எனது தாயத்து என்னும் முந்தைய கலாய்த்தலில் இளா அவர்கள் கேட்டுக் கொண்டபடி முழுப்பாடலும் இங்கே!
படம் : மகாதேவி
இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர் : டி.எம்.சௌந்தர்ராஜன் (TMS)
தாயத்து தாயத்து தாயத்து தாயத்து
பலர் சந்தேகம் தீர்த்து விட சந்தோசமான ஒரு
சங்கதியை சொல்ல வரும் தாயத்து
சில சண்டாளர் வேலைகளை ஜனங்களின் மத்தியிலே
தண்டோரா போட வரும் தாயத்து ..
அய்யா தாயத்து தாயத்து
அம்மா தாயத்து தாயத்து
வில்லில்லா மனுசருக்கு பல்லெல்லாம் நல்லாருக்கு
சொல்லெல்லாம் விஷமிருக்கு கேளுங்கோ
வில்லில்லா மனுசருக்கு பல்லெல்லாம் நல்லாருக்கு
சொல்லெல்லாம் விஷமிருக்கு கேளுங்கோ
இது நல்லார்க்கு பொல்லார்க்கு அல்லா நடுவேருக்கு
எல்லாம் விளக்கி போடும் பாருங்கோ
லேலோ ... தாயத்து தாயத்து
ஆவோ ... தாயத்து தாயத்து
பொம்பளைங்க பித்துக்கொண்ட பொடவை பக்தருக்கு
புத்தியை புகட்ட வந்த தாயத்து
ஒரு செம்புதகட்டை பிரிச்சா சிறையில் மறைந்திருக்கும்
சேதிகளை சொல்லும் இந்த தாயத்து
அய்யா தாயத்து தாயத்து
அம்மா தாயத்து தாயத்து....
( அய்யா இதுல வசியம் பண்ண்ர வேலை இருக்கா?? )
மந்திரம் வசியமில்லை மாயாஜால வேலை இல்லை
வாழ்க்கைக்கு ரொம்ப ரொம்ப அவசியம்
இதில் மறைஞ்சிருக்கு அரிய பெரிய ரகசியம்
( ஏம்பா .. பணம் வருமானத்துக்கு ஏதாவது இருக்கா இதிலே? )
ஒடம்ப வளைச்சி நல்ல உழைச்சி பாரப்பா
அதில் உனக்கும் உலகத்துக்கும் நன்மை இருக்கு
சும்மா ஒக்காந்து இருந்து கிட்டு கேக்குற பணத்துக்கு
ஆபத்து இருக்கு அது உனக்கெதுக்கு
தாயத்து தாயத்து .. அம்மா தாயத்து தாயத்து
( ஏய்யா .. இதால பொம்பளைங்களை மயக்க முடியுமா? (ஹே ஹே ஹே ) கண்ணும் கருத்துமே பெண்ணை கவர்ந்திடும்
காதலும் வாழ்வும் பொறந்துடும்
கண்டா கண்ட பக்கம் திரிஞ்சா கையும் காலும் வாழ்வும்
துண்டு துண்டா தொங்கும்படி நேர்ந்துடும்
( தம்பி அதெல்லாம் செய்யாது ,... இது வேற.. )
தாயத்து தாயத்து அம்மா தாயத்து தாயத்து...........
|
This entry was posted on 9:16 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
11 பின்னூட்டங்கள்:
நம்ம வேண்டுகோளை ஏற்று இந்த பாடலை முழுமையாக அளித்த தளபதிக்கு நன்றி
நல்லா இருங்க பாடல்
இனிய சிபி,
இரண்டு செய்திகள்.
1.
பாடலாசிரியர்:
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
இது உங்களுக்கும் தெரிந்திருக்கும், விடுபட்டுள்ளதே என்ற எண்ணத்தில் குறிப்பிடுகிறேன்.
2.
//*வி*ல்லில்லா மனுசருக்கு பல்லெல்லாம் நல்லாருக்கு//
இது *தி*ல்லில்லா என்றிருக்கவேண்டும். தட்டச்சுப்பிழையென்றே நினைக்கிறேன்.
கொசுறு:
தில்லில்லா மனுசருக்கு அடி முடிந்ததும், 'சேட்கேவாஸ்தே மாஃப்கரோ' - வசனம் வருமே :)
'சேட்டுக்காக மன்னித்துக்கொள்' - இதுதான் பொருள்.
அன்புடன்
ஆசாத்
/./
நம்ம வேண்டுகோளை ஏற்று இந்த பாடலை முழுமையாக அளித்த தளபதிக்கு நன்றி
/./
அது என்ன நம்ம நாங்க எங்க கேட்டோம்...:)
தள இளா இந்த பாட்ட போட சொல்லி ரெண்டு தடவ சொன்னாரு..
நீ ஒரு தடவ தான் போட்டு இருக்க அந்த இன்னொன்னு எங்கே..????
(அதான் இதுனு சொல்ல கூடாது...)
இப்பாடலை ஒலி வடிவில் கேட்கும் ஆவலைத் தூண்டியுள்ளது தங்கள் பதிவு. நன்றி.
/./
கைப்புள்ள said...
இப்பாடலை ஒலி வடிவில் கேட்கும் ஆவலைத் தூண்டியுள்ளது தங்கள் பதிவு
/./
இளா வேண்டுகோளை ஏற்று இந்த பாடலை முழுமையாக அளித்த தளபதி.....
தல உன் ஆவலையா புறக்கணிப்பார்...???
"மணந்தால் மகாதேவி! இல்லையேல் மரணதேவி!" என்னும் பி.எஸ். வீரப்பாவின் அட்டகாசமான வசனங்கள் கொண்ட அருமையான எம்.ஜி.ஆர். படப் பாடலை போட்டதற்கு மிக்க நன்றி, சிபியாரே!
'காக்கா, காக்கா மை கொண்டுவா!
காடைக்குருவி மலர் கொண்டுவா!'
ன்னு ஒரு பாட்டு வருமே, அதையும் போடுங்கள்!
:)
"பொம்பளைங்க பித்துக்கொண்ட பொடவை பக்தருக்கு
புத்தியை புகட்ட வந்த தாயத்து
ஒரு செம்புதகட்டை பிரிச்சா சிறையில் மறைந்திருக்கும்
சேதிகளை சொல்லும் இந்த தாயத்து"
அரசியல்வாதி,சாமிமார்,பொலிசார் எல்லோருக்கும் கட்டவேண்டியது. இது ;மிக நல்ல காலத்துக் கெல்லாம் பொருந்தும் பாடல்.
நன்றி சிபி!
யோகன் பாரிஸ்
அன்பு ஆசாத்,
//'சேட்கேவாஸ்தே மாஃப்கரோ' //
"பேட்கேவாஸ்தே மாஃப்கரோ" என்பதுதான் சரி. "பேட்" என்றால் வயிறு. "வயிற்றுப் பிழைப்புக்காக" என்று வரும்.
MP3 file எங்கே upload செய்யவேண்டும்?
ஓணம் வாழ்த்துக்கள்
9தாரா சொல்ல சொன்னாங்க