நானும் ரொம்ப நாளா பார்க்கிறேன். அடிக்கடி பேசப்படுகிற விஷயமா இருக்குதுங்க இந்த பென்னுரிமை. சரி! நாமளும் இதைப் பத்தி விசாரிச்சி எழுதுவோம்ணு களத்துல இறங்கிட்டம்ல!
முதலில் ஒரு எழுத்தாளரை சந்தித்தேன்.
"பென்னுரிமை என்பது எல்லா காலத்திலும் வழங்கப்படக் கூடிய ஒன்று. கேட்டுப் பெறுதல் கூடாது. ஆனால் நிச்சயமாக கொடுக்கப் பட வேண்டிய ஒன்று. இல்லையென்றால் எங்களைப் போல எழுத்தாளர்களுக்கு கஷ்டம்தான்" என்றார்.
பிறகு மாணவர் ஒருவரைச் சந்தித்தேன்.
"ஆமாங்க! பென்னுரிமை இல்லைன்னா ரொம்ப கஷ்டம்தான். ஸ்கூல்ல படிக்கும்போது பென்லயெல்லாம் எழுதக்கூடாது. பென்ஸில்லதான் எழுதணும்,
இங்க் பென்லதான் எழுதணும், பால் பாயிண்ட் பென்ல எழுதக்கூடாதுன்னெல்லாம் சொன்னாங்க, இந்த எண்ட்ரன்ஸ் எக்ஸாம்ல கூட கருப்பு மை பென்லதான் எழுதணும், பென்சில்லதான் எழுதணும்னெல்லாம் சொல்றாங்க. இதெல்லாம் தப்புங்க. அவங்கவங்க வசதியைப் பொறுத்து ஏதாவது ஒரு பென்லயோ, அல்லது பென்ஸில்லயோ எழுதிட்டுப் போகட்டும்னு விட வேண்டியதுதான"
என்றார்.
|
This entry was posted on 11:42 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
34 பின்னூட்டங்கள்:
காசு கொடுத்து வாங்கிருக்கோம் நம்ம உரிமையை இதுல கூட நிலைநாட்டலனா எப்பிடி ?
//பென்னுரிமை//
தலைப்பைப் பார்த்தவுடனேயே ஏதோ குண்டக்க மண்டக்க சொல்ல வர்ரீங்கன்னு தெரிஞ்சுக்கிட்ட்டேன்.
//காசு கொடுத்து வாங்கிருக்கோம் நம்ம உரிமையை இதுல கூட நிலைநாட்டலனா எப்பிடி ?//
கரெக்ட் மின்னல்! இதுதான் நம்ம கருத்தும்!
//தலைப்பைப் பார்த்தவுடனேயே ஏதோ குண்டக்க மண்டக்க சொல்ல வர்ரீங்கன்னு தெரிஞ்சுக்கிட்ட்டேன்.
//
தலைப்பைப் பார்த்தவுடனேயா? அல்லது பதிவர் பெயரைப் பார்த்தவுடனேயா?
//
கரெக்ட் மின்னல்! இதுதான் நம்ம கருத்தும்!
//
??
இப்படி ஒத்துக்கிட்டா எப்படி நான் அடுத்த பின்னுட்டம் போடுவது ??
என்னசொல்ல வரீங்க ?
புரியலயே ??
அப்படி இப்படி கேள்வி கேட்டு வம்புக்கு இழுக்கனும்...
அப்பதானே கயமைதனம் செய்யமுடியும்..
::::::::::::)))))))))))))))))
//அப்படி இப்படி கேள்வி கேட்டு வம்புக்கு இழுக்கனும்...
//
வம்புக்கு இழுக்கணுமா? எதுக்குங்க?
ஒண்ணும் புரியலையே?
//அப்பதானே கயமைதனம் செய்யமுடியும்//
கயமைத்தனமா? அப்படின்னா என்னங்க?
-அப்பாவி பொது சனம்.
//
கயமைத்தனமா? அப்படின்னா என்னங்க?
-அப்பாவி பொது சனம்.
