005 : ஜொள்ளு Vs லொள்ளு
5:22 PM | Author: நாமக்கல் சிபி
கலாய்க்கறதுன்னு முடிவு பண்ணியாச்சு! இதுல சங்கத்து ஆளுங்க வெளி ஆளுங்கன்னு பாரபட்சம் பார்க்கலாமா!

அதனால முதல்ல எங்க சங்கத்து ஆளுலேர்ந்தே ஆரம்பிக்கறேன்.
பேரெல்லாம் சொல்ல மாட்டேன். நீங்களே புரிஞ்சிக்கணும்.

சரி தலைப்புக்கு வருவோம் : ஜொள்ளு Vs லொள்ளு
(எல்லாரும் குமுதம் ரேஞ்சுக்கு எழுதறாங்க.
நாம அட்லீஸ்ட் அதே ரேஞ்சுல ஆறு வித்தியாசமாவது எழுதுவோம்)

ஜொள்ளுக்கும் லொள்ளுக்கும் நூலளவுதாங்க வித்தியாசம்.

1.அந்தப் பிகரை நானும் சைட் அடிப்பேன்னு சொன்னா அது ஜொள்ளு.
அந்தப் பிகரை நான் மட்டும்தான் சைட் அடிப்பேன்னு சொன்னா அதுதாங்க லொள்ளு.

2.ஜொள்ளு சில நேரம் சம்மந்தப் பட்டவங்களுக்கு எரிச்சலை உண்டாக்கும். லொள்ளு அப்படிப் பட்டது இல்லீங்க. சம்மந்தப் பட்டவங்களையும் சிரிக்க வைக்கும். பின்னாடி அதையே ரசிச்சி நம்ம பின்னாடி சுத்தினாலும் சுத்தலாம்.

3.ஜொள்ளு ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல சரிப்பட்டு வராது. ஆனா லொள்ளு எல்லா வயசுலயும் அல்லவ்டு!

4.ஜொள்ளுக்குன்னு தனியா சில இடங்கள் இருக்கு. லொள்ளு எல்லா இடத்திலயும் அனுமதிக்கப் படுகிறது.

5.ஜொள்ளு குறிப்பிட்ட நபர்கிட்ட ஆரம்பிச்சிட்டா, அப்புறம் அவங்ககிட்டயே கண்டினியூ பண்ண வேண்டி இருக்கும். (மத்தவங்ககிட்டயும் ஜொள்ளலாம். ஆனா முதல் பார்ட்டிக்கு தெரியாம பார்த்துக்கனுமே).ஆனா லொள்ளு அப்படி இல்லைங்க. நோ லிமிட்.

6. ஜொள்ளு விட்டா அவங்களையே கல்யாணம் பண்ணிக்க வேண்டிய ஆபத்து இருக்கு. லொள்ளுக்கு இந்த ஆபத்து ரொம்ப குறைவு.
|
This entry was posted on 5:22 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

54 பின்னூட்டங்கள்:

On Thu Jul 06, 05:55:00 PM , நன்மனம் said...

ஜொள்ளுக்கு உண்டே அடைக்கும் தாழ், லொள்ளுக்கு உண்டோ உதைக்காத கால். :-)

 
On Thu Jul 06, 05:59:00 PM , நாமக்கல் சிபி said...

//ஜொள்ளுக்கு உண்டே அடைக்கும் தாழ்//

ஏன் நன்மனம், ஜொள்ளு என்றால் உதைக்க மாட்டார்களா என்ன? ஓவராக ஜொள்ளும். ஜொள்ளிப் பாரும்.

 
On Thu Jul 06, 06:21:00 PM , ஜொள்ளுப்பாண்டி said...
This comment has been removed by a blog administrator.
 
On Thu Jul 06, 06:21:00 PM , ஜொள்ளுப்பாண்டி said...

