004 : சிரித்துப் பழகு
12:36 PM | Author: நாமக்கல் சிபி
சிரித்துப் பழகு
நாளும் நீ
சிரித்துப் பழகு!

சிரிப்பு ஓர்
சிறந்த வரம்!
மானுடப் பிறவிக்கு!

கவலைகள் அதிகமா!
கவலைப் படாதே!
சிரிக்கப் பழகு!

துன்பங்கள் வரும்போதும்
துவளாமல் சிரி!
உள்ளத்து விசனங்களை
வெளியிலே எறி!

சிரித்துப் பழகு
நாளும் நீ
சிரித்துப் பழகு!

தினமும் சில நிமிடம்
சிரிக்கும் நேரம் அதிகமாக்கு!
அதுவே பாதிச் சுமை
உன்னிடத்தில் குறைக்கும்!

உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்!
தேஜஸ் கண்டு
உன் பின்னே கூட்டம்
வரக் கூடும்!

திரும்பிப் பார்!
அவர்களும் திரும்பிடுவர்!
அச்சத்தில் அல்ல!
உன் தேஜஸ்
கண்டு தடுமாறுவர்!

சிலர் உன்மேல்
கல்லெறியக் கூடும்!
உன்னைப் போல்
கவலையின்றி இருக்க
இயலாமையின் பொறாமை!

மனதார மன்னித்து விடு!
அவர்களையும்
பார்த்துச் சிரி!
புரிந்தாலும் ஒதுங்கிக் கொள்வர்!
புரியாவிட்டாலும் கூட!

இப்படியே
சில நாள் பயிற்சியில்
சிரிப்பு உனக்கு
கை கைகூடிவிடும்!
உன் பொறுப்புகளும்
வாழ்க்கைச் சுமையும்
உன்னை
தொந்தரவு செய்யாது!

சுதந்திரமாக உணர்வாய் நீ!
இப்போது இன்னும்
அதிக நேரம் சிரிக்கலாம் நீ!

அப்புறமென்ன
வந்துவிடு எங்களுடன்!
சேர்ந்து சிரிப்போம்!

நீ மறுத்தாலும்
நாங்கள்
காத்துக் கொண்டிருப்போம்!
வந்துவிடுவாய் என்று!

- சுவாமி பித்தானந்தா, கீழ்ப்பாக்கம்.
|
This entry was posted on 12:36 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

59 பின்னூட்டங்கள்:

On Tue Jul 04, 01:01:00 PM , நன்மனம் said...

//அவர்களையும்
பார்த்துச் சிரி!
புரிந்தாலும் ஒதுங்கிக் கொள்வர்!
புரியாவிட்டாலும் கூட!//

சுவாமி தங்கள் சிஷ்யர் சிரித்தால் அந்த சிரிப்புக்கு அர்த்தம் தேடுவீர்களா இல்லை ஒதுங்கி "கொல்"வீர்களா!

இந்த முகவரியில் உள்ள பல சுவாமிகளுக்கு மத்தியில் "சுவாமி பித்தானந்தா" வை மட்டும் எப்படி கண்டுபிடிப்பது.:-))

 
On Tue Jul 04, 01:04:00 PM , நாமக்கல் சிபி said...

//சுவாமி தங்கள் சிஷ்யர் சிரித்தால் அந்த சிரிப்புக்கு அர்த்தம் தேடுவீர்களா இல்லை ஒதுங்கி "கொல்"வீர்களா!
//

//இந்த முகவரியில் உள்ள பல சுவாமிகளுக்கு மத்தியில் "சுவாமி பித்தானந்தா" வை மட்டும் எப்படி கண்டுபிடிப்பது//

அர்த்தங்களும், அடையாளங்களும் தேட ஆரம்பித்து விட்டால் மீண்டும் நீ துன்பங்களுக்கு ஆட்படுகிறாய் என்று பொருள்.

கேள்விகள் துற! கெக்கேபிக்கே வெனச் சிரி! அவ்வளவே!

 
On Tue Jul 04, 01:11:00 PM , நன்மனம் said...