//
அப் பாவி போலிஸு வருவாரு அவர்கிட்ட கேளுங்க சொல்லுவாரு...
//
வம்புக்கு இழுக்கணுமா? எதுக்குங்க?
ஒண்ணும் புரியலையே?
//
ஆஹா கிளம்பிட்டாய்யா கிளம்பிட்டாய்யா ::)
சிபி என்ன நைட் பன்னிரண்டு மணிக்கு மேலாகிறது. தூக்கம் வராமல் இப்படிக் காலாய்த்துக்கிட்டு இருக்கீங்களா?
//
சிபி என்ன நைட் பன்னிரண்டு மணிக்கு மேலாகிறது. தூக்கம் வராமல் இப்படிக் காலாய்த்துக்கிட்டு இருக்கீங்களா?
//
வரலனுதானே நீங்களும் காலாய்க்கிறீங்க சிபியை
பேட்டி கண்டதெல்லாம் சரிதான், சிபியாரே!
ஆனால், எந்த ஒரு பிரச்சினையானாலும், சம்பந்தப்பட்ட நபரிடம் கேட்டு அவர் தரப்பு நியாயத்தைக் கேட்பது இல்லை என்கிற வலையுலக மரபுக்கு நீங்களும் துணை போய்விட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன்!!!!:))
பென்னுரிமை பற்றி நீங்களாவது ஒரு பென்னிடம் கேட்டு எழுதுமாறு கோருகிறேன்!!
அகில உலக பென்னுரிமை சங்கத்தின் சார்பாய் பென்னை பென்சிலுக்கு ஒப்பிட்டு பேசிய சிபியை வன்மையாய் கண்டிக்கிறேன்.:-)
நல்லாருக்குய்யா உங்க பென்னுரிமை
நாங்கூட தமிழ்மணம் அடுத்த சூட்டுக்கு ரெடி ஆயிரும்போலனு ஆவலா படிச்சா கடைசில கலாசலு.
சரி சரி ஒத்துக்குறேன்
நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்
தலைப்பைப் பார்த்தவுடம் "எழுத்துப் பிழை"யாருக்கு வேலை வெச்சிட்டாரே நம்ம சிபியார்னு தோனுச்சு.
அடுத்து பெண்ணுரிமையப் பத்தி என்ன கலாய்க்கப் போறாருன்னு யோசித்தேன். வழக்கம் போல பட்டையக் கிளப்பிட்டீங்க!!!
வெறும் இரண்டு பேரை மட்டும் பேட்டி எடுத்துப் போட்டா அது ஆய்வுக் கட்டுரையா?
நம்மூர்க்காரர் (இதுக்கு வேற பெயர் இருக்குங்க.): நம் நாட்டுக்கே உரித்தான சிலேட்டு மற்றும் குச்சி என்று அறியப்படும் பலப்பத்தை விட்டு அக்கம்பக்கத்திலிருந்து வந்தேறிய பேனாவிற்குக் குடை பிடிக்கும் #$%$%^ இருக்கும் வரை நம் நாடு உருப்படவா போகிறது. பேனாக்களை நாட்டை விட்டே விரட்ட வேண்டும்.
பக்கத்தில் இருந்த வெளியூரில் இருந்து நம் ஊரில் வந்து செட்டில் ஆன ஒருவர்: பேனாக்களை மக்கள் விரும்பி வாங்கினால் அதைத் தடுக்க யாராலும் முடியாது. பேனாக்களுக்கு மதிப்பிருந்து அதனை மக்கள் வாங்கினால், அதைத் தடுத்து பென்சில்தான் வாங்க வேண்டுமென சட்டம் இயற்றுவது என்ன நியாயம்? இதைக் கண்டித்து போராட்டம் நடத்துவோம்.