//அதனால முதல்ல எங்க சங்கத்து ஆளுலேர்ந்தே ஆரம்பிக்கறேன்.
பேரெல்லாம் சொல்ல மாட்டேன். நீங்களே புரிஞ்சிக்கணும்.//

சிபியண்ணே இதுக்கு எதுக்கு இவ்ளோ பில்டப்பு?? இதுக்கு பதிலா பேரையே சொல்லியிருக்கலாம் :)))

//ஜொள்ளு ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல சரிப்பட்டு வராது. ஆனா லொள்ளு எல்லா வயசுலயும் அல்லவ்டு!//

ம்ஹும் இதை நான் ஒதுக்க மாட்டேன் ! வயசாளிகதான் டெக்னிகல் ஜொள்ளர்கள்னு தெரியாதா?? :))

//மத்தவங்ககிட்டயும் ஜொள்ளலாம். ஆனா முதல் பார்ட்டிக்கு தெரியாம பார்த்துக்கனுமே//

உங்க கவலை எனக்கு புரியுதுங்கண்ணா !! என்ன பண்ண? சரி சரி லூஸில விடுங்க ! :))))

ஆமா இதென்னன்னா 'கலாய்த்தல் திணை ?? ' ஐங்குறுநூறு அல்வா நானூறு மாதிரியா? ;)))

 
On Thu Jul 06, 06:29:00 PM , நாகை சிவா said...

//அந்தப் பிகரை நானும் சைட் அடிப்பேன்னு சொன்னா அது ஜொள்ளு.
அந்தப் பிகரை நான் மட்டும்தான் சைட் அடிப்பேன்னு சொன்னா அதுதாங்க லொள்ளு.//
இது மேட்டரு....
நல்லா ஜொள்ளி சீ... சீ... நல்லா சொல்லிருக்கீங்க

 
On Thu Jul 06, 06:36:00 PM , கோவி.கண்ணன் said...

பல்லை உடையாமல் பாதுகாப்பவர் லொள்ளர்,
திசு பேப்பர் வைத்திருப்பவர் ஜொள்ளர்

 
On Thu Jul 06, 06:40:00 PM , Thekkikattan|தெகா said...

முக்காலத்தையுமுணர்ந்த முனியே,

//ஜொள்ளு குறிப்பிட்ட நபர்கிட்ட ஆரம்பிச்சிட்டா, அப்புறம் அவங்ககிட்டயே கண்டினியூ பண்ண வேண்டி இருக்கும். (மத்தவங்ககிட்டயும் ஜொள்ளலாம். ஆனா முதல் பார்ட்டிக்கு தெரியாம பார்த்துக்கனுமே).ஆனா லொள்ளு அப்படி இல்லைங்க. நோ லிமிட்.//

அனுபவம் பட்டையை கிளப்புவதாக உள்ளது, நிறையெ டிப்ஸ்கள் இலவசமாக வழங்கியமைக்கு... அதெ நான் எப்படியய்யா ஏன் வாயலெ சொல்வேன்ன்ன்ன்ன்... நா தழுதழுக்கிறது, விசிம்பிக்கொண்டே தெகா குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு ;-))

 
On Thu Jul 06, 06:42:00 PM , கோவி.கண்ணன் said...

கள்ளுக்கு எச்சி வடிப்பவர் ஜொள்ளர்
காசு கொடுக்காதவர் லொள்ளர்

 
On Thu Jul 06, 06:45:00 PM , நாமக்கல் சிபி said...

//சிபியண்ணே இதுக்கு எதுக்கு இவ்ளோ பில்டப்பு?? இதுக்கு பதிலா பேரையே சொல்லியிருக்கலாம்//

தம்பி பாண்டி!
யாரை என்று அவரே வந்து சொல்லுவார்னு போடலாம்னு இருந்தேன்!
:)

//வயசாளிகதான் டெக்னிகல் ஜொள்ளர்கள்னு தெரியாதா??//

ஏதாச்சும் ஒன்றிரண்டு பேர் இருக்கலாம். இருப்பினும் அவர்கள் வாயில் ஜொள்ளு தங்காதே!

அதேசமயம் டெக்னிகல் லொள்ளர்கள் வயதானவர்களுள் அதிகம் உண்டு! இன்னும் கிராமத்து பக்கம் போய்ப் பாருங்கள். தெரிந்து கொள்வீர்கள்!

