ஏ பி சி டி.....ஓ பி க்யூ....
5:57 PM | Author: நாமக்கல் சிபி
என் பெயர் நித்யானந்தம்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் சுருட்டு சாமியாராக தற்கொலை செய்துகொண்டேன்.
திருச்சியில சில ஆண்டுகளுக்கு முன் கற்பழித்தேன்.
நூற்றாண்டுகளுக்கு முன்பு என் உடல் அசையும்போது நான் ஏதோ ஒரு ஹரி.
பல்வேறு போலிச் சாமியார்களின்
பெயர்களில்லாம் இவ்வுலகில்
உலவி வந்திருக்கிறேன்!
வரிசையாக!
இன்னும் என்னவெல்லாமோவாக
என் உடல் எப்போதுமே இருந்துக்கொண்டேதான் இருக்கிறது...
என்னைப் பற்றிய செய்திகளும் வந்துகொண்டேதானிருக்கின்றன!
மக்கள் நம்புகிறார்கள்! மக்கள் வழிபடுகிறார்கள்!
நான் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறேன்! அவ்வளவுதான்!
ஆட்டம் முடிந்தால் ஓட்டம்தான் எடுப்பேன்!
பின் மீண்டும் வேறு தலத்தில்!
வேறு பெயரில்!
......................................
...................................
......................................
உங்களில் எவருவர்
உள்ளத்தால் கூட
தவறிழைக்காமல் இருக்கிறீர்களோ
அந்த யோக்கியவார் எடுக்கட்டும்
எனக்கான முதல் கல்லை!
என்றெல்லாம் நான் சொல்லிவிடமாட்டேன்!
ஏனெனில் நான் கற்களாலேயே
சமாதியாக்கப் பட்டுவிடும் அபாயமிருக்கிறது!

நிற்க!
இவ்வுலகில்
நல்ல மனிதர்களுள் பெரும்பாலோர் உண்டு!
ஆண்களிலாகட்டும், பெண்களிலாகட்டும்!
ஏதோ ஒரு குறிப்பிட்ட சதவீதத்தில்
பாவிகளும் உண்டு!
அதற்காக அனைவரையும்
பாவிகள் என்று கூண்டிலேற்றிவிட முடியாது!

நித்யானந்தமான என் கண்களுக்கும்
நல்லவர்கள் தெரிந்ததுண்டு!
அப்படியும் சிலருக்கு
அனைத்துமே கருப்பாகத் தெரிந்தால்
அது தோற்றத்தின் பிழையல்ல!
அணிந்திருக்கும் கண்ணாடியின் பிழை!

எதிர்கவுஜை எழுதத் தூண்டிய நேர்கவுஜை
This entry was posted on 5:57 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

3 பின்னூட்டங்கள்:

On Fri Mar 05, 07:40:00 PM , Kolipaiyan said...

Superb!

At the same time, you are supporting "JI" like me.

 
On Fri Mar 05, 08:15:00 PM , கார்க்கிபவா said...

:)))

சாரிங்க.. உங்களுக்கு எல்லாம் கமென்ட் போட முடியாது..

 
On Fri Mar 05, 10:06:00 PM , - யெஸ்.பாலபாரதி said...

திரும்பவும்மா...