ஜொள்ளுப் பாண்டி தலை மறைவா?
இட்லிவடையாரின் எக்ஸ்க்ளூசிவ் ரிப்போர்ட்.
சென்னை, ஆகஸ்ட் 9, பதிவுலகில் ஜொள்ளு தொடர்பான விளக்கங்கள் மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை பதிவு செய்து வரும் ஜொள்ளுப் பாண்டி என்பவர் திடீரென தலைமறைவாகி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. அவர் நேற்று மதியம் முதலே தலைமறைவாகி இருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகிறது.
வருடா வருடம் கொண்டாப்படும் பண்டிகைகளான தீபாவளி, பொங்கல், நண்பர்கள் தினம் போல ரக்ஷாபந்தன் தினமும் குறிப்பிடப்பட்டது. இவருடம் இன்றைய தினம்(ஆகஸ்ட் 9) ரக்ஷாபந்தன் தினமாக அனுஷ்டிக்கப் படுவதால் பெண்கள் தங்கள் சகோதரர்களுக்கும்,
சகோதரர்களாக நினைப்பவர்களுக்கும், இன்னும் சில பேரை சகோதரர்களாக
ஆக்கிக் கொல்வதற்கும் அவர்களின் ராக்கி எனப்படும் கயிறை அணிவித்து, இனிப்பு வழங்குவர். சகோதரர்களும் தங்கள் சகோதரிக்கு பரிசுகள் வழங்கி மகிழ்வர்.
இந்நாளில் தனக்கு யாரும் (எந்த ஃபிகர்களும்) ராக்கி அணிவித்து விடக்கூடாதே என்ற அச்சத்தில் ஜொள்ளுப் பாண்டி தலைமறைவாகி விட்டார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவரோடு சேர்ந்து அவரது கூட்டாளிகள் சிலரும் காணாமல் போயிருப்பதாகத் தெரிகிறது.
11 பின்னூட்டங்கள்:
பித்தானந்தா மட்டும் ஏன் இன்னும் இருக்காரு??
வ.வா.சங்கம், க.பி.க எல்லாரும் கடையடைப்பு தானே இன்னிக்கு?
அப்படியே பித்தானந்தா, உங்க பிரதான சிஷ்யன் வா. ம வையும் காணோமாம்.. தேடிப் பிடிச்சு கொடுங்க..
வ.வா.சங்கம் எதுக்கு கடையடைக்கணும். அமைதியான முறையில எங்கள் கண்டனத்தை தெரிவிச்சிட்டு எங்க வேலையைப் பார்த்துகிட்டிருப்போம்.
க.பி.க பற்றி அவர்களுடைய செய்திக்குறிப்பில்தான் பார்க்கணும்.
வா.ம - என்ன ஆனார்னு கண்டு பிடிக்க இட்லி வடையாரிடம் பரிந்துரைக்கிறேன்.
//வ.வா.சங்கம் கடையடைப்பு தானே இன்னிக்கு?//
கடையெல்லாம் திறந்துதான் இருக்கும்.
ஆனா நாங்க மட்டும் யார் கண்ணுலயும்
படமாட்டோம்.
//வ.வா.சங்கம், க.பி.க எல்லாரும் கடையடைப்பு தானே இன்னிக்கு?//
இதை வண்மையாக கண்டிக்கிறோம்..
க.பி.கழகம்.. கடையடைப்ப்பு இல்லை. என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாங்க ஏன் தலைமறைவாகனும்..?
உடம்பு சரியில்லை அதான் டாக்டர் வீட்டுக்குகூட போவாம (போக முடியாமல்) இருக்கோம்.:)
என்பதை இங்கு குறிப்பிடுகிறோம்
இவண்
ஜொ.பா.இ.மு.க.
வ.கு.கிளை
அதான் நாளைக்கு வந்துருவாரில்லை, அப்போ எல்லாத்தையும் சேர்த்து வெச்சு கட்டிருவோம். (வந்துருவாரில்லை?)
இனிப்பாய்யா அது?!
//ஆக்கிக் கொல்வதற்கும் அவர்களின் ராக்கி எனப்படும் கயிறை அணிவித்து, இனிப்பு வழங்குவர்.//
சின்ன வயசுல காது குத்துறப்ப வீல்னு அழுவோம். அப்ப வீல் வால்யூமை குறைப்பதற்காக வாழைப்பழம் கொடுப்பானுகள்ல!
அதான்யா ராக்கிக்குப் பொறவால தர்ற இனிப்புப்பு!!
இனிப்பாய்யா அது?!
//ஆக்கிக் கொல்வதற்கும் அவர்களின் ராக்கி எனப்படும் கயிறை அணிவித்து, இனிப்பு வழங்குவர்.//
சின்ன வயசுல காது குத்துறப்ப வீல்னு அழுவோம். அப்ப வீல் வால்யூமை குறைப்பதற்காக வாழைப்பழம் கொடுப்பானுகள்ல!
அதான்யா ராக்கிக்குப் பொறவால தர்ற இனிப்புப்பு!!
ஏலே பாண்டி... ஆட்டயக் கலைக்க பாக்குறாங்கப்பூ அவசரப்பட்டு வெளிய போக வேணாம்...
இந்த சலசலப்புல்லாம் அஞ்சாதேலே...
அசரபட்டு வெளில போனோம்னா அம்மணிக கையில கட்டிருவாளுக அமுக்கமா இங்கேயே இருப்போம்.
எல்லோரையும் தான் தேடுறாங்களாம் அதனால அவசரப் படதா இப்போ வேகம் முக்கியல்ல, விவேகம் தான் முக்கியம் நீ பாட்டுகு சட்டு புட்டுனு ஸ்பாட்ட காலி பண்ணிடாத,
இன்னைக்கு ஒரு நாலைக்கு உன் ஜொள்ளை கன்ட்ரோல்ல வச்சிக்க நாலைக்கு ஓவர் டைம் பார்த்துக்கலாம்,
அன்புடன்...
சரவணன்.
தளபதியாரே!
எதா இருந்தாலும் இருட்டிய பிறகு இல்ல இல்ல நாளைக்கு வந்து சொல்லுறேன்.
ஆஹா மக்கா இப்போதான் நம்ம பாசறையிலே Wi-Fi Enable பண்ணுனாங்க.ஆமா நெசம்மாலுமே பதுங்கு குழியிலே இருந்துதான் அனுப்பிகிட்டு இருக்கேன் !!! அல்லாறும் சூதானமா இருங்கப்பூ !! புல் பேண்டு புல் ஹாண்டு சர்ட்டு போட்டுகுட்டு போங்கப்பூ !! சரியா !! தப்பித் தவறி ஏதாச்சும் ராசா பாச மாச்சுன்னா குந்த வச்சு ஒக்காந்து ஒப்பாரி வக்காதீப்பப்பூ !சரியா !!!