
சமீப காலமாக அனானிகளின் "உருப்பட மாட்டே, நாசமாப் பூடுவே" போன்ற சாபங்களின் காரணமாக அச்சத்தில் வெவெலத்துப் போயிருக்கும் தமிழ் வலைப்பதிவு அன்பர்களுக்காக.
மேலே கண்டவாறு சக்கரத்தை செப்புத்தகட்டில் வரைந்து அப்படியே வலைப்பூவில் மாட்டி வைக்கவும், அல்லது அதனை சிறிய செப்புத்தகட்டில் வரைந்து சிறிய தாயத்தாகச் சுருட்டியும் வலைப்பூவில் அணிந்து கொள்ளலாம்.
அனானிகளின் அட்டகாசத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விடுபட்டு நிம்மதி அடைவீர்களாக!
முக்கிய குறிப்பு:
அனானிகளுக்கு அல்வாத்தட்டு வைத்து ஈர்ப்பது போன்ற பதிவுகளையும் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் இந்த தாயத்து வேலை செய்யாது.
-சுவாமி பித்தானந்தா.
30 பின்னூட்டங்கள்:
இது கலர் பிரிண்ட் எடுக்கனுமா, இல்லை பிளாக் அண்டு ஒயிட் போதுமா ?
//இது கலர் பிரிண்ட் எடுக்கனுமா, இல்லை பிளாக் அண்டு ஒயிட் போதுமா ?
//
அது அவரவர் விருப்பம்.
முக்கியமான ஒன்று! அனானிகளுக்கு அல்வாத்தட்டு வைத்து ஈர்ப்பது போன்ற பதிவுகளையும் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் இந்த தாயத்து வேலை செய்யாது.
//அனானிகளுக்கு அல்வாத்தட்டு வைத்து ஈர்ப்பது போன்ற பதிவுகளையும் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் இந்த தாயத்து வேலை செய்யாது.//
இது வெயிட்டு.
:))))
//இது வெயிட்டு//
கைப்புள்ளை! கக்காபோ! மன்னிக்க
கககபோ!
//கைப்புள்ளை! கக்காபோ!//
குறும்புங்க உங்களுக்கு. நாமக்கல்லையும் கொங்குநாட்டையும் கலந்து அடிச்சிருக்கீங்க. வாயெல்லாம் பல்லு தான் போங்க.
:))))
தளபதி,
இந்த தாயத்த எங்கன மந்திச்சிங்க?
இல்ல மந்திரிக்காமலே நல்லா வேலை செய்யுமா?
அப்பாவி நாகை சிவா
//இது வெயிட்டு.//
என்ன ஒரு 100, 150 கிராம் இருக்குமா. அதுக்கு மேல இருக்காது என்பது என் கணிப்பு. தள நீங்க என்ன சொல்லுறீங்க
ஏங்க!! இதுக்கு பின்னாடி என் போட்டா போடனுமா வேண்டாமா? :-))
சிபி...!
மகேந்திரன் பெ.. கிழுமத்தூரருக்கும், செந்தழல் ரவிக்கும் ஒன்னு அனுப்பி வையுங்கள்... அவர்களுக்குத்தான் அனானிங்கத் (அன்புத்) தொல்லை அதிகமாக இருக்காம் !
:))
ஸ்வாமிஜி..
பித்தர்களுக்கு.. சாரி, பக்தர்களுக்கு எது தேவைன்னு தெரிஞ்சு உதவுறதில் உங்களுக்கு இணை நீங்களே தான்..
நான் என்னோட பக்கத்தில் போட்டுட்டேன்.. குறைந்த பட்சம் இன்னும் இரண்டு நாட்களுக்காவது எனக்கு இது தேவை..
கோவியாரே!
யாராருக்கு வேணுமோ அவங்களாவே வந்து எடுத்துக் கொள்வார்கள். நாமளா அனுப்ப மாட்டோம்ல!
பாருங்க! படகு அக்கா எவ்வளவௌ சமர்த்தா எடுத்து போட்டுகிட்டாங்க!
:))
தள எப்படி இந்த தாயது அனானிகளை வெரட்டுமோ அதே மாதிரி எனக்கு புடிச்சவங்களை
( யாருன்னு கேக்கபிடாது ஆமா ) வசியம்போட்டு இழுக்கரதுக்கும் நமக்கும் ஒரு தாயத்துக்கு ஏற்பாடு பண்ணுனா புண்ணியமாப் போகும் உங்களுக்கு ;)))))
தாயத்து தாயத்து அப்படின்னு ஒரு NKS- பாட்டு இருக்கே சிபி. அந்த பாட்ட யாராவது முழுசா தெரிஞ்சவங்க போடலாமே.
தாயத்து தாயத்து அப்படின்னு ஒரு NKS- பாட்டு இருக்கே சிபி. அந்த பாட்ட யாராவது முழுசா தெரிஞ்சவங்க போடலாமே.
//முக்கிய குறிப்பு:
அனானிகளுக்கு அல்வாத்தட்டு வைத்து ஈர்ப்பது போன்ற பதிவுகளையும் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் இந்த தாயத்து வேலை செய்யாது.