//உங்க கவலை எனக்கு புரியுதுங்கண்ணா !! //

:))

//ஆமா இதென்னன்னா 'கலாய்த்தல் திணை ?? //

அட! இப்பத்தான் இங்க முதன் முதலா வர்றீங்களா?

அப்போ சிரிச்சிப் பழகுனீங்களா இல்லையா?

//ஐங்குறுநூறு அல்வா நானூறு //

அட! இதென்னப்பா! சூப்பரா கீதே! சீக்கிரமே ஆராய்ச்சி பண்ணி ஒரு பதிவு போட்டுடுவோம்!

 
On Thu Jul 06, 06:46:00 PM , நாமக்கல் சிபி said...

//நல்லா ஜொள்ளி சீ... சீ... நல்லா சொல்லிருக்கீங்க
//

நான் நன்றாக லொள்பவன் நாகையாரே!

 
On Thu Jul 06, 06:47:00 PM , நாமக்கல் சிபி said...

//பல்லை உடையாமல் பாதுகாப்பவர் லொள்ளர்,
திசு பேப்பர் வைத்திருப்பவர் ஜொள்ளர்
//

:))

நல்ல விளக்கம் (வித்தியாசம்) கோவியாரே!

 
On Thu Jul 06, 06:51:00 PM , நாமக்கல் சிபி said...

//கள்ளுக்கு எச்சி வடிப்பவர் ஜொள்ளர்
காசு கொடுக்காதவர் லொள்ளர் //

கள்ளுக்கடை பெண்களுக்காகவே வருகை தந்து அதிக காசு கொடுத்து குடிப்பவர் ஜொள்ளர்.

ஓசிக் கள்ளை குடித்துவிட்டு காஸ்ட் அனாலிஸிஸ்(Cost Analysis) செய்பவர் லொள்ளர்.

 
On Thu Jul 06, 06:52:00 PM , பாலசந்தர் கணேசன். said...

சிம்பிளா சிபி நயனதாரா மேல விடரது தான் ஜொள்ளு. நயனதாரா சிபியை பண்றது தான் லொள்ளு.

 
On Thu Jul 06, 06:54:00 PM , நாமக்கல் சிபி said...

//அனுபவம் பட்டையை கிளப்புவதாக உள்ளது, நிறையெ டிப்ஸ்கள் இலவசமாக வழங்கியமைக்கு... அதெ நான் எப்படியய்யா ஏன் வாயலெ சொல்வேன்ன்ன்ன்ன்... நா தழுதழுக்கிறது, விசிம்பிக்கொண்டே தெகா குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு //

மற்ற நாட்களிலெல்லாம் தாமதாக வருகை புரியும் தெகா இன்று மட்டும் உடனடியாக வருகை புரிந்தமையால் இன்று முதல் ஜொள்ளர் என்று அழைக்கப் படுவார்.

நா தழுதழுப்பதன் காரணம் வாய் நிறைய ஜொள்ளுதானே! வேறென்ன?

 
On Thu Jul 06, 06:54:00 PM , கோவி.கண்ணன் said...

எல்லா ஜொள்ளும் ஜொள்ளல்ல - லொள்ளில்
மாட்டாத ஜொள்ளே ஜொள்ளு

- 'பிறப்பு' என்ற நேர் நேர் வாய்பாட்டில் முடிகிறது

 
On Thu Jul 06, 06:56:00 PM , நாமக்கல் சிபி said...

பாலசந்தர் கணேசன்,

அட! ரொம்ப நாளுக்கப்புறம்
வந்திருக்கிறீர்.

//சிம்பிளா சிபி நயனதாரா மேல விடரது தான் ஜொள்ளு. நயனதாரா சிபியை பண்றது தான் லொள்ளு//

இவ்ளோ சிம்பிளா வித்தியாசத்தை விளக்கி விட்டீரே!

 
On Thu Jul 06, 06:56:00 PM , நாமக்கல் சிபி said...

பாலசந்தர் கணேசன்,
தாங்களும் ஜொள்ளு என்றவுடன்தானே எட்டிப் பார்த்தீர்!