//அர்த்தங்களும், அடையாளங்களும் தேட ஆரம்பித்து விட்டால் மீண்டும் நீ துன்பங்களுக்கு ஆட்படுகிறாய் என்று பொருள்.//

இத சிரிக்காம சொல்லி, மேடைல பேசறவர பாத்து கேள்வி கேட்ட தொண்டன "சிறப்பா" கவனிக்க சொன்ன தலைவர போல ஆகிட்டீங்களே சுவாமிஜீ.

//கேள்விகள் துற! கெக்கேபிக்கே வெனச் சிரி! அவ்வளவே! //

தங்கள் அறிவுரையை சிரமேற்கொண்டு இதோ :-)) :-))) :-)))))) :-))))) :-)))

 
On Tue Jul 04, 01:16:00 PM , நாமக்கல் சிபி said...

//தலைவர போல ஆகிட்டீங்களே சுவாமிஜீ//

தெளிவடையாத பைத்தியங்களுக்குள்தான் தலைவன்,தொண்டன், குரு, சிஷ்யன் என்ற பாகுபாடெல்லாம்!

எப்போது நீ சிரிக்க ஆரம்பித்தாயோ! அப்போதே நீயும், நானும் ஒன்றுதான்.
ஆக நீயும் ஒரு பித்தானந்த சுவாமியே!

 
On Tue Jul 04, 02:35:00 PM , கோவி.கண்ணன் said...

//நீ மறுத்தாலும்
நாங்கள்
காத்துக் கொண்டிருப்போம்!
வந்துவிடுவாய் என்று!
//
'இளித்த வாய்' 'இளித்த வாய்' என்று சொல்லப்படுபவர்கள் இங்கே தான் இருக்கிறார்களா ? வந்துட்டோம் !

 
On Tue Jul 04, 02:53:00 PM , நாமக்கல் சிபி said...

//'இளித்த வாய்' 'இளித்த வாய்' என்று சொல்லப்படுபவர்கள் இங்கே தான் இருக்கிறார்களா ? வந்துட்டோம் !//

வருக! கோவியாரே! தங்கள் வரவு நல்வரவாகுக!

 
On Tue Jul 04, 02:54:00 PM , அனுசுயா said...

புன்னகை என்பது மிகச்சிறந்த மருந்து. அதை பற்றி அருமையாக எழுதிவிட்டு கடைசியில் கொஞ்சம் நக்கல் அடித்துவிட்டீர்கள். பரவாயில்லை அதையும் படித்து விட்டு சிரித்து விட்டேன்.

 
On Tue Jul 04, 03:00:00 PM , நாமக்கல் சிபி said...

//புன்னகை என்பது மிகச்சிறந்த மருந்து.//

புன்னகைக்கும் சிரிப்பிற்கும் சிறிது வேறுபாடு உண்டு!

அதிக நேரம் புன்னகைத்துக் கொண்டே இருக்க முடியாது. அப்படிச் செய்பர்கள்தான் கோவியாரின் மேற்கண்ட பின்னூட்டத்தில் சொல்லப்பட்டவர்கள்.

ஆனால் அதிக நேரம் சிரித்துக் கொண்டிருக்க முடியும். இச்சிரிப்பில் விஷமம், கள்ளங்கபடம், சூது வாது இராது. குழந்தையைன் மனநிலையை ஒத்தது.
எனவேதான் இவ்வாறு சிரிப்பவர்களும் சுவாமிகளே என்கிறேன் நான்.

ஆராய்தலை விடுங்கள். அது உங்களை துன்பக் கடலில் தள்ளும். நன்மனத்திற்கு சொன்னதேதன்.உன் மனத்திற்கும்.

கேள்விகள் துற! கெக்கேபிக்கே வெனச் சிரி! அவ்வளவே!

 
On Tue Jul 04, 03:10:00 PM , நன்மனம் said...

//நன்மனத்திற்கு சொன்னதேதன்.உன் மனத்திற்கும்.//

வாரேவா!!!! வாரேவா!!!! என்ன ரைமிங்....

:-))))) :-)))) :-)) :-)))) :-)))

(வேற ஒன்னும் இல்ல தலைப்ப செயல் "படு"த்தறேன்... ஹி...ஹி...)

