
என்ன அநியாயம் இது! எங்க தலைவரை நீங்க மட்டும்தான் கலாய்ப்பீங்களா?
நாங்க விட்டுடுவமா? யாராரோ கலாய்க்கும்போது எங்களுக்கு மட்டும் அந்த உரிமை இல்லையா என்ன?
குசேலன்
-----------
கதை, இயக்குனர், பிற நடிகர்கள் என்று எல்லாம் முடிவு செய்தவுடனேயே எதிர்பார்க்கப் பட்டதுதான் இந்த ரிசல்ட்! அட்சரம் பிசகாமல் அப்படியே கிடைத்துள்ளது! இது வழக்கமான ஒன்றுதான் என்று சொன்னால் அது மிகையாகாது!
அப்போதே என் நண்பர்களிடம் சொல்லி வைத்திருந்தேன். மச்சான் வழக்கம்போல படம் அட்டர் ஃபிளாப் ஆகப் போகிறது என்று!
கதை, திரைக்கதை, இசை, ஒளிப்பதிவு, காமெடி டிராக், பாடல்கள், ஒப்பனை, சண்டைக் காட்சிகள் (கூட்டத்திலெ பசுபதி மிதிபடுறாரே, அதெல்லாம் ஸ்டண்ட் டிபார்ட்மெண்ட்லதான் வருமாமே) இத்யாதி இத்யாதி என்று படத்தின் அத்தனை கூறுகளிலும் ரசிகர்களுக்கு இம்மியளவும் ஏமாற்றமே வைக்காமல் சூப்பராக சொதப்பி இருக்கிறார்கள்.
மேலும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட தலைவர் வரும் காட்சிகளில் ரசிகர்களை ஏமாற்றாமல் தன் பங்குக்கு, தனது பாணியிலேயே சும்மா தூள்கிளப்பும் விதமாக சொதப்பி இருக்கிறார்.
எதிர்பார்த்த ரிசல்ட்டை விடவும் படு பயங்கரமாக படம் ஊத்திக் கொண்டதில் விநியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளர் தரப்பிலும் படு உற்சாமாகி இருக்கிறார்களாம்!
சூட்டோடு சூட்டாக அடுத்த படமான ரோபோவையும் இதை விடவும் பலமடங்கு பிளாப் ஆக்கிக் காட்ட வேண்டுமே என்ற கவலையில் உள்ளதாம் ரோபோ கூட்டணி!
கன்னடர்களைப் பழி வாங்கணும்னுதான் அங்கே படம் கண்டிப்பா ஓடணும்னு நீங்க மன்னிப்புக் கேட்டதை நாங்கதான் தப்பாப் புரிஞ்சிகிட்டோம்னு ரசிகர்கள் வட்டாரத்துலே இருந்து கடிதங்கள் கிளம்பி இருக்காம் தலைவருக்கு!
எது எப்படியோ வழக்கம் போல பிளாப் படத்தை ரசிகர்களுக்கு விருந்தாக்கிய தலைவர் ரோபோ சூட்டிங் முடிஞ்சவுடன் இமயமலை போயிட்டு வந்து அதிரடியா ஒரு அறிவிப்பை மனம் திறந்து தன் ரசிகர்களிட்டே பகிர்ந்துக்கப் போறாராம்! அதனாலே பா.ஜ. தலைமை இமயமலைலேர்ந்து தலைவர் வரதுக்கு முன்னாடி டில்லியிலேயே அவரை வளைச்சிப் போடணும்னு ரகசிய ஆலோசனைகள்கள் செஞ்சிகிட்டிருக்காம்!
----------------------------------------------------------------------------------------
இதுக்கு மேலயும் யாராலயாவது கலாய்க்க முடியுமா என்ன?
இறைவா!
நண்பர்களிடமிருந்து
குறிப்பாக ரசிகர்களிடமிருந்து
என்னைக் காப்பாற்று!
எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன்.
125 பின்னூட்டங்கள்:
மீ த ஃபர்ஸ்ட்ட்ட்டு!
பின் குறிப்பு:
இந்தப் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை என்பதைச் சொல்ல மறந்துவிட்டேன் என்று மறக்காமல் இங்கு சொல்லிக் கொல்கிறேன்!
