ஜூலை மாதப் போட்டியில் முதலாவதா வந்த நிலா மிஸ் "அவுட் ஆஃப் சிலபஸ்ல" தலைப்பு கொடுத்துடுவேன்னு சொல்லி இருந்தாங்க!
நாங்க காலேஜ்ல படிக்கும்போது கொஸ்டீன் பேப்பர்ல சிலபஸ்குள்ளயே கேள்விகள் இருந்தாலும் கூட நாங்க எழுதற விடைகள்தான் அவுட் ஆஃப் சிலபஸ்ல இருக்கும்.
உதாரணமா ரெண்டு சொல்றேனே!
நான் காலேஜ்ல கம்ப்யூட்டர் சயின்ஸ் டிபார்ட்மெண்ட். அப்போவெல்லாம் இரண்டு மார்க்கு கேள்விகளுக்கு விடை எழுதுவது எப்படின்னு எங்களுக்குள்ளே ஒரு ரூல்ஸ் வெச்சிருப்போம்.(கொத்தனாரோட பின்னூட்ட விதிகள் மாதிரி). அதாவது வாட் ஈஸ்னு ஆரம்பிக்குற கேள்வில இருந்து முன் பாதியிட விட்டிடணும். ("வாட் ஈஸ்" என்ற பகுதியை). அதுக்கப்புறம் இருக்கும் வார்த்தையை எடுத்து அதனோட "ஈஸ் எ டெக்னிக் இன் விச்" அப்படிண்ணு சேர்த்துக்கனும். அதுக்கப்புறம் என்ன? நமக்குத் தோணுறதை எழுதிக்கலாம். எழுதி முடிச்சவுடன் முதல் வரியை மட்டும் மறக்காம கலர் ஸ்கெட்ச் பேனாவுல அண்டர் லைன் பண்ணிடனும்.
இப்படித்தான் What is Pipelining? என்ற கேள்விக்கு நான் எழுதும் பதில் கீழே.
முதல் பகுதியை எடுத்துடணும். அப்போ Pipelining மட்டும் மிஞ்சும். அது கூட "Is A Technique In Which" சேர்த்து முதல் வரி தயார் பண்ணியாச்சு.
Pipelining is a technique in which all the pipes are arranged in a single and proper line.
இப்படித்தாங்க நம்ம பதில் இருக்கும்.
அதே மாதிரி இன்னொரு கேள்வி. இது ஃபில் இன் த பிளேங்க்ஸ் டைப்.
Q : Programming Languages Are Developed From _____ To ______
ரெண்டு டேஷ்லயும் வருஷத்தை எழுதணும்னு நினைக்கிறேன்.
நம்ம பதில் பார்த்து முதலில் மேடமே குழம்பிட்டாங்க. என்னடா இது ஏடா கூடமா என்னவோ எழுதி வெச்சிருக்கானேன்னு. அப்புறமா நம்ம நண்பர் ஒருத்தரை கூப்பிட்டு கேட்டவுடந்தான் அவங்களுக்கே வெளங்கிச்சாம்.
Ans : Programming Languages Are Developed From IIIrd Sem To Vth Sem
(நான் எழுதினதுக்கு அர்த்தம் புரோகிராமிங் லாங்குவேஜஸ் என்கிற பாடத்தில் மூன்றாவது செமஸ்டரில் வைத்த அரியரை 5வது செமஸ்டரில்தான் பாஸ் செய்தேன் என்பது)
இந்த மாதிரி நம்ம நிலா மிஸ் ஆகஸ்ட் மாதத்துக்கான தலைப்பு உறவுகள்னு குடுத்துட்டாங்க. ஏடாகூடாம கலாய்ச்சி எழுதலைன்னா எப்படி? சாய்ஸ் வேற கிடையாதாம். நம்ம மிஸ்தான! உரிமையா கலாய்க்க வேண்டியதுதான். இது மெயின் பிச்சர் கிடையாது. அதுக்கான டிரைய்லர்தான் இது.
|
This entry was posted on 11:30 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
25 பின்னூட்டங்கள்:
:))))))))))
What is Client-Server Architecture?
Client-Server Architecture is an architecture where there is a client and a server.. Server serves thae client and client gets service from server..
அவ்வளவு தாங்க.. ரெண்டு மார்க்குக்கு எழுதினது...அந்தப் பேப்பர்ல நான் ஜஸ்ட் பாஸ்.. 45 எப்படி வந்ததுன்னு இப்போ கூட ஆச்சரியம் தான்..