 
On Tue Jul 04, 03:14:00 PM , நாமக்கல் சிபி said...

//:-))))) :-)))) :-)) :-)))) :-)))//

உணர உணர உன்னதம் அடைகிறீர்கள்.

:)))) :)))) :))))

 
On Tue Jul 04, 03:26:00 PM , Muthu said...

சிபி ,
எங்கிருந்து எழுதறீங்க? கோவையா இல்லை கீழ்ப்பாக்கமா? :)

கவிதைங்கற பேருல எதையாவது கிறுக்காம சிரிக்க வைக்கறீங்க..மற்ற திணைகளை பார்க்கிறேன்.

 
On Tue Jul 04, 03:29:00 PM , டிபிஆர்.ஜோசப் said...

நீ மறுத்தாலும்
நாங்கள்
காத்துக் கொண்டிருப்போம்!
வந்துவிடுவாய் என்று!//

எங்க சிபி.. கீழ்ப்பாக்கத்துக்கா:)

 
On Tue Jul 04, 03:34:00 PM , கோவி.கண்ணன் said...

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டம் அது ஆணவ சிரிப்பு :)

 
On Tue Jul 04, 04:02:00 PM , ALIF AHAMED said...

//
தினமும் சில நிமிடம்
சிரிக்கும் நேரம் அதிகமாக்கு!
அதுவே பாதிச் சுமை
உன்னிடத்தில் குறைக்கும்!
//

அதனாலதானே வேற எங்கேயும் போகாமல் இங்கேயே (வவா சங்கத்தையும் அதன் மெம்பர்களையும் அங்கு வருவோர் போவோரையும் ) சுத்தி சுத்தி வர்ரேன்.....::::::::::))))))))))))))) ::))))))

 
On Tue Jul 04, 07:19:00 PM , VSK said...

சிரிப்பாய்ச் சிரித்த சிலபல பேரின்
சில்லரைத்தனங்களுக்கு இடையே
சிபியாரின் குருநாதர் சிறப்பாய்ச் சொன்ன
சிரிக்கும் கவிதை 'கிறுக்கலில்லாமல்'
'கீழ்ப்பாக்கத்திலிருந்து!!

 
On Tue Jul 04, 07:21:00 PM , Thekkikattan|தெகா said...

ச்சிபி,

//சிலர் உன்மேல்
கல்லெறியக் கூடும்!
உன்னைப் போல்
கவலையின்றி இருக்க
இயலாமையின் பொறாமை!//

ஹூம்... புரிகிறது.

//அப்புறமென்ன
வந்துவிடு எங்களுடன்!
சேர்ந்து சிரிப்போம்! //

ஆசைதான்!

//நீ மறுத்தாலும்
நாங்கள்
காத்துக் கொண்டிருப்போம்!
வந்துவிடுவாய் என்று!//

அப்படியா? நன்றி, நன்றி!!

//- சுவாமி பித்தானந்தா, கீழ்ப்பாக்கம்//

ஹா...ஹா...ஹா. ஐ லைக் தாட்.

ரொம்ப அருமையாக எழுதுறீங்க சாரே.

 
On Tue Jul 04, 09:40:00 PM , நாமக்கல் சிபி said...

//சிபி ,
எங்கிருந்து எழுதறீங்க? கோவையா இல்லை கீழ்ப்பாக்கமா?//

முத்து(தமிழினி)!
தேடல்கள்தான் தேவை இல்லை என்கிறேன். நீர் எங்கிருந்து சிரிக்க துவங்குகிறீரோ நான் அங்கு இருப்பேன்.

//கவிதைங்கற பேருல எதையாவது கிறுக்காம சிரிக்க வைக்கறீங்க//

இது கவிதை அல்ல! போதனை!

 
On Tue Jul 04, 09:41:00 PM , நாமக்கல் சிபி said...

//எங்க சிபி.. கீழ்ப்பாக்கத்துக்கா//

டி.பீ.ஆர் அவர்களே!