கண் திறந்துருச்சா!!!! ஆண்டவாஆஆஆஆஆஅ நீ இருக்கே.... ::)))
இந்தப் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை என்பதைச் சொல்ல மறந்துவிட்டேன் என்று மறக்காமல் இங்கு சொல்லிக் கொல்கிறேன்!
<==================== இதெல்லாம் ஒத்துக்க முடியாது, கலாய்ச்சது கலாய்ச்சதுதான், குப்புற விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலை கேசுதான்... அப்ப, அவனா நீயூஊஊஊஊ ;).
//கண் திறந்துருச்சா//
கண் திறந்திருந்தால் கட்டாயம் முதல் பின்னூட்டம் கண்ணில் பட்டிருக்குமே தெக்ஸ்!
//கலாய்ச்சது கலாய்ச்சதுதான்,//
அதை யாரு இல்லேன்னா!
யாராரோ கலாய்க்கும்போது நான் உரிமையோட கலாய்க்குறேன்!
என்னைவிட கலாய்ப்பதற்கு வேறு எவர்க்கும் உரிமை இல்லைன்னு நிலை நாட்டணும்ல!
//இதெல்லாம் ஒத்துக்க முடியாது//
நீங்க ஒத்துக்குறதெல்லாம் யாருக்கு வேணும்? இல்லை நீங்க ஒத்துக்கிட்டாத்தான் ஆச்சுன்னு யாராச்சும் சொன்னாங்களா என்ன?
:)
ஊத்திக்கினு படுத்துக்கலாம்
படுத்துகினு ஊத்திக்கலாம்
போத்திகினு படுத்துக்கலாம்
படுத்துகினு போத்திக்கலாம்
குசேலனைப் போலவே இந்தப் பதிவையும் ஃபிளாப் ஆக்கும் சூழ்ச்சியில் வரும் பின்னூட்டங்களை அவ்வப்போழுதே அழித்துவிடும் விஷமிகளை வன்மையாகப் பாராட்டுகிறேன்!
ஹலோ யாரோ ஒரு புதுபையன் வந்து தலைவர் படத்தை கலாய்கலாமா? மக்களே இந்த புதியவரை வாங்க கும்மலாம்
//சூட்டோடு சூட்டாக அடுத்த படமான ரோபோவையும் இதை விடவும் பலமடங்கு பிளாப் ஆக்கிக் காட்ட வேண்டுமே என்ற கவலையில் உள்ளதாம் ரோபோ கூட்டணி!//
அடப்பாவி இன்னும் ரோபோ சூட்டிங் ஆரம்பிக்கவே இல்லை இப்பவே ப்ளாப்பா ?
//மக்களே இந்த புதியவரை வாங்க கும்மலாம்//
நான் ரெடி
///அப்போதே என் நண்பர்களிடம் சொல்லி வைத்திருந்தேன். மச்சான் வழக்கம்போல படம் அட்டர் ஃபிளாப் ஆகப் போகிறது என்று!///
நானும்..:)
ஆமா ஏன் லேட்டு...
///தலைவர் ரோபோ சூட்டிங் முடிஞ்சவுடன் இமயமலை போயிட்டு வந்து அதிரடியா ஒரு அறிவிப்பை மனம் திறந்து தன் ரசிகர்களிட்டே பகிர்ந்துக்கப் போறாராம்!///
என்னன்னு அப்ப புதுசா வந்திருக்கிற நடிகையோட டூயட் பாடப் போறேன்னா...
அல்லது இன்னொரு தோல்விப்படம் தரப்போறேன்னா...
இன்னா விமர்சனம்?
கட்சியெல்லாம் இப்ப நமக்கெதுக்கு காலத்தின் கையில் அது இருக்கு...:)
கலாய்கறதுக்கு பதிவ படிக்கணுமா வாலு?
இந்த மாதம் வெளியாகும் எங்கள் ஒலகநாயகன் படத்தை வேண்டுமென்றே பலாப் ஆக்க நடைபெறும் சதி இது.
படம் தியேட்டரை விட்டு போனாலும் என்னை போல் கல்நெஞ்ச காரர்களை படம் பார்க்க தூண்ட வைக்கும் இம்மாதிரியான பதிவுகளை வன்மையாக கண்டிக்கிறோம்
இவன்
ஒலகநாயகன்
ரித்தீஷ் மன்றம்
ஈரோட்டு கிளை
வால்பையன்
//இவன்
ஒலகநாயகன்
ரித்தீஷ் மன்றம்
ஈரோட்டு கிளை //
ஒரிஜினல் ஒலகம் கோவிச்சிக்க போறாரு?