 
On Thu Jul 06, 06:57:00 PM , நாமக்கல் சிபி said...

//எல்லா ஜொள்ளும் ஜொள்ளல்ல - லொள்ளில்
மாட்டாத ஜொள்ளே ஜொள்ளு//

ஜொள்ளு என்றதுமே இங்க ஒருத்தருக்கு கவிதையாக் கொட்டுதுப்பா!

பட்டையக் கிளப்பராரு நம்ம கோவியார்.

தொகுத்தா ஒரு புஸ்தவமே போடலாம் போல!

 
On Thu Jul 06, 07:08:00 PM , நாமக்கல் சிபி said...

//எல்லா ஜொள்ளும் ஜொள்ளல்ல - லொள்ளில்
மாட்டாத ஜொள்ளே ஜொள்ளு//

ஜொள்ளுக ஜொள்ளை அஜ்ஜொள்ளை பிரிதோர்ஜொள்
வெல்லுஞ்ஜொள் இன்மை அறிந்து

 
On Thu Jul 06, 07:21:00 PM , கோவி.கண்ணன் said...

//ஜொள்ளுக ஜொள்ளை அஜ்ஜொள்ளை பிரிதோர்ஜொள்
வெல்லுஞ்ஜொள் இன்மை அறிந்து//
நல்ல தொடச்சிகுங்க ...

 
On Thu Jul 06, 07:30:00 PM , நாமக்கல் சிபி said...

கோவியாரே! ஜொள்ளு பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறோம். லொள்ளு பற்றியும் பேச வேண்டும். இல்லையெனில் நம்மை ஜொள்ளாதிக்க வாதிகளாக்கி விடுவார்கள்!

 
On Thu Jul 06, 07:34:00 PM , கோவி.கண்ணன் said...

லொள்ளுதல் யார்க்கும் எளிய அறியவாம்
ஜொள்ளிய படியே லொள்ளுதல்

பிறப்பு என்ற நேர் நேர் அசையிலேயே இப்பாடலும் முடிவுறுகிறது

 
On Thu Jul 06, 07:46:00 PM , பொன்ஸ்~~Poorna said...

தளபதி..

கலாய்த்தல் திணைன்னு போட்டுபிட்டு,. இப்படி ஐடியாப் பாசறையா இருக்கே!!! இதுல யாரைக் கலாசிருக்கீங்க?!! எனக்குத் தெரிஞ்சி //எல்லாரும் குமுதம் ரேஞ்சுக்கு எழுதறாங்க. // இந்த வரில தான் யாரையோ குத்தற மாதிரி இருக்கு...

//ஜொள்ளு குறிப்பிட்ட நபர்கிட்ட ஆரம்பிச்சிட்டா, அப்புறம் அவங்ககிட்டயே கண்டினியூ பண்ண வேண்டி இருக்கும்//

இந்த இலக்கியத் திறனாய்வுக்கு என்ன காரணம்? .. உங்க முதல் ஜொள்ளிலிருந்து ப்ரமோட் ஆகி அடுத்து அசின், ஸ்ரேயா வகையறா படங்களைப் போட முடியாமல் போன சொந்த சோகமா?

 
On Thu Jul 06, 08:17:00 PM , நாமக்கல் சிபி said...

இன்னொரு முக்கியமான வித்தியாசத்தை மறந்துட்டீங்க
ஜொல்லுக்கு பல கண்டிஷன்ஸ் இருக்கு (எதிர் பாலாக இருக்க வேண்டும் (Opposite sex), பிடிச்சி இருக்கனும்...)
ஆனால் லொள்ளு பேசறது யார்ட வேணாலும் பண்ணலாம்...

 
On Thu Jul 06, 11:02:00 PM , manasu said...

//(மத்தவங்ககிட்டயும் ஜொள்ளலாம். ஆனா முதல் பார்ட்டிக்கு தெரியாம பார்த்துக்கனுமே)//

நமிதா விஷயம் நயனுக்கு தெரியாது தானே!!!!