மீண்டும் அனைவருக்கும் கூறுகிறேன். தேடல்களைத் தவிர்த்து சிரிக்க துவங்குங்கள். தாமாக நாம் இருக்கும் இடத்தை வந்தடைவீர்கள்.

- பித்தானந்தா.

 
On Tue Jul 04, 09:42:00 PM , நாமக்கல் சிபி said...

//அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டம் அது ஆணவ சிரிப்பு//

இங்கே நீ சிரிக்கும் புன் சிரிப்போ ஆனந்தச் சிரிப்பூ!

சிரி! சிறப்பாகச் சிரி! வாய் விட்டுச் சிரி! தொடர்ந்து சிரி!

 
On Tue Jul 04, 09:43:00 PM , நாமக்கல் சிபி said...

//.....::::::::::))))))))))))))) ::)))))) //

மிக நன்று மின்னல்!
இதுதான் நமக்கு தேவை!

 
On Tue Jul 04, 09:44:00 PM , நாமக்கல் சிபி said...

//சிரிப்பாய்ச் சிரித்த சிலபல பேரின்
சில்லரைத்தனங்களுக்கு இடையே
சிபியாரின் குருநாதர் சிறப்பாய்ச் சொன்ன
சிரிக்கும் கவிதை 'கிறுக்கலில்லாமல்'
'கீழ்ப்பாக்கத்திலிருந்து!! //

உமது சிரிப்பை ஏளனம் செய்தேனென்று சினம் கொண்டீரோ?
சிரிக்காமல் சென்றுள்ளீரே எஸ்.கே?

 
On Tue Jul 04, 09:46:00 PM , நாமக்கல் சிபி said...

//ஆசைதான்!//

என்ன தெகா! இப்படிக் கூறிவிட்டீர்.
முகம் காணாவிடினும் இடம் பிடித்து வைக்கும் சான்றோர் நட்பு நம்மிடையில்!

விரைவில் வருக!


//ஹா...ஹா...ஹா. //

இதுவே நீர் நம்மை வந்தடைவீர் என்பதற்குச் சாட்சி!

 
On Tue Jul 04, 10:06:00 PM , பொன்ஸ்~~Poorna said...

சிபி,
இந்தக் கவிதை ரொம்ப நல்லா இருக்கு.. Humour Club Promotional Campaignக்குக் கொடுக்கலாம் நீங்க...

:))))))))))

 
On Tue Jul 04, 10:26:00 PM , Thekkikattan|தெகா said...

/ஹா...ஹா...ஹா. //

இதுவே நீர் நம்மை வந்தடைவீர் என்பதற்குச் சாட்சி!// (மண்டபத்தில் பட்டு எனது சிரிப்பொலி எக்கோ அடித்தாத நினைத்து நீவிர் சொன்னதாக நான் நினைத்து.... சிரித்தது :-)))

ஹோலி Cow :-)))) வும்மை கடவுள் பிறக்கும் பொழுது எப்படிப் படைத்தானே... வார்த்தைக்கு வார்த்தை வெடி (இன்னிக்கு வேற independence day fireworks inga)...

இங்கு என்னை எல்லோரும் க்ரேஸி என்று திரும்பப் பார்க்கும் அளவிற்கு உள்ளது வுமது சேஷ்டை... வாழ்க நீவிர் பல்லாண்டு!!!

 
On Tue Jul 04, 10:27:00 PM , G.Ragavan said...

சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதமே

சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
கன்னம் சிவக்கச் சிவக்க வந்து கதை படித்தாய்

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது

சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்
நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்

 
On Tue Jul 04, 11:01:00 PM , Thekkikattan|தெகா said...

//கேள்விகள் துற! கெக்கேபிக்கே வெனச் சிரி! அவ்வளவே!//

This is Zillion MUCH ஆமா சொல்லிப்புட்டேன்... இருங்க் கொஞ்சம் தண்ணி குடிச்சுக் கிறேன் (அடெ பச்சத் தண்ணிங்கோவ்...) சிரிச்சு சிரிச்சு இருமல் வந்துடுத்து... பின்னூட்டங்களெ படிச்சு ;-)))

 
On Tue Jul 04, 11:30:00 PM , வெற்றி said...

