என்னுள் இருந்தவள்
விரும்பி வினவினாள்
ஓரெழுத்துக் கவிதையொன்று
வாசிக்க இயலுமா?
"நீ"
என்றேன்
இரண்டெழுத்தில் என்றாள்
"நீயே"
என்றேன்
மூன்றெழுத்து என்றாள்
"நீதான்"
என்றேன்
"நான்கெழுத்து"
பின்புறமிருந்து குரல் வந்தது.
"எவ அவ?"
என்று திரும்பினேன்
"பொண்டாட்டி"
என்றாள்.
அட ஐந்தெழுத்து
என்றேன்.
"ஸ்டார்ட் மீசிக்"
என்றான் என் மகன் ஆறு எழுத்தில்.
ஐந்தெழுத்திலேயே எனக்கு
"ஆயுத பூஜை"
அரங்கேறிக் கொண்டிருந்தது
கவிதை
|
This entry was posted on 12:24 AM and is filed under
கவிதை
. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
2 பின்னூட்டங்கள்:
நடந்ததை இத்த்னை தத்ரூபமா கவிதையில? மிகவும் அருமை.
உடம்புக்கு பரவால்லியா அண்ணா?
:)))
தள.. ஒரு சொற்குற்றம் இருக்கு!
ஸ்டார்ட் மீசிக் .. ஏழு எழுத்தாச்சே.. அடி வாங்கியதில் டேமேஜ் ஓவரோ.. ;-))