 
On Thu Jul 06, 11:31:00 PM , நாமக்கல் சிபி said...

//லொள்ளுதல் யார்க்கும் எளிய அறியவாம்
ஜொள்ளிய படியே லொள்ளுதல்//

கலக்கறீங்க கோவியாரே! நடுநிலை வியாதின்னு ச்சே. நடுநிலைவாதின்னு நிரூபிச்சிட்டீங்க!

 
On Thu Jul 06, 11:35:00 PM , நாமக்கல் சிபி said...

//கலாய்த்தல் திணைன்னு போட்டுபிட்டு,. இப்படி ஐடியாப் பாசறையா இருக்கே!!! //

எல்லாம் தம்பி பாண்டியின் அன்புக் கட்டளைக்கிணங்கிதான்!

(நல்லவேளை பாண்டி இருக்காரு, அவரு பேரைச் சொல்லி கொஞ்சம் நாமளும் ஹிஹி..)

////எல்லாரும் குமுதம் ரேஞ்சுக்கு எழுதறாங்க. // இந்த வரில தான் யாரையோ குத்தற மாதிரி இருக்கு... //

யாரையோவெல்லாம் இல்லை.. இந்த வார ஸ்டார் கோவியாரைத்தான்.

//உங்க முதல் ஜொள்ளிலிருந்து ப்ரமோட் ஆகி அடுத்து அசின், ஸ்ரேயா வகையறா படங்களைப் போட முடியாமல் போன சொந்த சோகமா?
//

இப்படியே கொளுத்திப் போட்டு நமக்கும் நயனுக்கும் கலகம் உண்டு பண்ணப் பார்க்கிறீரா!

நயன் செல்லம்! இந்தம்மா சொல்றதெல்லாம் ச்சும்மா லுலூங்காட்டிக்கு!
நம்பிடாதம்மா!

 
On Thu Jul 06, 11:36:00 PM , நாமக்கல் சிபி said...

//ஜொல்லுக்கு பல கண்டிஷன்ஸ் இருக்கு (எதிர் பாலாக இருக்க வேண்டும் (Opposite sex), பிடிச்சி இருக்கனும்...)
ஆனால் லொள்ளு பேசறது யார்ட வேணாலும் பண்ணலாம்...
//
வெட்டியாரே!
முக்கியமான வித்தியாசத்தைச் சொன்னீர்.
பாராட்டுக்கள்.

நீங்களும் நம்ம கட்சி!

 
On Thu Jul 06, 11:36:00 PM , ALIF AHAMED said...

$$
கலாய்க்கறதுன்னு முடிவு பண்ணியாச்சு! இதுல சங்கத்து ஆளுங்க வெளி ஆளுங்கன்னு பாரபட்சம் பார்க்கலாமா!
$$

கலாய்க்காம சப்போட்டு பண்ணியே எல்லோரும் எழுதுறிங்க. எதாவது மிஸ் Understanding கா

 
On Thu Jul 06, 11:37:00 PM , நாமக்கல் சிபி said...

//நமிதா விஷயம் நயனுக்கு தெரியாது தானே!!!!
//

சண்டை உண்டு பண்ண நினைக்கும் மனசுவின் விஷமங்கள் இங்கு செல்லாது என்பதை கூறிக்கொல்ல விரும்புகிறேன்.

 
On Thu Jul 06, 11:45:00 PM , ALIF AHAMED said...

நயன் செல்லம்! இந்தம்மா,இந்தப்பா சொல்றதெல்லாம் ச்சும்மா லுலூங்காட்டிக்கு!
நம்பிடாதம்மா!

இவுங்க பேச்சை கேக்காதடா செல்லம் நம்ம வேற இடத்துக்கு போயிடுவோம் வா செல்லம் .....

 
On Thu Jul 06, 11:48:00 PM , ALIF AHAMED said...

##
சண்டை உண்டு பண்ண நினைக்கும் மனசுவின் விஷமங்கள் இங்கு செல்லாது என்பதை கூறிக்கொல்ல விரும்புகிறேன்
##

ரெத்த ஆறு ஒடும் போல இருக்கே..