நாமக்கல் சிபி,
நல்ல பதிவு. திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் இந்த சிரிப்பைப் பற்றி மிகவும் அழகாக "இலக்கியத்தில் நகைச்சுவை" எனும் உரையில் சொல்லியுள்ளார்கள். எனது பதிவில் இவ் உரைக்கு இணைப்புக் கொடுத்துள்ளேன். நேரம் கிடைக்கும் போது கேட்டு மகிழுங்கள்.

 
On Tue Jul 04, 11:44:00 PM , Thekkikattan|தெகா said...

சின்ன மனுசன் பெரிய மனுசன் செயலப் பார்த்து சிரிப்.............. ஹா...ஹா...ஹூஹா... இது... @ ராகவன்...;-)))))

 
On Tue Jul 04, 11:48:00 PM , நாமக்கல் சிபி said...

தெகா! உம்மை விரைவில் எதிர்பாக்கிறேன்.

சுவாமி பித்தானந்தா.

 
On Wed Jul 05, 01:08:00 AM , Thekkikattan|தெகா said...

//தெகா! உம்மை விரைவில் எதிர்பாக்கிறேன். //

என்னை அழைத்திடல்
வேண்டா
ஏனெனில் நான்....

நான் இங்குதான் எப்பொழுதும் நிறைந்திருக்கிறேன்... வுமது நினைவு என்னைப் பற்றி எழும் பொழுதெல்லாம்...!

------- ஒரு ஹிக்கி பிக்கி சிஷ்யன்

 
On Wed Jul 05, 01:18:00 AM , நரியா said...

வணக்கம் சிபி.
சிந்திக்க வைக்கும் கவிதை. மிக நன்று.
என் கல்லூரி வாழ்க்கையில் நான் சிரிக்காத நாளில்லை :)).

அப்போது சிரித்த அளவு எப்போதும் சிரித்ததில்லை.

நன்றி!
வாழ்க வளமுடன்

 
On Wed Jul 05, 03:27:00 AM , குமரன் (Kumaran) said...

கலாய்க்கப் போறேன்றீங்க. சிரிங்கன்றீங்க. கவிதையெல்லாம் எழுதி சிரிங்கன்றீங்க. எப்பங்க சிரிக்க வைக்கப் போறீங்க? :-(

கலாய்க்கப்படாதவன்.

 
On Wed Jul 05, 08:56:00 AM , VSK said...

//கலாய்க்கப்படாதவன்.//


சிபி,
குமரன் குறைபடுகிறார்!
கொஞ்சம் கவனியுங்கள்!

:)))))))))))))))))
பெரிய சிரிப்பானாகப் போட்டுவிட்டேன், போதுமா!!

 
On Wed Jul 05, 09:24:00 AM , நாமக்கல் சிபி said...

//சிபி,
குமரன் குறைபடுகிறார்!
கொஞ்சம் கவனியுங்கள்!
//

பக்கத்து இலைக்கு பாயசம் கேட்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப் படும்!

 
On Wed Jul 05, 09:27:00 AM , நாமக்கல் சிபி said...

//சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது
//

வாங்க ஜீரா!
சிரிப்பு தொடர்பான பாடல்களை நினைவூட்டி இப் போதனையை இன்னும் சிறப்பானதாக்கி விட்டீர்.

 
On Wed Jul 05, 09:28:00 AM , நாமக்கல் சிபி said...

//Humour Club Promotional Campaignக்குக் கொடுக்கலாம் நீங்க...
//

நிச்சயமாய் கொடுக்கலாம். நடிகர் மதன் பாப் தலைவராக இருக்கும் கிளப் தானே நீங்கள் சொல்வது?

 
On Wed Jul 05, 09:30:00 AM , நாமக்கல் சிபி said...

//நாமக்கல் சிபி,
நல்ல பதிவு. திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் இந்த சிரிப்பைப் பற்றி மிகவும் அழகாக "இலக்கியத்தில் நகைச்சுவை" எனும் உரையில் சொல்லியுள்ளார்கள். //

நன்றி வெற்றி அவர்களே! தற்போது என் கனிணியில் கேட்கும் வசதி இல்லை. பின்னர் நிச்சயம் கேட்கிறேன்.