இன்னொரு நம்மூர்க்காரர்: கடந்த இருநூறு ஆண்டுகளாய் (இது அடிக்கடி சொல்லும் போது ஆயிரம், இரண்டாயிரம் என உயரும்) பென்சில்களை அடக்குமுறையால் கட்டிப் போட்டு மிதித்த பேனாக்கள் அராஜகம் பற்றிப் பேசாமல் கைகட்டி நிற்கும் நாமக்கல் நாமங்கள் பற்றி நாம் என்ன சொல்வது. பேனாக்கள் கைகட்டி வாய் பொத்தி நிற்கும் நாட்கள் வந்து விட்டன என அறிந்து கொள்ளத்தான் வேண்டும். இதன் முதல் படியாக இனி பத்து பேனாக்கள் இருக்கும் டப்பாவில் ஐந்து பேனாக்களுக்குப் பதிலாக பென்சில்கள்தான் இருக்க வேண்டும்.
ஒரு நடுநிலமைவியாதி: இப்பொழுது ஊரில் எங்கு பார்த்தாலும் பேனா பென்சில் பற்றித்தான் பேச்சு. பேனா வாங்குபவர்கள் அதனை வாங்குவது அவர்கள் சுதந்திரம். அதற்காக பென்சில் மற்றும் பல்ப்ப தொழில் நுட்பம் நமக்கே உரியது. அதனை அழிந்து விடாமல் காப்பது நம் அரசின் கடமை. பேனாக்களுக்கு வலிக்காமல் பென்சில்களைக் காப்பது எப்படி என அரசு ஆலோசிக்கவேண்டும்.
கூட இருந்த ஒரு சிவப்புச் சட்டைக்காரர்: முதலாளித்துவத்தின் சின்னமாய் நம் நாட்டில் நுழைந்து அதன் அடிமடியில் கை வைத்திருக்கும் பேனா என்ற பாசிச எண்ணத்தை நாங்கள் எதிர்க்கிறோம். இனி பேனா உற்பத்தியையும் இறக்குமதியையும் அடியோடு தடை செய்ய வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்துவோம். (செய்திக்குறிப்பு - மத்திய அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் வாட்டர்மேன் பேனாக் கம்பெனியின் புதிய தொழிற்சாலைக்கு அனுமதி!)
மேற்தட்டு வருக்கத்தின் பிரதிநிதி: எதற்காக பேனாவைப் பற்றி இப்படி ஒரு பிரச்சனை? நான் கையெழுத்திடுவது கூட மின்கையெழுத்துதானே. பேனா, பென்சில் என்ற சாதனங்களே தேவையில்லையே.
இப்படி எல்லாக் கோணங்களையும் ஆராய்ந்து போடுமய்யா. இல்லை உமக்கு நிரந்தர ப்ரொபேஷந்தான்.
பென்னியம் பேச வந்த சிபியே, எங்கள் கொத்தனாரின் கேள்விகளுக்குப் பதில் சொல்!
கொத்தனார்.. அற்புதம்! அட்லாஸுக்கு வைக்க வேண்டிய பதிவை பின்னூட்டமா போட்டுட்டீரேய்யா!
பதிவைப் படிச்சுட்டு என்னத்த சொல்றதுன்னு பேசாமப் போயிட்டேன். திரும்பி வந்து போனா போகுது ஒரு சிரிப்பானாவது போட்டுட்டுப் போகலாம்னு வந்தா கொத்ஸ் பின்னூட்டம் நல்லா இருக்குய்யா. அது ஒரு சிரிப்பான் இல்லை. ஆயிரம் சிரிப்பான் போடலாம். ஆனா இரண்டிற்கு மேல் எப்போதும் வேண்டாம்ன்னு பெரியவங்க சொல்லியிருக்கிறதால ரெண்டே சிரிப்பான் போட்டுவிட்டுச் செல்கிறேன்.
:-) :-)
என்னடா 'பெண்ணுரிமை' நகைச்சுவையில் வந்திருக்குன்னு எட்டிப்பார்க்க வந்தேன். உண்மையில் பெண்ணுரிமை நகைச்சுவையா போச்சு போங்க...
என்னா சிபி இதுதான் பென்னுரிமையா?? ஆனா பாருங்க 'பென்'னையும் பெண்ணையும் மனசுக்கு பக்கதுலதானே வச்சுக்கறோம் !! ஆமா இங்க் பேனா இன்னும் இருக்கா??
