போட்டி - 26/03/2010
12:01 PM | Author: நாமக்கல் சிபி
எல்லோரும் இட்லி, வடை, சட்னி, பொங்கல், உப்புமா, பட்டாணி, சுண்டல், நெய் ரோஸ்ட், மசாலா ரோஸ்ட், ஸ்பெஷல் ஊத்தாப்பம், ஆனியன் ஊத்தாப்பம், பொடி தோசை, ஆம்லேட், கலக்கி, ஆஃபாயில், வீச்சு, முட்டை வீச்சு, சிலோன் பரோட்டா, இடியாப்பம் பாயா, ஃபுல் மீலஸ், லிமிடெட் மீல்ஸ் னெல்லாம் தலைப்பு வெச்சி எழுதிகிட்டிருக்காங்க!

இன்னும் சிலபேரு நிகழ்வுகள், கனவுகள்... இப்படியெல்லாம் தினுசு தினுசா பேர் வெச்சி எழுதிகிட்டிருக்காங்க! அதான் நம்ம பங்குக்கு "போட்டி" ன்னு பேர் வெச்சிருக்கேன்! (போட்டி ன்னா விளையாட்டுப் போட்டி, கவிதைப் போட்டி மாதிரியான போட்டி அல்ல, ஆட்டுக் குடல் குழம்பு வைப்பாங்களே அந்த போட்டி)
#######################################################

நேற்றும் அலுவல் முடிந்து மேன்சனிற்குச் சென்றபோது நல்லவேளையாக ரூம் மேட் சரக்கு ஏற்பாடு செய்யாமலிருந்தது நிம்மதியாக இருந்தது! பின்னே தினமும்னா என்னத்துக்காகுறது!
சிறிது நேரம் கிரிக்கெட் மாட்ச் பார்த்துவிட்டு விரைவில் உறங்கிவிட்டேன்.
#######################################################
இந்த மாதிரியெல்லாம் நாமும் எழுதலாம்னு ஆசைதான்! எழுதிப் பார்த்தேன்! நமக்கு இந்த ஸ்டைல் ஒத்து வரலை!
அதெல்லாம் அவங்கவங்க திறமைகள்! அவங்களே எழுதிக்கட்டும்! நமக்கு வேண்டாம்! நமக்கு எப்படி எழுத வருதோ அப்படியே எழுதிகிட்டிருக்கேன்!
#####################################################
ஒரு புன்னகை
இருவர் ஆயுளில்
ஒரு நாள் சேர்க்கிறது

என்று ஸ்டேட்டஸ் மெசேஜ் போட்டிருந்தேன்!

பல் விளக்கும் முன்பா/அல்லது விளக்கிய பிறகா என்று ஒருவர் கேட்டார்.

விளக்கும் முன்பு எனில் ஒருவரின் ஆயுளை முடிக்கிறது என்றேன்.
This entry was posted on 12:01 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

12 பின்னூட்டங்கள்:

On Fri Mar 26, 12:50:00 PM , இராகவன் நைஜிரியா said...

போட்டிக்கு போட்டி வராமல் இருக்கட்டும்..

 
On Fri Mar 26, 12:54:00 PM , Athisha said...

நீங்க யாரு புது பதிவரா.. நாமக்கல் சிபினு ஒருத்தர் இருந்தாரே அவரத்தெரியுமா உங்களுக்கு

 
On Fri Mar 26, 12:58:00 PM , நாமக்கல் சிபி said...

அதிஷா! என்ன இது?

ஃப்ரண்ட்ஸ் படத்துல (பழசெல்லாம் மறந்துபோன) சார்லி மாதிரி கேக்குறீங்க!

 
On Fri Mar 26, 01:01:00 PM , Athisha said...

என்.ஆர்.சிபி யா,அது யாரு

 
On Fri Mar 26, 01:12:00 PM , Kumky said...

தல..,
போட்டி இங்க கொடலு எங்க...?

 
On Fri Mar 26, 01:16:00 PM , Thamiz Priyan said...

நல்ல ரசனையான பதிவு! மிகவும் ரசித்துப் படித்தேன். ;-)

 
On Fri Mar 26, 01:17:00 PM , Thamiz Priyan said...

ஒரு கப் நிறைய போட்டி இருப்பது போல் இருந்தால் பதிவு இன்னும் மெருகு ஏறி இருக்குமே.. ;-))

 
On Fri Mar 26, 01:18:00 PM , Thamiz Priyan said...

\\\இட்லி, வடை, சட்னி, பொங்கல், உப்புமா, பட்டாணி, சுண்டல், நெய் ரோஸ்ட், மசாலா ரோஸ்ட், ஸ்பெஷல் ஊத்தாப்பம், ஆனியன் ஊத்தாப்பம், பொடி தோசை, ஆம்லேட், கலக்கி, ஆஃபாயில், வீச்சு, முட்டை வீச்சு, சிலோன் பரோட்டா, இடியாப்பம் பாயா, ஃபுல் மீலஸ், லிமிடெட் மீல்ஸ்\\\\

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...... கேட்க நல்லா தான் இருக்கு.. :-(

 
On Fri Mar 26, 01:25:00 PM , மோனி said...

இட்லி,
வடை,
சட்னி,
பொங்கல்,
உப்புமா,
பட்டாணி,
சுண்டல்,
நெய் ரோஸ்ட்,
மசாலா ரோஸ்ட்,
ஸ்பெஷல் ஊத்தாப்பம்,
ஆனியன் ஊத்தாப்பம்,
பொடி தோசை,
ஆம்லேட்,
கலக்கி,
ஆஃபாயில்,
வீச்சு,
முட்டை வீச்சு,
சிலோன் பரோட்டா,
இடியாப்பம் பாயா,
ஃபுல் மீலஸ்,
லிமிடெட் மீல்ஸ் ...

வரிசையில்
உலக இணைய வரலாற்றில் முதன் முறையாக
"போட்டி" ...

(வயித்த கலக்குதுபா)

 
On Fri Mar 26, 01:59:00 PM , சிட்டுக்குருவி said...

இங்கே இருந்த தோசைய யாரோ திருடிட்டு போய்ட்டாங்கபா!!

 
On Fri Mar 26, 03:15:00 PM , க.பாலாசி said...

கடைசியா அடிச்சீங்க பாருங்க ஜோக்கு... (ஆமா...அப்டித்தானே... ) சூப்பருங்க... நான்கூட பொட்டியோன்னு நெனச்சேன்...

 
On Wed Mar 31, 01:50:00 PM , Nathanjagk said...

பாத்து.. உங்க போட்டியை எடுத்திரப்போறாங்க :))