016 : கலாய்க்கப்பட வேண்டுமா?
6:06 PM | Author: நாமக்கல் சிபி
கலாய்த்தல் திணை உறுப்பினர்களால் கலாய்க்கப்பட விழைவோரின் விருப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க விரும்புவோர் தங்கள் பெயர், இருப்பிடம், வலைப்பூ முகவரி ஆகியவற்றை பின்னூட்டங்கள் மூலம் தெரியப் படுத்தலாம். விண்ணப்பங்களின் வருகை அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும். ஏற்கனவே கலாய்க்கப் பட்டதில் முன் அனுபவம் உடையவர்கள் அதிக தகுதி உடையோராய்க் கருதப் படுவர். வயது வித்தியாசமின்றி ஒற்றைச் சாரள முறையில் அனைவரும் கலாய்க்கப்படுவர். கலாய்க்கப்பட இருக்கும் வாரம் ஒரு வாரம் முன்னதாக தனி பின்னூட்டம் மூலம் அவரவர் பதிவுகளில் தெரிவிக்கப்படும்.

ரத்தக் கொதிப்பு, முன் கோபம், பின் கோபம் இருப்பவர்கள் விண்ணப்பிப்பதை தவிர்க்கவும். அடுத்தவர்களுக்காக விண்ணப்பம் இடுதலையும் தவிர்க்கவும்.
|
This entry was posted on 6:06 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

12 பின்னூட்டங்கள்:

On Wed Nov 01, 06:23:00 PM , கோவி.கண்ணன் [GK] said...

ம் நல்ல ஐடியா !

வாரம் ஒருவரை செலக்ட் பண்ணி நீங்களே கலாய்க்க ஆரம்பிங்க !
நாங்க வந்து பின்னூட்டத்தில் அவர்களை கலாய்க்கிறோம் !

இந்தவார கலாய்த்தலில் சிக்கியவர் : திருவாளர் சம் ஒன் ! என்று வாரம் ஒரு பதிவரை போட்டு தாக்கலாம்!

:)

 
On Wed Nov 01, 06:28:00 PM , நாகை சிவா said...

அது எல்லாம் முடியாது. எங்க தல க்காக நான் தான் வந்து கேட்பேன். அவர் கண்டிப்பாக கலாய்க்கப்பட வேண்டியவர். அவருக்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

 
On Wed Nov 01, 06:31:00 PM , நாமக்கல் சிபி said...

கோ.வி, நாகை சிவா!

உங்கள் முதலிரண்டு விண்ணப்பங்களும் கேட்கப்பட்ட தகவல்கள் இல்லாமல் வந்துள்ளன.

முறையாக முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும்.

:))

 
On Wed Nov 01, 06:32:00 PM , குமரன் (Kumaran) said...

நான் கேட்காமலேயே இந்த வாரம் கலாய்க்கப்படும் திருவாளராக என்னைத் தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி. :)

 
On Wed Nov 01, 06:32:00 PM , நாமக்கல் சிபி said...

//
இந்தவார கலாய்த்தலில் சிக்கியவர் : திருவாளர் சம் ஒன் ! என்று வாரம் ஒரு பதிவரை போட்டு தாக்கலாம்!
//

இது நல்ல ஐடியா கோவியாரே! இதையும் கன்சிடர் பண்ணுறேன்.

ஆலோசனைக்கு நன்றி!

 
On Wed Nov 01, 06:34:00 PM , நாமக்கல் சிபி said...

//எங்க தல க்காக நான் தான் வந்து கேட்பேன். அவர் கண்டிப்பாக கலாய்க்கப்பட வேண்டியவர்.//

நாகையாரே!

தலையிடம் அதிகார பூர்வ கடிதம் பெற்றிருப்பின் நீங்கள் அவர் சார்பாக விண்ணப்பிக்கலாம்.

இன்னொன்று இந்த விண்ணப்பமெல்லாம் எப்போதாவது கலாய்க்கப்பட விரும்புவோருக்கு மட்டுமே! :))
தலைக்கு அதெல்லாம் தேவை இல்லை என்றே நினைக்கிறேன்.

 
On Wed Nov 01, 06:37:00 PM , நாமக்கல் சிபி said...

இது வரை சீட்டு குலுக்கம் முறையில் தேர்ந்தெடுத்தோம். இருப்புனும் உங்கள் பெயர் பல முறை வந்து கூட கலாய்க்க முடியாமல் நீங்கள் ஆன்மீகப் பதிவுகளே போட்டதால் இவ்வாரம் உங்கள் விண்ணப்பம் இன்றியே தேர்ந்தெடுக்கப் பட்டீர்கள்.

விண்ணப்பம் மூலம் விருப்பமுடையவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை அடுத்த வாரம் முதல் அமலுக்கு வருகிறது,

மேற்கண்ட உங்கள் விண்ணப்பம் பரிசீலிக்கப்படு அடுத்த வாரமும் நீங்களே கூட தேர்ந்தெடுக்கப் படலாம்.

:))

 
On Wed Nov 01, 06:52:00 PM , ILA (a) இளா said...

முதல் விண்ணப்பம் என்னுடையதாகவே இருக்கட்டுமே..
பெயர் :இளா
இருப்பிடம்:கொங்கு மண்டலம்/பெங்களூர்
வலைப்பூ முகவரி: http://vivasaayi.blogspot.com
http://varappu.blogspot.com

 
On Wed Nov 01, 07:24:00 PM , நாமக்கல் சிபி said...

அடுத்து நம்மையும் ஆட்டத்துல சேர்த்துக்கோங்க :-)

பெயர்: வெட்டிப்பயல் (பாலாஜி)
இடம்: பாஸ்டன் (தற்போது)/ பெங்களூர்
வலைப்பூ முகவரி: http://vettipaiyal.blogspot.com/

 
On Thu Nov 02, 12:07:00 AM , ALIF AHAMED said...

/./
என்னன்னு சொல்றது? காமெடியா கலாய்க்கறதுன்னா எனக்கு பிடிக்கும். ஆனா கலாய்க்கறது நானா இருக்கணும்.
/../

அதுக்காக..:)


மின்னல்
யு எ இ
http://www.anony-anony.blogspot.com/

 
On Thu Nov 02, 12:51:00 PM , மதுமிதா said...

கலாய்த்தல் திணை உலகெங்கிலும் புகழ் பெற வாழ்த்துகள்.

இதெல்லாம் தனிக்கலைம்மா.

கலாய்க்கவே தெரியாத (என்னைப் போன்ற)வர்கள் என்ன செய்யணும் சிபி

 
On Fri Nov 03, 10:43:00 AM , நாமக்கல் சிபி said...

//கலாய்க்கவே தெரியாத (என்னைப் போன்ற)வர்கள் என்ன செய்யணும் சிபி
//
வெரி சிம்பிள்.

//விண்ணப்பிக்க விரும்புவோர் தங்கள் பெயர், இருப்பிடம், வலைப்பூ முகவரி ஆகியவற்றை பின்னூட்டங்கள் மூலம் தெரியப் படுத்தலாம்.
//

இந்த மாதிரி ஒரு அப்ளிகேஷன் போடுங்கள். உங்களுக்காக ஸ்பெஷலா ஒரு மாதம் கோர்ஸ் நடத்தறோம். அப்புறம் நீங்க பி.ஹெச்.டியே வாங்கலாம்.

:))