பென்னுரிமை யாருக்கு ?
உரிமை கேட்கிறவர்களுக்கா ? அல்லது தரமாட்டேன் என்று சொல்லுபவர்களுக்கா ?
பேனா போகட்டம் போ...:))
கொத்ஸ்....
பின்னூட்டத்தயே பதிவு மாதிரி போட்டா.... அப்புறம் எங்களமாதிரி பதிவையே பின்னூட்டம் மாதிரி போடறவங்க என்ன பண்ணறது!!!!
கலாய்தல் குழு போட்டி அறிவிப்பு:-
006:பென்னுரிமை....
007: என்ன வென்று சரியாக யூகிப்பவர்கள் அடுத்த கலாய்தல் வார நாயகராக தேர்ந்தெடுக்க படுவார்கள். ஒன்றுக்கு மேல் சரியான விடை இருப்பின் குலுக்கல் முறையில் (இதுக்கு யாரும் கலாய்சிடாதீங்கப்பா!!!!) நாயகர் தேர்ந்தெடுக்க படுவார் என்று கலாய்தல் திணை குழு சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.:-) (சிபி... குழு உருப்பினர்களை அறிமுக படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்)
நம்மளால ஆனது.... இனி சிபி பாடு...:-)
ஏதோ பேனா-பென்ல தான் கொஞ்சம் ஏதோ ஒரு சுழி கம்மியா இருக்கிறதாலும், காசு கொடுத்து வாங்கியிருப்பதாலும் நம் இஷ்டப்படி உரிமையை நிலைநாட்டப் போராட அவசியமில்லை.
மூணு சுழிப் பெண் உரிமை? மூச். சுழிச்சுடுவாங்க நம்மள. கரண்டி, பூரிக்கட்டைத் தாக்குதலில் தப்பிக்க மார்ஷல் ஆர்ட்ஸ் தெரிஞ்சிருந்தும் அப்பப்ப மயக்கமாகிட வேண்டியிருக்கு
இதுல எங்கிட்டுபோய் உரிமைய நிலைநாட்டுறது.
வேணும்னா எவ்வளவு அடிச்சாலும் அழுகாம நல்லவனாப் பேரடுக்கலாம். அவ்வ்வ்வ்வ்வ்வ்
பென்னுரிமை பற்றிய ஒரு பென்னின் பார்வை:
நாமக்கல்லில் இருந்து வந்திருக்கும் ஒருவருக்கு பென்னைப் பற்றியும், அவர்தம் உரிமை பற்றியும் என்ன தெரியும்? அல்லது எப்போதும் காதிடுக்கில் விரல் நீள பென்சில் வைத்துக் கொண்டு அலையும் கொத்தனார்களுக்குத் தான் அது தெரியுமா?
ஒரு பென்னை மற்றொரு பென்னால் தான் நன்கு புரிந்துகொள்ள முடியும். பென்விடுதலை வேண்டுமென்று எத்தனை நாளாய் நாங்களும் கோரிக்கை வைத்துக் கொண்டே இருப்பது?
பென் விடுதலை என்றால், இந்த ஆண்களின் அடக்குமுறை காட்டும் பாக்கெட்டுகளிலிருந்து எங்களுக்கு விடுதலை வேண்டும்..
தெரு முனையில் தயங்கித் தயங்கி நின்று யாரும் பார்த்துவிடுவதற்குள் பக்கத்து காலேஜ் பையன்களுடன் கடலை போடும் பெண்கள் கையில் திருகப்பட்டு, பற்களில் கடிபட்டு.. கடைசியில் கீழே விழுந்து மிதிபடுவதும் நாங்கள் தான்..
இவற்றில் எது தெரியும் நாமங்களையும் பென்சில்களையும் பயன்படுத்துபவர்களுக்கு?!!!