அடப்பாவிங்களா.....
//
வாட் ஈஸ்னு ஆரம்பிக்குற கேள்வில இருந்து முன் பாதியிட விட்டிடணும். ("வாட் ஈஸ்" என்ற பகுதியை). அதுக்கப்புறம் இருக்கும் வார்த்தையை எடுத்து அதனோட "ஈஸ் எ டெக்னிக் இன் விச்" அப்படிண்ணு சேர்த்துக்கனும்
//
இத இப்ப சொல்லுரீங்களே முன்னாடியே தெரிஞ்சு இருந்தா பாஸ் பண்னி இருப்போமுல்ல...:(((
//
45 எப்படி வந்ததுன்னு இப்போ கூட ஆச்சரியம் தான்
//
இதே பதிலை கேள்வி நம்பரை மட்டும் மாத்தி 23 தடவை எழுதிருப்பிங்க.:::))
//இதே பதிலை கேள்வி நம்பரை மட்டும் மாத்தி 23 தடவை எழுதிருப்பிங்க.:::)) //
மின்னலு, சின்ன புள்ளயாவேக்கீறயே.. அதுகண்டி பத்தாது..
ஒவ்வொரு தபா எய்த சொல வேற வேற வார்த்தைக்கு கலரு பூசோணும்.. அதான் தள சொல்லிகீறாரில்ல.. ஒய்ங்கா பட்சு புள்ளைங்களுக்காவது சரியா சொல்லித் தர தாவல?!!
//
இலவசக்கொத்தனார் said...
அடப்பாவிங்களா.....
//
ரெண்டு கேள்விக்கே இப்படி சொன்னா எப்படி இ கொ
பென்னுரிமைக்கு மட்டும் ரெண்டு சாம்பிள் பேட்டி போதாதுனு சொன்னிங்க......??
//
இலவசக்கொத்தனார் said...
அடப்பாவிங்களா.....
//
ரெண்டு கேள்விக்கே இப்படி சொன்னா எப்படி இ கொ
பென்னுரிமைக்கு மட்டும் ரெண்டு சாம்பிள் பேட்டி போதாதுனு சொன்னிங்க......??
//
இலவசக்கொத்தனார் said...
அடப்பாவிங்களா.....
//
ரெண்டு கேள்விக்கே இப்படி சொன்னா எப்படி இ கொ
பென்னுரிமைக்கு மட்டும் ரெண்டு சாம்பிள் பேட்டி போதாதுனு சொன்னிங்க......??
// சிலபஸ்குள்ளயே கேள்விகள் இருந்தாலும் கூட நாங்க எழுதற விடைகள்தான் அவுட் ஆஃப் சிலபஸ்ல இருக்கும்//
அப்புறம் நமக்கு என்ன மரியாதை...
//இத இப்ப சொல்லுரீங்களே முன்னாடியே தெரிஞ்சு இருந்தா பாஸ் பண்னி இருப்போமுல்ல...:(((
//
என்ன மின்னலு..கப் வைக்கறதுக்கு கலங்கற ஃபேமிலியா நாம??
என் விடைத்தாளை பார்த்த மாதிரியே இருக்கு :-))
இதைவிட எங்க கிளாஸ்ல ஒருத்தன் பேப்பர்ல எல்லா 12 மார்க் கேள்விகளிலும் உள்ள வரி...
"..........is the main point in the main sheet and additional point in the additional sheet"
அதே மாதிரி, ஹால் டிக்கெட்ல பின்னாடி ரூல்ஸ் இருக்கிற எல்லா பாயிண்டும் கண்டிப்பாக எல்லா தியரி பரிட்சையிலும் விடைத்தாளில் இருக்கும்.
நமக்கு இந்த கதை எளுதி எனர்ஜிய வேஸ்ட் எல்லாம் பன்ன வராது...பாஸ் ஆக சான்ஸ் இருந்தா மட்டும்தான் ஆன்ஸர் பேப்பர் 2-வது பக்கத்துக்கே போகும்..ஆனா, முட்ட வாங்க கூடதுன்னு ஜாக்கிறதையா இருப்பேன்.. ஒரு தபா சரியா தெரிஞ்ச 2 மார்க் கேல்விக்கு( Yes/No கேள்விதான்) யெஸ்சுன்னு ஒரு வரியில பதில் எழுதிட்டு வந்துட்டேன்.. என்ன கோவமோ தெரியல முட்ட போட்டுட்டான்...:-(
அடங்கொப்புறானே நம்மளை மாதிரி பலபேறு இருக்காவளே !!!:)))))
வெளுத்துக் கட்டு
//உரிமையா கலாய்க்க வேண்டியதுதான். இது மெயின் பிச்சர் கிடையாது. அதுக்கான டிரைய்லர்தான் இது.//
உங்கள் விச(ய) 'பரிட்சையை' எங்களிடம் எப்பொழுது பரிட்சித்துப் பார்க்கப் போகிறீர்கள்.