//வெண்பூ said...
கலாய்கறதுக்கு பதிவ படிக்கணுமா வாலு?//
தேவையில்லை தான் ஆரம்பிக்கும் பொது கொஞ்சம் அவரையும் வம்பிளுக்கலாம்னு தான்
வால்பையன்
//என்னை போல் கல்நெஞ்ச காரர்களை //
ஹி..ஹி.. உண்மையை உரக்க சொல்றீங்க....
//ஒரிஜினல் ஒலகம் கோவிச்சிக்க போறாரு? //
அது உலகம்
இது ஒலகம்
வால்பையன்
//கதை, இயக்குனர், பிற நடிகர்கள் என்று எல்லாம் முடிவு செய்தவுடனேயே எதிர்பார்க்கப் பட்டதுதான் இந்த ரிசல்ட்//
நீங்க எப்ப எவாலுவேசன் பண்ணினீங்க?
//ஹி..ஹி.. உண்மையை உரக்க சொல்றீங்க.... //
அவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்
ரொம்ப நல்லவன்னு சொல்லுவாங்க
வால்பையன்
//அது உலகம்
இது ஒலகம் //
ஓ.. அப்ப இது வேறயா?
அப்படின்னா "சூப்பர் ஸ்டாரும்" "சப்ப ஸ்டாரும்" ஒண்ணேவா? வேற வேறயா?
கலாய்க்க முதலில் அழைத்த குசும்பன் எங்கே?
ஆரம்பித்துவிட்டு ஓடிட்டார் பாருங்களேன்
வால்பையன்
//அவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்
ரொம்ப நல்லவன்னு சொல்லுவாங்க //
கட்டின், 100, 150, குவாட்டர், ஹாஃப், ஃபுல் எவ்ளோ அடிச்சாலும் தாங்குவீங்களா? வேற மாதிரி சொன்னாங்க..
//கலாய்க்க முதலில் அழைத்த குசும்பன் எங்கே?
ஆரம்பித்துவிட்டு ஓடிட்டார் பாருங்களேன்
//
வாலியைக் கண்ட சுக்ரீவனைப் போல, வால்பையனை கண்டவுடன் குசும்பன் ஓடி ஒளிந்தார் என்று தெரிகிறது
//அப்படின்னா "சூப்பர் ஸ்டாரும்" "சப்ப ஸ்டாரும்" ஒண்ணேவா? வேற வேறயா? //
அதிலென்ன சந்தேகம்
இளைய தளபதி
புரட்சி தளபதி
இப்படி ஏகப்பட்ட தளபதிகள் கூட இருக்குறாங்க
(போருக்கு கூப்பிட்டா வருவாங்களான்னு தெரியல)
வால்பையன்
//அதிலென்ன சந்தேகம்
இளைய தளபதி
புரட்சி தளபதி
இப்படி ஏகப்பட்ட தளபதிகள் கூட இருக்குறாங்க
(போருக்கு கூப்பிட்டா வருவாங்களான்னு தெரியல)//
அதுதான் படத்துக்கு படம் நம்மள போர் அடிக்கிறானுங்களே...
//வாலியைக் கண்ட சுக்ரீவனைப் போல, வால்பையனை கண்டவுடன் குசும்பன் ஓடி ஒளிந்தார் என்று தெரிகிறது //
கும்மி சங்க தலைவர் அப்படியெல்லாம் செய்யமாட்டார்.
ஏதாவது அவசர வேலையாயிருக்கும்.
முடித்துவிட்டு வருவார் காத்திருக்கலாம்
//கும்மி சங்க தலைவர் அப்படியெல்லாம் செய்யமாட்டார்.
ஏதாவது அவசர வேலையாயிருக்கும்.
முடித்துவிட்டு வருவார் காத்திருக்கலாம் //
அவசர வேலைக்கி போயிட்டு கும்மியை நெனச்சிட்டே தண்ணி ஊத்தாம வந்துடப் போறாரு.. ஒரு பிங் பண்ணி ஞாபகப்படுத்துங்க
//ஆமா.. நாமக்கல் சிபி எந்த ஊர்க்காரரு???//
//கும்மி சங்க தலைவர் அப்படியெல்லாம் செய்யமாட்டார்.