-சுவாமி பித்தானந்தா.//
:))
ம்ம்ம், இதைப் போட்டா வர ஒண்ணு ரெண்டு பின்னூட்டமும் வராம போயிடுச்சுன்னா? அதுக்கு ஏதாவது மந்திரிச்சு வச்சிருக்கீங்களா? :D
//அனானிகளின் அட்டகாசத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விடுபட்டு நிம்மதி அடைவீர்களாக!//
ஹிஹி... நம்ம பதிவுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை :)
மந்திரவாதியா? நல்ல வருவுதான்
//தள எப்படி இந்த தாயது அனானிகளை வெரட்டுமோ அதே மாதிரி எனக்கு புடிச்சவங்களை
( யாருன்னு கேக்கபிடாது ஆமா ) வசியம்போட்டு இழுக்கரதுக்கும் நமக்கும் ஒரு தாயத்துக்கு ஏற்பாடு பண்ணுனா புண்ணியமாப் போகும் உங்களுக்கு ;)))))//
அதே அதே....
ஜொள்ளுப்பாண்டி said...
//தள எப்படி இந்த தாயது அனானிகளை வெரட்டுமோ அதே மாதிரி எனக்கு புடிச்சவங்களை
( யாருன்னு கேக்கபிடாது ஆமா ) வசியம்போட்டு இழுக்கரதுக்கும் நமக்கும் ஒரு தாயத்துக்கு ஏற்பாடு பண்ணுனா புண்ணியமாப் போகும் உங்களுக்கு ;))))) //
பாருங்க! தமிழ்மண மகா ஜனங்களே!இந்தப் பாவத்துக் கொள்ளாம் நான் ஆளாக முடியாது!
தமிழ்மணத்துல எல்லோரும் அனானி தொல்லைனு தாயத்துக் கட்டுறோம் இந்த ஜொள்ளப் பாத்தீங்களா..? கொஞ்சங்கூட சங்கட்டமே இல்லாம ஃபிகர் கரெக்ட் பண்ண கேட்கிறத..!
அவன் அவன் பிரச்சனை அவனவனுக்கு!
அண்ணணப் பாத்து ஏண்ட கேட்ட...?இல்லை அண்ணன் இதுக்கு முன்னால இந்த வேல பாத்தாரா..?
..
..
..
அதெப்படி நீ அண்ணணைப் பாத்து இந்தக் கேள்வியக் கேட்கலாம்..?
(கவுண்டர் ஸ்டைலில்...)
அன்புடன்...
சரவணன்.
எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிப்பிங்களோ???
கலக்கலா இருக்கு :-)
//சிபி...!
மகேந்திரன் பெ.. கிழுமத்தூரருக்கும், செந்தழல் ரவிக்கும் ஒன்னு அனுப்பி வையுங்கள்... அவர்களுக்குத்தான் அனானிங்கத் (அன்புத்) தொல்லை அதிகமாக இருக்காம் !
:))////
இத எங்க தாத்தா கேட்டாருன்னா .... வேண்டாம் சொன்னது ஜிகேங்கறதால சும்மா விடறேன் :))
தாயத்து....தாயம்+அத்து...இதில இருந்து என்ன தெரியுது? தாயம்னா ஒன்னு. அத்துன்னா என்னான்னு எல்லாருக்கும் தெரியும். ஒன்ன அத்து நம்ம கட்டிக்கிறதுதான் தாயத்து. புரிஞ்சதா? புரியலைன்னா சொல்லுங்க. ஒரு ஆயிரம் பக்க புத்தகம் இருக்கு. அதுல முழுக்கவே தாயத்துக்கான விளக்கந்தான்.
தள வியாவாரம் நல்லாப் போகுதா?
சொந்தச் செலவுல்ல சூனியத்துக்கும் எதாவது பரிகாரம் இருக்கான்னு தெரிஞ்ச ஒருத்தர் கேட்கச் சொன்னார்.
//வசியம்போட்டு இழுக்கரதுக்கும் நமக்கும் ஒரு தாயத்துக்கு ஏற்பாடு பண்ணுனா புண்ணியமாப் போகும் உங்களுக்கு //
பாண்டித்தம்பி! நம்ம தொழிலையே மாத்திடுவீங்க போல இருக்கே!
இதுக்கெல்லாம் வேற ஆள் பாருமைய்யா!
:-x
//ம்ம்ம், இதைப் போட்டா வர ஒண்ணு ரெண்டு பின்னூட்டமும் வராம போயிடுச்சுன்னா? அதுக்கு ஏதாவது மந்திரிச்சு வச்சிருக்கீங்களா? :D
//
அது சரி! அநாவசிய பிரச்சினைகள் இருக்குறவங்க மட்டும் தாயத்தை பயன்படுத்துங்க!
//நம்ம பதிவுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை //
அப்படியா அருள்குமார்!
அனானி கண்ணுங்களா? பிளீஸ் நோட் திஸ் பாயிண்ட்.
அன்பு நாமக்கல் சிபி,
இதோ "தாயித்து" பாடலைக் கேட்கச் சொடுக்குங்கள்:
http://iniyavaikal.blogspot.com/2006/11/27.html
அன்பு சிபி,
"அல்வாத் தட்டு வைத்து ஈர்ப்பது" என்றால் எழுதாமல் இருப்பதா?
அடடா நல்ல தகவல். :-))