(பேட்டி தொடர்கிறது.. ஒரு பென்னின் கதை - Brought to you by நடராஜ் பென்சில் அன்ட் கேமலின் ரப்பர்ஸ்)
//இரண்டிற்கு மேல் எப்போதும் வேண்டாம்ன்னு பெரியவங்க சொல்லியிருக்கிறதால ரெண்டே சிரிப்பான் போட்டுவிட்டுச் செல்கிறேன்//
சிரிப்பான் போடுவதற்கு கூடவா "கட்டுப்பாடு" குமரன். வந்து அள்ளி தெளிச்சுட்டு போங்க.
//உண்மையில் பெண்ணுரிமை நகைச்சுவையா போச்சு போங்க... //
ஜெஸிலா நீங்க பாட்டுக்கு ஏதும் பிரச்சனைய உண்டு பண்ணிடாதீங்க. இது பென்னுரிமை.
எங்க தளபதியாரே!
பொருள் சிறிசா இருந்தாலும், மேட்டரு பெரிய மேட்டரு தான்.
இரண்டு நபர்களிடம் மட்டும் கருத்து கேட்டது, சரியில்லை. இன்னும் பல பேரிடம் கருத்து கேட்டுக் இருக்க வேண்டும்.
//காசு கொடுத்து வாங்கிருக்கோம் நம்ம உரிமையை இதுல கூட நிலைநாட்டலனா எப்பிடி ? //
யோவ் மின்னலு, என்ன ஆளுய்யா நீ, இத எல்லாம காசு கொடுத்து வாங்குவாங்க. நாங்க எல்லாம் எக்ஸாம் ஹால் வர்கார்ந்து கேள்வித் தாளா கையில வாங்குன பிறகு அந்த கேள்வித் தாள் கொடுத்த வாத்திக்கிட்ட இருந்தோ இல்ல அந்த ஹாலில் இருக்கும் எதாவது ஒரு பிகர்கிட்ட இருந்தோ வாங்கி தேர்வை எழுதும் கோஷ்டி. அப்படி சேர்த்த பென் ஏகப்பட்டது. காச இதுக்கும் எல்லாம் வேஸ்ட் பண்ணாதய்யா!
//காசு கொடுத்து வாங்கிருக்கோம் நம்ம உரிமையை இதுல கூட நிலைநாட்டலனா எப்பிடி ? //
யோவ் மின்னலு, என்ன ஆளுய்யா நீ, இத எல்லாம காசு கொடுத்து வாங்குவாங்க. நாங்க எல்லாம் எக்ஸாம் ஹால் வர்கார்ந்து கேள்வித் தாளா கையில வாங்குன பிறகு அந்த கேள்வித் தாள் கொடுத்த வாத்திக்கிட்ட இருந்தோ இல்ல அந்த ஹாலில் இருக்கும் எதாவது ஒரு பிகர்கிட்ட இருந்தோ வாங்கி தேர்வை எழுதும் கோஷ்டி. அப்படி சேர்த்த பென் ஏகப்பட்டது. காச இதுக்கும் எல்லாம் வேஸ்ட் பண்ணாதய்யா!
நான் இன்னமும் சிலேட்டுக் குச்சியை வைச்சுத்தான் எழுதுறேனாக்கும், சமயத்திலே, சிலேட்டோ அதோட குச்சியையோ மறந்துட்டு போயிட்ட, இலையிலே மரக் குச்சியலா ஓட்டைப் போட்டுத்தான் எழுதுறது. அதினாலே நான் மைனாரிடி, என்னையும் ஆட்டையில சேர்ர்துக்குவீகளா?
.
32
ரெண்டு நாளா பின்னுட்டம் எதுவும் வரவில்லையா இந்த பதிவுக்கு அதான் முற்றுபுள்ளி வைத்து கலாய்த்தேன்...::))))))))))
//ரெண்டு நாளா பின்னுட்டம் எதுவும் வரவில்லையா இந்த பதிவுக்கு அதான் முற்றுபுள்ளி வைத்து கலாய்த்தேன்//
இப்படியெல்லாம் புள்ளி வெச்சி பீதிய கிளப்பாதீங்கப்பூ! யாராச்சும் கோலம் போட்டுருவாங்களோன்னு பயமா இருக்கு!