 
On Wed Jul 05, 09:31:00 AM , நாமக்கல் சிபி said...

//என்னை அழைத்திடல்
வேண்டா
ஏனெனில் நான்....

நான் இங்குதான் எப்பொழுதும் நிறைந்திருக்கிறேன்... வுமது நினைவு என்னைப் பற்றி எழும் பொழுதெல்லாம்...!

------- ஒரு ஹிக்கி பிக்கி சிஷ்யன்
//

:))
வந்தே விட்டீர் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறேன்.

 
On Wed Jul 05, 09:32:00 AM , நாமக்கல் சிபி said...

//என் கல்லூரி வாழ்க்கையில் நான் சிரிக்காத நாளில்லை :)).

அப்போது சிரித்த அளவு எப்போதும் சிரித்ததில்லை.
//

மிக்க நன்றி நரியா!
கல்லூரி வாழ்க்கை கவலை இல்லா வாழ்க்கை அல்லவா! (தேர்வு ஒன்றைத் தவிர. இருப்பினும் தேர்வு பற்றி கூட நான் கவலை கொண்டது கிடையாது)

 
On Wed Jul 05, 09:34:00 AM , நாமக்கல் சிபி said...

//கலாய்க்கப் போறேன்றீங்க. சிரிங்கன்றீங்க. கவிதையெல்லாம் எழுதி சிரிங்கன்றீங்க. எப்பங்க சிரிக்க வைக்கப் போறீங்க? :-(

கலாய்க்கப்படாதவன்.//

அட! இங்கே வந்து நம்மை கலாய்த்திருக்கிறார் ஒருவர்.

:))

எப்படியோ பேலன்ஸ் ஆனால் சரி!

 
On Wed Jul 05, 09:35:00 AM , நாமக்கல் சிபி said...

//:)))))))))))))))))
பெரிய சிரிப்பானாகப் போட்டுவிட்டேன், போதுமா!!
//

சிரிப்பதில் என்ன அளவு! தொடர்ந்து சிரியுங்களேன் எஸ்.கே.

 
On Wed Jul 05, 09:45:00 AM , துளசி கோபால் said...

சிபி,

பித்தம் + ஆனந்தம் ரொம்பவே தலைக்கேறிப்போச்சா?

சரியான ஊர்தான் ஸ்வாமிஜி இருக்கறது:-)))))

 
On Wed Jul 05, 10:02:00 AM , நாமக்கல் சிபி said...

//பித்தம் + ஆனந்தம் ரொம்பவே தலைக்கேறிப்போச்சா?
//

பின்னே!

//சரியான ஊர்தான் ஸ்வாமிஜி இருக்கறது://

:)
அங்கிருந்துதானே அவர் எல்லோருக்கும் அருள்(!?) பாலிக்கிறார்.

 
On Wed Jul 05, 11:46:00 AM , மணியன் said...

சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே!
சிரிப்பே சிறப்பு என்றிடும் பித்தானந்தாவின் அடிபற்றி
மணியன்

 
On Wed Jul 05, 10:58:00 PM , VSK said...

//சிரிப்பதில் என்ன அளவு! தொடர்ந்து சிரியுங்களேன் எஸ்.கே.//


நான் தொடர்ந்து சிரித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.......
...............................
சிரிப்பாய்!!!

//முன்னுரிமை வழங்கப் படும்! //

அதுதான் முழு உரிமையுடன் நடந்து கொண்டிருக்கிறதே!

 
On Wed Jul 05, 11:33:00 PM , Suka said...

//உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்!
தேஜஸ் கண்டு
உன் பின்னே கூட்டம்
வரக் கூடும்!//

சிபி, எத்தனை தடவை சொல்றது பல்பை மறைச்சு நிக்காதீங்கன்னு.. பாருங்க.. அடிக்க வர்ராங்க..

:)
சுகா

 
On Fri Jul 07, 08:18:00 AM , Unknown said...