(இருந்து பாத்துட வேண்டியது தான்)

 
On Thu Jul 06, 11:52:00 PM , பெருசு said...

லொள்ளுக்கும் எகத்தாளத்துக்கும் வித்தியாசம் என்ன அல்லது
ஒற்றுமை என்ன என்பதை விளக்கவும்.

 
On Fri Jul 07, 12:20:00 AM , ALIF AHAMED said...

:) இப்படி ஒரு சிரிப்பான் போட்டா லொல்லு

::::::)))))))) சிரிப்பான் ரெண்டுக்கு மேல போனா ஜொள்ளு.

இப்படி சிரிப்பானே போடாம விளக்க சொன்னா அதுக்கு பேரு.............


:) (ஒரு சிரிப்பான் போட்டுட்டேன்)

 
On Fri Jul 07, 03:35:00 AM , இலவசக்கொத்தனார் said...

//ஜொள்ளு ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல சரிப்பட்டு வராது. ஆனா லொள்ளு எல்லா வயசுலயும் அல்லவ்டு!//

தபு சாமி தபு. ஓ. சாரி ப் விட்டுப் போச்சு சேத்து படியுங்க.

பாயிண்ட் 2ம் 6ம் எதிர்மறையா இருக்கே.

எதுக்கும் நம்ம பாண்டிகிட்ட ஒரு டுவிஷன் போங்க.

 
On Fri Jul 07, 08:21:00 AM , San Nakji said...

I can't read a word of your language, but it sure is beautiful!

 
On Fri Jul 07, 08:24:00 AM , Unknown said...

பதிமூணு வயசு தென்னாப்பிரிக்க பெண்ணே நீங்க சொல்றது எல்லாம் கரீட்டுனு சொல்லுது. அதுக்கு மேலே நாங்க என்னத்த சொல்ல?

 
On Fri Jul 07, 08:45:00 AM , பாலசந்தர் கணேசன். said...

உங்க மேல ஒரு கண் எப்பவும் உண்டு(பின்னூட்டம் போடலைன்னா கூட). நீங்க பண்ணுறது தான் லொள்ளு.

 
On Fri Jul 07, 08:46:00 AM , நாமக்கல் சிபி said...

Thanks For Visiting My Blog Maya & San Nakji.

(இன்னாப்பா இங்கிலீசு காரவங்கெல்லாம் கிளம்பீட்டாங்கிய, சுவாமின்னு ஒரு பதிவுதான் போட்டேன், அதுக்குள்ள உலக அளவுல பக்தர்கள் வரத் தொடங்கிட்டாங்களோ)

 
On Fri Jul 07, 08:47:00 AM , நாமக்கல் சிபி said...

//பதிமூணு வயசு தென்னாப்பிரிக்க பெண்ணே நீங்க சொல்றது எல்லாம் கரீட்டுனு சொல்லுது. அதுக்கு மேலே நாங்க என்னத்த சொல்ல?//

அதுக்கு முன்னாடி நம்மாளுங்க எத்தினி பேரு சொல்லி இருக்காங்க!
அதெல்லாம் உம்ம கண்ணுக்குப் படலை.

பதிமூணு வயசு தென்னாப்பிரிக்க பொண்ணு சொன்னது மட்டும் தெரியுதுன்னா அதுக்குப் பேருதான் ஜொள்ளு.

 
On Fri Jul 07, 08:48:00 AM , நாமக்கல் சிபி said...

//லொள்ளுக்கும் எகத்தாளத்துக்கும் வித்தியாசம் என்ன அல்லது
ஒற்றுமை என்ன என்பதை விளக்கவும்.
//

விரைவில் எதிர்பார்க்கவும் பெருசு!

 
On Fri Jul 07, 08:49:00 AM , நாமக்கல் சிபி said...

//இவுங்க பேச்சை கேக்காதடா செல்லம் நம்ம வேற இடத்துக்கு போயிடுவோம் வா செல்லம் .....
//

மின்னல் இங்க இருந்து நகர முடியாது சொல்லிப்பிட்டேன்.