ஏதாவது அவசர வேலையாயிருக்கும்.
முடித்துவிட்டு வருவார் காத்திருக்கலாம் //
தலைவா அவர் கும்முனா நாமெல்லாம் தாங்க மாட்டோம்.
ஆமா பதிவோட ஓனர் எங்க? கும்மியில கலந்துக்காம எங்க போனாரு?
////ஆமா.. நாமக்கல் சிபி எந்த ஊர்க்காரரு???// //
எனக்கு தெரிஞ்சி சிபின்னு எந்த ஊரும் இல்ல
அதனால நாமக்கல்லா தான் இருக்கணும்
//ஆமா பதிவோட ஓனர் எங்க? கும்மியில கலந்துக்காம எங்க போனாரு?//
ஓரமா நின்னு வேடிக்கை பார்ப்பார்ன்னு நினைக்கிறேன்
//தலைவா அவர் கும்முனா நாமெல்லாம் தாங்க மாட்டோம்.//
வரச்சொல்லுங்கய்யா.. இப்படி ஒரு மனுசனத்தான் தேடிகிட்டே இருக்கேன்..
//ஓரமா நின்னு வேடிக்கை பார்ப்பார்ன்னு நினைக்கிறேன் //
ஓனர்னா ஓரமா நிக்கணும்னு கவுண்டமணி சொன்னத ஃபாலோ பண்றாரு போல
//ஓனர்னா ஓரமா நிக்கணும்னு கவுண்டமணி சொன்னத ஃபாலோ பண்றாரு போல //
இருக்கும் இருக்கும்
ஆமா வாலு, உங்களுக்கு அரசு அலுவலகத்துல எல்லாம் பயங்கர செல்வாக்குன்னு பரிசல் சொல்லியிருந்தாரே.. இன்னிக்கு போகலயா?
//வரச்சொல்லுங்கய்யா.. இப்படி ஒரு மனுசனத்தான் தேடிகிட்டே இருக்கேன்.. //
எதுக்கும் முதுகுல ரெண்டு தலையணை கட்டிக்கங்க
//
நாமக்கல் சிபி said...
மீ த ஃபர்ஸ்ட்ட்ட்டு!
//
பின்னூட்ட கயமைத்தனத்துக்கு பெஸ்டஸ்ட் எக்ஜாம்பிள்...
//உங்களுக்கு அரசு அலுவலகத்துல எல்லாம் பயங்கர செல்வாக்குன்னு பரிசல் சொல்லியிருந்தாரே.. இன்னிக்கு போகலயா? //
சனி ஞாயிறு மட்டும் தான்
மத்த நாள்ல நான் ரொம்பா நல்லவன்
//பின்னூட்ட கயமைத்தனத்துக்கு பெஸ்டஸ்ட் எக்ஜாம்பிள்... //
அரசாங்கமே நமக்கு நாமே திட்டம்னு ஒன்னு வச்சிருக்கல
அது மாதிரி தான்
//சனி ஞாயிறு மட்டும் தான்
மத்த நாள்ல நான் ரொம்பா நல்லவன் //
அடப்பாவிகளா!! உங்களையெல்லாம் நம்பி அரசாங்கம் நலத்திட்டங்கள் போட்டா, நீங்க வாரத்துல ரெண்டு நாளு மட்டும் போனா அரசாங்கம் பணத்துக்கு என்ன பண்ணும்?
//
அடப்பாவிகளா!! உங்களையெல்லாம் நம்பி அரசாங்கம் நலத்திட்டங்கள் போட்டா, நீங்க வாரத்துல ரெண்டு நாளு மட்டும் போனா அரசாங்கம் பணத்துக்கு என்ன பண்ணும்?
//
டிஸ்கி: நான் சொன்னது கேப்டனின் "அரசாங்கம்" அல்ல
//வாரத்துல ரெண்டு நாளு மட்டும் போனா அரசாங்கம் பணத்துக்கு என்ன பண்ணும்? //
அதுக்கே டவுசர் அவுருது, தினமும் போன என்ன ஆவுறது
//நான் சொன்னது கேப்டனின் "அரசாங்கம்" அல்ல //
அந்த இழவ பாக்குறதுக்கு தினமும் அலுவலகத்துக்கு போலாமே
//அரசாங்கமே நமக்கு நாமே திட்டம்னு ஒன்னு வச்சிருக்கல //
இந்த திட்டத்தோட பேரை கேட்டவுடனே எனக்கு வேற என்னமோ ஒண்ணு ஞாபகம் வந்து தொலைக்குது..