ஆமாம் சிபி. கலாய்த்தலுக்கும் பிதற்றலுக்கும் என்ன வித்தியாசம்?

 
On Fri Jul 07, 08:56:00 AM , நாமக்கல் சிபி said...

//சிரிப்பே சிறப்பு என்றிடும் பித்தானந்தாவின் அடிபற்றி //

வாங்க மணியன்,
நல்லா சிரிங்க! தினமும் சிரிங்க!

 
On Fri Jul 07, 08:58:00 AM , நாமக்கல் சிபி said...

//நான் தொடர்ந்து சிரித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.......
...............................
சிரிப்பாய்!!!
//

நல்லது. அப்போ நீங்களும் என்னுடன்தான் இருக்கிறீர்களா?

//அதுதான் முழு உரிமையுடன் நடந்து கொண்டிருக்கிறதே!
//

முழு உரிமை தந்தமைக்கு நன்றி. உரிமை தந்தவர் நீர்தானே!

 
On Fri Jul 07, 09:11:00 AM , இலவசக்கொத்தனார் said...

இந்த பாதிவுக்கு ரொம்ப லேட்டா? சரி இருந்தாலும் 50 நாந்தானே. அதனால ஓக்கே.

 
On Sun Jul 16, 12:58:00 AM , நாமக்கல் சிபி said...

//சரி இருந்தாலும் 50 நாந்தானே.//


லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் பின்னூட்டம் போட்ட கொத்தனாருக்கு நன்றி!

 
On Sun Jul 16, 01:04:00 AM , நாமக்கல் சிபி said...

//எத்தனை தடவை சொல்றது பல்பை மறைச்சு நிக்காதீங்கன்னு.. பாருங்க.. அடிக்க வர்ராங்க//

நன்றி சுகா!
பல்பை மறைச்சி நின்னது எங்க தலை!
அந்த கதை தெரியுமா உங்களுக்கு?

:))

 
On Sun Jul 16, 01:06:00 AM , நாமக்கல் சிபி said...

//பிதற்றலுக்கும் என்ன வித்தியாசம்? //

நல்ல கேள்வி!

பிதற்றல் நான் சொல்ல(பிதற்ற) நினைத்ததை அப்படியே கொட்டுவது.

கலாய்த்தல் பிறர் சொல்லியதிலிருந்து எடுத்து பதிலுக்கு நாமும் சொல்லி கடைசியில் அவர்களையும் பிதற்ற வைத்தல்.

(இப்போ புரிகிறதா வா.மணிகண்டனாரே? இல்லையெனில் டியூஷன் வரவும்)
:)

 
On Fri Nov 03, 12:51:00 PM , Unknown said...

:))))))))))))))))

 
On Fri Nov 03, 01:01:00 PM , ரவி said...

தலை, வெளியிடாம எல்லாம் வெக்கலை. பார்க்காமே விட்டுட்டேன்..இப்போதான் பார்த்து வெளியிட்டேன்..

பொறவு, சங்க சிங்கம் எல்லாம் சவுக்கியமா !!

கவுஜ சூப்பர்.

 
On Fri Nov 03, 03:35:00 PM , யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சிபி!
அதிகம் சிரித்தால்; அடுத்தவர் நமட்டுச் சிரிப்புச் சிரித்து; சிரிப்போ சிரிப்பாக்கிவிடுவார்கள்.
அளவாகச் சிரித்துப் பழகுவோம்;
யோகன் பாரிஸ்

 
On Fri Nov 03, 05:21:00 PM , மங்கை said...

நல்லா இருக்கு சிபி...


''A smile is a curve that sets everything straight''

Wear a smile and have friends; wear a scowl and have wrinkles. ~George Eliot


மங்கை

 
On Fri Jun 22, 09:02:00 PM , நாமக்கல் சிபி said...

//நல்லா இருக்கு சிபி...//

மிக்க நன்றி மங்கை அவர்களே!

 
On Sun Nov 11, 11:46:00 AM , Ungalranga said...

mma sirikka sollrathukaga ippadi kavithai eluthi ennai ala vachitingale ayyo...ayyo....