அன்பார்ந்த தமிழ் வலைப் பதிவர்களே!
நலம் நாடலும் அஃதே!
கவனச் சிதறலுக்கு இடம் கொடாதிருக்கும் பொருட்டு, புகைப் படங்களையும், புள்ளி விவரங்களையும்(ஃபார் புள்ளி விவரங்கள் : ப்ளீஸ் காண்டாக்ட் கேப்டன்) தவிர்த்து இம்மடலினை வரைகிறோம்! ஆரம்ப காலங்களிலேயே எழுத நினைத்தது தவிர்த்தே வந்தோம்! ஆனால் இப்பொழுது பகிரங்கக் கடிதம் வரைய வேண்டிய அவசியம் என்ன வந்தது? மேலே படியுங்கள்.
(மேலே என்றால் மேலே அல்ல! கீழே)
தமிழ் வலைப்பதிவர்கள் ஆளாளுக்குத் தங்களுக்கு விரும்பிய வண்ணம் பகிரங்கக் கடிதங்களை எழுதிக் குவித்து வருகிறீர்கள்! பாராட்டுதலுக்குரியதே! ஆனால் அவற்றையெல்லாம் இந்தைய அஞ்சல் அட்டையிலோ அல்லது இண்லேண்ட் லெட்டரிலோ எழுதினால் இந்திய அஞ்சல் துறைக்கு எவ்வளவு பயனுள்ளதாய் இருக்கும் என்று கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்!
தமிழ் மணத்தில்(மட்டும்) குறைந்த பட்சம் 3500 பதிவர்கள் என்று தெரியவருகிறோம். இதில் ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் ஒரு கடிதம் எழுதி அவற்றின் நகல்களை ஒவ்வொருவருக்கும் அனுப்பினாலே குறைந்த பட்சம் நாளொன்றுக்கு லட்சக் கணக்கில் அஞ்சல் அட்டை, இண்லேண்ட் லெட்டர், ஸ்டாம்புகளின் வியாபாரத்தைக் கணக்கிட முடியும்.
தயை கூர்ந்து எண்ணிப் பாருங்கள்!
பதிவுகளில் கடிதங்களை எழுத வேண்டாம் என்று கூறவில்லை! அவ்வப்போது ஓய்வு நேரங்களில் அஞ்சல் அட்டைகளிலும் எழுதுங்கள் என்றுதான் கோருகிறோம்!
மீண்டும் சொல்கிறோம்! நூற்றுக் கணக்கில் கும்மிப் பின்னூட்டங்களைப் பெற்றுத் தருவது தவிர கிஞ்ஞித்தும் நாட்டுக்கு உபயோகமில்லாத பதிவுகளில் எழுதுவதை விட்டு, இந்திய அஞ்சல் துறையின் முன்னேற்றத்தில் பங்கு பெறுங்கள்!
This entry was posted on 12:26 PM and is filed under
பகிரங்க கடிதம்
. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
14 பின்னூட்டங்கள்:
//(மேலே என்றால் மேலே அல்ல! கீழே)//
நல்ல வேளையாக இதை சொல்லிவிட்டீர்கள். இல்லை என்றார் நான் திரும்ப திரும்ப அதே பத்தியை படித்து இருப்பேன். :))
... இதை எழுத மத்திய அமைச்சர் ராஜா கிட்ட பொட்டி வாங்கினதா பேசிக்கிறாங்களே.. உண்மையா?...
வேட்டில் வந்து பொட்டியை திறந்தால் , அந்த பொட்டி நிறைய அஞ்சல் அட்டிகள் இருந்ததாகவும் தகவல் கசிந்தது. பொட்டியில் இருந்த கடிதங்கள் கசியவில்லையே.. :P
//இதை எழுத மத்திய அமைச்சர் ராஜா கிட்ட பொட்டி வாங்கினதா பேசிக்கிறாங்களே.. உண்மையா?...//
அடப் பாவிகளா! இதை அரிசியலாக்குறீங்களேப்பா!
:))
இன்னுமா கடித வாரம் முடியல... அவ்வ்வ்..
இன்னுமா இந்த கூத்து முடியல? ;-)
//Blogger வீரசுந்தர் said...
இன்னுமா கடித வாரம் முடியல... அவ்வ்வ்..
Sat Aug 16, 12:39:00 AM
Delete
Blogger .:: மை ஃபிரண்ட் ::. said...
இன்னுமா இந்த கூத்து முடியல? ;-)//
இல்லை. இல்லவே இலை!
வெள்ளை அறிக்கைதான் விடுவீங்கன்னு பாத்தா கடிதம் எழுதீட்டீங்க்க.
//இன்னுமா இந்த கூத்து முடியல? ;-)// ரிப்பீட்டேய்
//இன்னுமா இந்த கூத்து முடியல? ;-)// ரிப்பீட்டேய்
//இல்லை. இல்லவே இலை!//
ரிப்பீட்டேய்
என்ன கூத்து நடக்குது இங்க.
இப்போத்தான் முழிச்சுக்கிட்ட முயல்:)
உங்களது இந்த உணர்வு பூர்வமான கடிதத்திற்கு நானும் ஆதரவளிக்கிறேன்.
/
SanJai said...
//(மேலே என்றால் மேலே அல்ல! கீழே)//
நல்ல வேளையாக இதை சொல்லிவிட்டீர்கள். இல்லை என்றார் நான் திரும்ப திரும்ப அதே பத்தியை படித்து இருப்பேன். :))
/
ரிப்பீட்டு
உங்களை வலையுலைகில் இருந்து விரட்ட லக்கிலுக் செய்யும் சதி இது...
தனி மெயில் அனுப்பவும்.
வெடிகுண்டு
முருகேசன்
(உண்மை தமிழன் பதிவில் கொண்டு சேர்க்கவும் நண்றி)
அஞ்சல் அட்டை வெளியிடுவதில் அஞ்சல் துறைக்கு நஷ்டமாம் அதனால நாட்டுக்கு நாம நல்லதுதாய்யா பண்ணுறோம்