனக்கு, மைபிரண்டு, கோபிக்கெல்லாம் எங்க நன்றி....
//"துயரங்கள் வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கலாம்! ஆனால் துயரங்கள் மட்டுமே வாழ்க்கை அல்ல! வாழ்வின் ஒவ்வோர் பக்கத்திற்கும் சென்று பார்த்து வாழ வேண்டும்! பிரிவுகளின் துயரமே நிரந்தரமாகிவிடலாகாது!
புதுப் புது உறவுகளின் வரவுகளே வாழ்வை மகிழ்ச்சிகரமானதாக்கும்!
பழையன மறத்தலும் புதியன நினைத்தலும் வாழ்வை களிப்புடையதாக்கும்!" //
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
இதுக்கே பெருசா ஒப்பாரி வச்சு அழணும் போலருக்குது :))
//என் பிறந்த நாள் அன்று (என்)வரலாறு காணாத அளவில் தொலைபேசி அழைப்புகள் வாயிலாகவும், பதிவுகளின் வாயிலாகவும் வந்த வாழ்த்துக்களின் எண்ணிக்கையில் மலைத்துப் போயிருக்கிறேன்!//
எதுக்கும் பதில் சொல்ல மட்டும் தோணலைல்ல :))
//இனி "பாலைத் திணை" - "பிரிவும் பிரிவின் நிமித்தமும்" என்பதை அழித்து விட்டு "கும்மித் திணை" - கும்மியும் கும்மி நிமித்தமும் என்றே எழுதவிருக்கிறேன்!//
அப்படியே காயத்ரி என்ற பெயரையும் காயசிரி என்று மாற்றிக்கொண்டால் அந்த பேருக்கு புண்ணியாமாய் போகும்.. :))
//ILA said...
ஒப்பாரிய எங்கே வேணுமின்னாலும் வெச்சுக்குங்க. ஆனா முன்னாடியே சொல்லிருங்க, அப்போதான் எஸ்கேப் ஆக வசதியா இருக்கும். ஒரு வருஷம் ஆகிப்போச்சா? நல்லா இருங்க..//
ரிப்பீட்டே... :))
(குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இந்த வார்த்தையை சொல்லலைன்னா தூக்கம் வராது.. அதான் :) )
கும்மி திணைக்கு வாழ்த்துகள்...
//அலுவலகப் பணிகளுக்கிடையிலும்//
இதை வன்மையாக கண்டிக்கிறேன்.
வாழ்த்துக்கள்...;)
//கடந்த ஒரு வருடமாக "பிரிவும் பிரிவின் நிமித்தமும்" என்ற துயரத்தின் வலிகளையே என் கவிதைகளில் வாசித்து துயரங்களை தத்தமது நெஞ்சங்களில் பாரங்களாய் ஏற்றிக்கொண்ட இதயங்களுக்கு//
ஏற்றி விட்டதை தாங்கிக்கொண்டுனு சொல்லுங்க...
காயத்ரிக்கு எதிரான பதிவு
நான் இதனை வன்மையாக கண்டிக்கிறேன்...
கும்மித்திணை என்கிற பெயர் கலாய்த்தல் திணையை விட நல்லாயிருக்கு தல..
தல.. said...
\\\//என்னம்மா கலாய்ச்சுருக்கீங்க நம்ம காயத்ரி அக்காவா பாவம் அவங்க //
ஆயில்யன்,
கலாய்ச்சதில்லைங்க இந்தப் பதிவு!
அவங்களே கலாய்த்தல் திணைல போடுங்கன்னு சொல்லி, பஸ்ல போய்கிட்டிருக்கும்போது சொல்ல சொல்ல நான் ஒரு வார்த்தை விடாம அப்படியே எழுதி வெச்சி போட்ட பதிவுங்க இது///
உண்மையா தல...
அப்ப காயத்ரிக்கு வாழ்த்துக்கள்...
(உங்க விதி யார் மாத்த முடியும்)
//தேர்வுக்கான ஆயத்தப் பணிகளின்//
பத்தாங்கிளாஸை எத்தனை வருசமாப் படிப்பீங்க?
அட என்ன மாமா.. இப்படி சப்புனு முடிச்சிட்டிங்க.. இதெல்லாம் கேட்டதும் பாஸ்வேர்ட் குடுத்திருந்தா இப்படி லைட்டா முடிச்சிருக்கலாம். நீங்க எவ்வளவு மிரட்டியும் (அதாவது கெஞ்சியும்:P)கடைசி வரைக்கும் அந்த கடவு சொல்லை தரவே இல்லை. அதனால இன்னும் கொஞ்சம் பெட்டரா பண்ணி இருக்கலாம். :) யே தில் மாங்கே மோர் :P
//அவங்களே கலாய்த்தல் திணைல போடுங்கன்னு சொல்லி, பஸ்ல போய்கிட்டிருக்கும்போது சொல்ல சொல்ல நான் ஒரு வார்த்தை விடாம அப்படியே எழுதி வெச்சி போட்ட பதிவுங்க இது//
நம்பாதீங்க அ அ அ அ அ அ அ...
பஸ்ல போய்ட்டிருக்கும்போது.. ன்ற வரைக்கும் தான் உண்மை.. மத்ததெல்லாம் அன்னாருடைய அபரிமிதமான கற்பனா வளத்தின் பிரதிபலிப்பு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். :)
என்னால் கொண்டாட இயலாமல் போன என் பதிவின் பிறந்தநாள் விழாவை என் சார்பாகக் கொண்டாடிய ரத்தத்தின் ரத்தம், கொள்கைக் குன்று, கும்மித்திலகம், உடன்பிறவா உடன் பிறப்பு.. எனதெருமை ச்சீ.. எனதருமை அண்ணன் நாமக்கல் சிபிக்கு என் மனமார்ந்த நன்றிகளை காணிக்கையாக்குகிறேன்..
(சோடா ப்ளீஸ்ஸ்)
//டாக்டர் காயத்ரிக்கு எங்களது பணிவான வாழ்த்துக்கள்...//
இத இத இதத்தான் எதிர்பார்த்தேன்.. நன்றி தமிழ்ப்பிரியன். :)
//பத்தாங்கிளாஸை எத்தனை வருசமாப் படிப்பீங்க?//
இளா அண்ணா.. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
//காயத்ரி said...
என்னால் கொண்டாட இயலாமல் போன என் பதிவின் பிறந்தநாள் விழாவை என் சார்பாகக் கொண்டாடிய ரத்தத்தின் ரத்தம், கொள்கைக் குன்று, கும்மித்திலகம், உடன்பிறவா உடன் பிறப்பு.. எனதெருமை ச்சீ.. எனதருமை அண்ணன் நாமக்கல் சிபிக்கு என் மனமார்ந்த நன்றிகளை காணிக்கையாக்குகிறேன்..
(சோடா ப்ளீஸ்ஸ்)//
சனிக்கிழமை சிக்கன் பிரியாணி சாப்பிட்டா புது தெம்பு வருதுல? :P
///காயத்ரி said...
//டாக்டர் காயத்ரிக்கு எங்களது பணிவான வாழ்த்துக்கள்...//
இத இத இதத்தான் எதிர்பார்த்தேன்.. நன்றி தமிழ்ப்பிரியன். :) ///
யக்கா! கமெண்ட் போட்டு பத்து நாளாச்சி... இன்னும் சொன்னபடி கமிஷன் வரலையே?.,....