முதலில் போட்ட பின்னூட்டம் வேறு இது வேறு !
உங்கள் விச(ம) பரிட்சையை எங்களிடம் எப்பொழுது பரிட்சித்துப் பார்க்கப் போகிறீர்கள். :)
//What is Client-Server Architecture?
Client-Server Architecture is an architecture where there is a client and a server.. Server serves thae client and client gets service from server..
//
இம்புட்டுதேன்!
இதே மாதிரிதானா எல்லா காலேஜ்லயும்?
ஆமா! நீங்களும் சென்னை பல்கலைக் கழகமா பொன்ஸ்?
//அடப்பாவிங்களா..... //
நாங்கள்ளாம் அப்பாவிங்க கொத்ஸ்!
//இத இப்ப சொல்லுரீங்களே முன்னாடியே தெரிஞ்சு இருந்தா பாஸ் பண்னி இருப்போமுல்ல//
அட! என்ன மின்னல்? இப்ப கூட ஒண்ணும் கெட்டுப் போயிடலை!
//இதே பதிலை கேள்வி நம்பரை மட்டும் மாத்தி 23 தடவை எழுதிருப்பிங்க//
இது கொஞ்சம் ஓவர்!
ஏதோ ஒரு கேள்வியை ரெண்டு அல்லது மூணு தபா மட்டும் வெவ்வேறு பக்கத்துல எழுதி வைப்போம்!
வார்த்தைகளை மட்டும் கொஞ்சம் கொஞ்சம் மாத்தணும்!
//அப்புறம் நமக்கு என்ன மரியாதை//
கரீட்டா சொன்னீங்க கப்பியாரே! சிலபஸ்ல இருக்குற பதிலையே எழுதிட்டா நம்மளை தொலை நோக்கு சிந்தனை இல்லாதவங்கன்னு சொல்லிடுவாங்க!
(அதாவது பக்கத்து பையனை பார்த்து காப்பி அடிச்சோமின்னு)
//என்ன மின்னலு..கப் வைக்கறதுக்கு கலங்கற ஃபேமிலியா நாம?? //
கல்லூரிப் பொன்மொழிகளே இருக்கே கப்பியாரே!
1.அரியர் இல்லாதவன் அரை மனிதன்!
2.ஆயுசு நூறு அரியர் இருநூறு!
//"..........is the main point in the main sheet and additional point in the additional sheet"
//
:)
//அதே மாதிரி, ஹால் டிக்கெட்ல பின்னாடி ரூல்ஸ் இருக்கிற எல்லா பாயிண்டும் கண்டிப்பாக எல்லா தியரி பரிட்சையிலும் விடைத்தாளில் இருக்கும்//
அப்பத்தான பையன் எல்லாத்தையும் படிச்சிருக்கான்னு தெரிஞ்சிக்க முடியும்!
//தெரியல முட்ட போட்டுட்டான்//
அட! ஒண்ணுமே தெரியாம எலெக்ட்ரிக்கல்ஸ் எஞ்சினியரிங் பேப்பர்ல ஒரே ஒரு கவுஜ மட்டும் எழுதி வெச்சேன்.
திறனாய்வு செய்யத் தெரியாத மண்டூகம்னு நினைக்கிறேன். எனக்கும் முட்டைதான் கிடைச்சுது!
//அடங்கொப்புறானே நம்மளை மாதிரி பலபேறு இருக்காவளே //
வாங்க பாண்டித்தம்பி!
நீங்களும் நம்மள மாதிரிதானா?
(நிறைய பேரோட குட்டு உடைஞ்சிடும் போல இருக்கே!)
//1.அரியர் இல்லாதவன் அரை மனிதன்!
2.ஆயுசு நூறு அரியர் இருநூறு!//
:)))))))))))))))))))
இன்னும் நாலு அள்ளி விட்டா நாலு போஸ்ட் காணும் போலிருக்கே...
அதே சிங்காரச் சென்னையின் சீர்மிகு பல்கலைக் கழகம் தான் :)