தனிமனிதத் தாக்குதல் என்று அறியப்படும் பதிவுக்ளை நிரல்கள் மூலம் வடிகட்டித் தடைசெய்யும் தமிழ்மண நிர்வாகமே!

திட்டமிட்டு, ஒவ்வொரு தமிழ்மண வாசகர்களையும் கொன்றொழிப்பது என்ற தீய நோக்கத்துடன், வாசிப்பவர்களை, கேட்பவர்களை, அறிபவர்களையெல்லாம் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டும் வகையில் கொஞ்சம் கூட ஈவு இரக்கமின்றி, குறைந்தபட்ச மனிதாபிமானமும் இன்றி கொலை பாதக வெறியுடன் மீண்டும் மீண்டும் என் பதிவைப் பார், என் பாடலைக் கேள் என்று இடப்பட்டு வரும் இதுபோன்ற இடுகைகளை தமிழ்மண நிர்வாகம் தட்டிக் கேட்கவும், தடுத்து நிறுத்தவும் கொஞ்சமும் அக்கறையின்றி வாசகர்கள் எக்கேடு கெட்டுப்போனால் எங்களுக்கென்னவென்று சும்மா கைகட்டி வேடிக்கை பார்க்கும் மர்மம் என்ன? தமிழ்மணம் மனிதாபிமானத்தை இழந்துவிட்டது என்று பொருளா? அலல்து அரசின் மக்கட்தொகைக் குறைப்புத் திட்டத்தில் தமிழ்மணமும் பங்கேற்கிறதா?

என்னைப் போல எண்ணற்ற அப்பாவி வாசகர்கள் மீது சிறிதளவேனும் இரக்கம் கொண்டு தமிழ்மண நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு எங்களைக் காப்பாற்ற, எங்கள் இன்னுயிரைக் காப்பாற்ற, எங்கள் செவிகளைக் காப்பாற்ற தாயுள்ளத்தோடு நடவடிக்கை எடுக்கும் நம்புகிறேன்!

இப்படிக்கு,
அளவிலா குசும்புடன்,
நாமக்கல் சிபி
தமிழ்மணத்துலே இது 10 வாரம் போல!



சொல்லச் சொல்லக் கேக்காம அந்த பாட்டை அத்தனை முறை கேட்டு இனிமே வாழ்க்கைல பாட்டே கேக்கக் கூடாதுன்னு கோவமா விட்டெறிஞ்சதுல ரங்காவோட ஹெட்ஃபோனு டமால்! பாட்டுக் கேக்கும் திட்டமெல்லாம் இனி பனால்!

பின் குறிப்பூ: ரங்காவின் காதுக்கு இன்னும் எந்த சேதாரமும் இல்லையாம்! (அப்படின்னு நினைச்சிகிட்டிருக்காரு இன்னமும்)
ம்ஹூம்! இவங்களும் எல்லாப் பக்கமும் போயி பின்னூட்டத்துல சொல்லிகிட்டேத்தான் இருக்காங்க!

அதான் ஏதோ! நம்மால முடிஞ்சது ! ஒரு பதிவா போட்டு எல்லாத்துக்கும் சொல்லிடலாம்னு!

எத்தனை பிளாக்லதான் போயி தனித்தனியா அவங்களால பின்னூட்டம் போட முடியும்! அதான் மொத்தமா எல்லாருக்கும் இங்கே சொல்லிடறேன்!



உங்கள் வலைப்ப்திவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி.

உங்கள் இணைப்பை அங்கன போயி பார்த்துக்குங்க பார்க்கவும்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

வலைப்பூகள் குழுவினருக்கு ஒரு கேள்வி?
அங்கே கும்மி அனுமதிப்பீங்களா? இல்லைன்னா உங்களுக்கு நம்ம ஆதரவு இல்லைங்க! நீங்க வேற இடம் பார்க்கலாம், ஐயா படத்துல வர சரத்குமார் கணக்கா நீங்க நினைச்சிக்கலாம்!
சரியே என்று வாதிடுபவர் : பாலமன் ஆப்பைய்யா
தவறு என்று வாதிடுபவர்: திண்டுக்கல் லியோனி

நடுவர் : "பேன்" சந்தோஷ்!

மகா ஜனங்களே கும்ம வாங்க!

சந்தோஷ் ஆவலோட காத்துகிட்டு இருக்காரு!

(யாருப்பா அங்கே! நடுவர் "பேன்" சந்தொஷ்க்காக அந்த ஃபேனை போட்டு விடுங்கப்பா)
போளி 09/02/09
9:28 AM | Author: நாமக்கல் சிபி
எல்லாரும் அவியல், ஆனியன், ஊத்தப்பம், தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல், பிரியாணி, குஸ்கா..இன்னமும் என்னென்னமோ பேர்ல எழுத ஆரம்பிச்சிட்டாங்க!

நானும் யோசிச்சிப் பார்த்தேன்!

போளி - இந்த டைட்டில் எப்பவுமே சூடா இருக்கும்!

அதனால இனிமே நானும் "போளி" என்ற தலைப்புல வாராவாரம் எழுதப் போறேன்!

கிகிகி!
ஏ! திட்டாதீங்கப்பா!
9:57 PM | Author: நாமக்கல் சிபி

எங்களுக்கெதுனா பிரச்சினைனா
உங்களைக் குறிப்பிட்டுத் திட்டுறமா?
அப்புறம் ஏன்
உங்களுக்கொரு பிரச்சினைன்னா
எங்களை வம்புக்கு இழுக்குறீங்க?

ம்ஹூம்! இந்த மனுஷ ஜென்மங்களுக்குத்தான் எப்பத்தான் உரைக்குமோ!
மன் மோகன் : "கிழக்கு செவக்கையிலே....."

ராஜபக்சே: "நான் கீரை அறுக்கையிலே...."

மன்மோகன்: "அந்த கரும்பைக் கடிக்கையிலே..."

ராஜபக்சே: " நான் பழசை நினைக்கையிலே...."

தமிழன்: "பல்லறுவா பட்டுடுச்சே!....!" :((

காமெடி 2009
9:09 AM | Author: நாமக்கல் சிபி
எனவே, இந்தியப் பேரரசு என்ன முடிவெடுக்கிறது என்பதையும் -இலங்கை அரசு அப்பாவித் தமிழர்களைப் படுகொலைக்கு ஆளாக்குவதை நிறுத்தப் போகிறதா இல்லையா என்பதையும் அறிந்திட சில நாட்கள் பொறுத்திருப்பதுதான் நலம் என்றும் - நலமான முடிவுக்கு இந்தியப் பேரரசை நாம் நம்பியிருக்கலாம் என்றும் கருதுகிறேன் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

"தலைவா! சொல்லிட்டீங்கல்ல! எத்தனை வருஷம் வேணாலும் காத்திருக்கலாம்தான்!"

(அடுத்த தேர்தல் எப்போ தலைவா! நாங்க அதுக்காக காத்துகிட்டிருக்கோம்!)
செய்தி

"மத்திய வெளியுறவுத் துறை மந்திரியை நிச்சயம் இலங்கைக்கு அனுப்புவோம்"
- கலைஞரிடம் பிரதமர் மன்மோகன் சிங்க் உறுதி அளித்தார்!

வேதனை

"இன்னுமாடா இவங்களை இந்த ஊரு நம்பிகிட்டிருக்கு"
என்று எகத்தாளம் பேசுகிறார்
இலங்கை ராணுவத் தளபதி