:-X

 
On Fri Jul 07, 08:50:00 AM , நாமக்கல் சிபி said...

//தபு சாமி தபு. ஓ. சாரி ப் விட்டுப் போச்சு சேத்து படியுங்க.
//

இதுக்குப் பேருதான் ஜொள்ளு.

 
On Fri Jul 07, 08:51:00 AM , நாமக்கல் சிபி said...

//கலாய்க்காம சப்போட்டு பண்ணியே எல்லோரும் எழுதுறிங்க. எதாவது மிஸ் Understanding கா
//

பார்த்தீரா கோவியாரே! ஜொள்ளு பற்றி மட்டுமே விவாதித்ததற்கு எனக்கு (மட்டும்) இப்படி ஒரு பெயர்.

 
On Fri Jul 07, 08:52:00 AM , நாமக்கல் சிபி said...

//ரெத்த ஆறு ஒடும் போல இருக்கே..

(இருந்து பாத்துட வேண்டியது தான்) //

இதுக்குன்னே நிறைய பேரு இருக்காங்கப்பா!

:)

 
On Fri Jul 07, 08:54:00 AM , நாமக்கல் சிபி said...

//நீங்க பண்ணுறது தான் லொள்ளு.//

நமக்கு தொழிலே அதுதான் பாலசந்தர் கணேசன்.

எப்போதும் ஒரு கண் வைத்திருத்தலுக்கு நன்றி. அப்படியே மெயிண்டெய்ன் பண்ணுங்க!

 
On Fri Jul 07, 09:03:00 AM , Unknown said...

//பதிமூணு வயசு தென்னாப்பிரிக்க பொண்ணு சொன்னது மட்டும் தெரியுதுன்னா அதுக்குப் பேருதான் ஜொள்ளு.//
மடக்கிட்டீங்க ;)

ஆமாம், நம்மாளுங்களுக்கு science fictionனா அலர்ஜியா? ஒரு கதையைப்போட்டேன். மருந்துக்கு கூட ஒரு பின்னூட்டம் வரல! இங்கே என்னடான்னா ஜொள்ளு, லொள்ளுனு பட்டிமன்றம் நடக்குது. சிபி, நீங்களாவது கதையை படிச்சீங்களா?

 
On Fri Jul 07, 09:06:00 AM , நாமக்கல் சிபி said...

//சிபி, நீங்களாவது கதையை படிச்சீங்களா?
//

ஹி.ஹி.
:)

 
On Fri Jul 07, 09:16:00 AM , Unknown said...

//ஹி.ஹி.//
இன்னிக்கு விடப்போறதில்லை. இது என் கதையில வர்ற ஹி.ஹி.யா இல்லை வேறயா :)))))

 
On Fri Jul 07, 09:17:00 AM , இலவசக்கொத்தனார் said...

மேலும் ஒரு 50

 
On Fri Jul 07, 09:29:00 AM , Santhosh said...

அப்பாடா இந்த வாரம் நான் இல்ல போல இருக்கே.. செத்து செத்து பிழைக்க வேண்டியதா இருக்கு இந்த ஆளு கிட்ட.. பாவம்பா ஜொள்ளு நீ..

 
On Fri Jul 07, 09:33:00 AM , Santhosh said...

ஆகா இந்த வாரம் நம்ம வாரம் இல்ல போல பாவம்பா ஜொள்ளு நீ.. சிபி வேணாம் இத்தோட நிறுத்திகுவோம்.. விட்டுடுங்க....

 
On Fri Jul 07, 10:01:00 AM , மனதின் ஓசை said...

//3.ஜொள்ளு ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல சரிப்பட்டு வராது. ஆனா லொள்ளு எல்லா வயசுலயும் அல்லவ்டு//

அதனாலதானா நீங்க லொள்ளு பன்றத விட மாட்டேன்க்கறீங்களா? :-)

 
On Sat Jul 08, 11:50:00 AM , தி. ரா. ச.(T.R.C.) said...

"சில" பேரை கலாய்த்தால் அது ஜொள்ளு. எல்லாரையும் கலாய்த்தால் அது லொள்ளூ.