போட்டி - 02/04/2010
10:41 AM | Author: நாமக்கல் சிபி
ஃப்ளாஷ் பேக்ஸ்!

அன்று ஞாயிற்றுக் கிழமை! அக்கம்பக்கத்து வீட்டுச் சிறுவர்களுடன் பள்ளி மைதானத்திற்கு விளையாடச் சென்று கொண்டிருந்தோம். முத்துசாமி நகர்மன்ற திருமண மண்டபத்தின் வளாகத்திற்குள் சென்று எங்கள் பள்ளியின் பின்பக்க சிறிய வாசலை அடையலாம்.

மண்டபத்தைக் கடந்துகொண்டிருந்தபோது சமையல் கூடத்திலிருந்து ஒரு பெண்ணின் குரல் கேட்டது!
"ஏலேய் நல்லதம்பீ.."
என் நண்பனின் தம்பி பாஸ்கர் சுவரின் இந்தப்புறம் இருந்து இரு கைகளையும் வாய்க்கருகில் கூப்பி "ஏலேய் கெட்ட தம்பீஈஈஈ" என்று குரல் கொடுத்தான்!
"அடி செருப்பால...எவண்டா அது?" என்று அதட்டலான அந்தப் பெண்ணின் குரல் கேட்டதும் சங்கத்தைக் கலைத்துவிட்டு ஆளுக்கொரு திசையில் ஓடிக் கொண்டிருந்தோம்!
*****************************************************************
"ஐயா.." என்று வாசலில் குரல் கேட்டது.
"போயிட்டு இன்னொரு நாளைக்கு வாப்பா.." - இது நான்.
"அடேய்..." - இது எனது தந்தை. பின்வாசல் வழியாக எஸ் ஆகியிருந்தேன் நான்.
வந்தவர் சென்ற பின்னர், இரண்டு தெருக்கள், 2 சுற்று, 8 நிமிடங்கள் இருபத்தேழு விநாடிகளுக்குப் பிறகு என் தந்தையின் கைகளில் அகப்பட்டேன். முதுகைத் தடவிக்கொண்டு, தேம்பியவாறே கேட்டேன்!
வந்தவரு சி.ஈ.ஓ வா(சீஃப் எஜுகேஷனல் ஆஃபீசர்) இருப்பாருன்னு நான் என்னத்தைக் கண்டேன்!
************************************************************************
இன்று காலையில் டீக்கடையில்....
"சென்னை சூப்பர் கிங்க்ஸ் என்னய்யா விளையாடுறாங்க? பேசாம என்னைக் கூப்பிட்டிருந்தா கூட நல்லா ஆடியிருப்பேன்" என்று அங்கலாய்த்துக் கொண்டார் ஒருவர்!
"போயி விளையாட வேண்டியதுதானே"
"அடப் போங்கப்பா! தோனிக்கும் எனக்கும் பிரச்சினை" என்றார்.
என்ன பிரச்சினையோ என்பது போல் அனைவரும் அவரது முகத்தைப் பார்த்தோம்!
"குவார்ட்டர் வாங்கி ஆளுக்குப் பாதியா பிரிக்கும்போது பிரச்சினையாயிடுச்சுப்பா" என்று கூறிக்கொண்டே டீயை உறிஞ்சிக் கொண்டிருந்தார்.
*********************************************************************
போலி/காலாவதியான மருந்துகள் விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள்தண்டனை என்ற செய்தியைப் படித்தேன்!

"அடப் பாவிங்களா! வித்தவனுக்கு ஆயிள் தண்டனை, வாங்கித் தின்னவனுக்கு மரண தண்டனையா" என்று நினைத்துக் கொண்டேன்!
This entry was posted on 10:41 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 பின்னூட்டங்கள்:

On Fri Apr 02, 11:51:00 AM , Ungalranga said...

//"அடப் பாவிங்களா! வித்தவனுக்கு ஆயிள் தண்டனை, வாங்கித் தின்னவனுக்கு மரண தண்டனையா" //

நமது நாட்டிலெ இன்னும் கிறுக்கு சட்டங்கள் உள்ளன என்பதை இந்த பதிவின் கடைசி வரிகள் நிரூபித்துவிட்டன..!!

முதலில் தூக்கில் போட வேண்டியது..இது போன்ற மொக்கை சட்டங்களை வைத்து நீதி கூறும் “கூறுகெட்ட நீதிபதிகளைதான்”.

 
On Sun Apr 04, 11:06:00 PM , சங்ககிரி ரமேஷ் said...

//"அடப் பாவிங்களா! வித்தவனுக்கு ஆயிள் தண்டனை, வாங்கித் தின்னவனுக்கு மரண தண்டனையா" //

:) சட்டம் சிரிக்கிறது ...