//அதுக்கே டவுசர் அவுருது, தினமும் போன என்ன ஆவுறது //
நீங்கதான் எவ்ளோ அடிச்சாலும் தாங்குவீங்கல்ல.. அப்புறம் என்ன டவுசர பத்தி கவல?
//இந்த திட்டத்தோட பேரை கேட்டவுடனே எனக்கு வேற என்னமோ ஒண்ணு ஞாபகம் வந்து தொலைக்குது.. //
வரும் வரும்! உங்களுக்கெல்லாம் பத்து மாத்ருபூதம் வேணும்
//அந்த இழவ பாக்குறதுக்கு தினமும் அலுவலகத்துக்கு போலாமே //
குசேலன், குருவியை கும்முன பதிவர்கள் அரசாங்கத்த மட்டும் கண்டுக்கவே இல்லையே வாலு...
//வரும் வரும்! உங்களுக்கெல்லாம் பத்து மாத்ருபூதம் வேணும்//
இருந்த ஒரு மாத்ருபூதமும் போய் சேந்துட்டாரேன்னு வருத்தத்துல இருக்குறப்ப 10 பேரா... அட போங்கய்யா...
//வால்பையன் said...
//கும்மி சங்க தலைவர் அப்படியெல்லாம் செய்யமாட்டார்.
ஏதாவது அவசர வேலையாயிருக்கும்.
முடித்துவிட்டு வருவார் காத்திருக்கலாம்//
புரிதலுக்கு நன்றி நண்பா! சாட்டிக்கில் ஒரு முக்கிய வேலை இருந்தது அதான் அங்க அவசரமாக சென்று அந்த வேலைய முடிச்சுட்டேன்:)
//குசேலன், குருவியை கும்முன பதிவர்கள் அரசாங்கத்த மட்டும் கண்டுக்கவே இல்லையே வாலு... //
அவரு தமிழக முதலமைச்சரானா தமிழ் வலைப்பதிவர்களா உள்ள தள்ளுவேன்னு சொல்லிருக்காராமா
//நான் சொன்னது கேப்டனின் "அரசாங்கம்" அல்ல //
அந்த இழவ பாக்குறதுக்கு தினமும் அலுவலகத்துக்கு போலாமே//
மிகவும் ரசித்த பின்னூட்டம்! நன்றி
வால்பையன் said...
//உங்களுக்கு அரசு அலுவலகத்துல எல்லாம் பயங்கர செல்வாக்குன்னு பரிசல் சொல்லியிருந்தாரே.. இன்னிக்கு போகலயா?//
டாஸ்மாக் கூட அரசு அலுவலகம் தான்:))) சரியா வால்:))))
//சாட்டிக்கில் ஒரு முக்கிய வேலை இருந்தது //
வேலையை விட்டுட்டு கும்மியா? குசும்பனுக்கு ஒரு பகிரங்க கடிதம்னு பதிவு போட்டுட வேண்டியதுதான்..
//டாஸ்மாக் கூட அரசு அலுவலகம் தான்:))) சரியா வால்:)))) //
அப்பாடா... ட்யூப் லைட் கடைசியா எரிஞ்சிடுச்சி...
//சாட்டிக்கில் ஒரு முக்கிய வேலை இருந்தது அதான் அங்க அவசரமாக சென்று அந்த வேலைய முடிச்சுட்டேன்:) //
உங்கள மாதிரி பெரிய பெரிய ஆபிசருகேல்லாம் இப்படி தான் வேலை இருந்துகிட்டே இருக்கும்
//நாமக்கல் சிபி said...
மிகவும் ரசித்த பின்னூட்டம்! நன்றி
//
வாங்க தல. ஒரு சிறு அறிமுகம். நான் ராசிபுரத்துகாரன். இப்போது இருப்பது சென்னையில்.
கும்மி கன்டின்யூ
//குசும்பனுக்கு ஒரு பகிரங்க கடிதம்னு பதிவு போட்டுட வேண்டியதுதான்.. //
இந்த வாரம்
பகிரங்க வாரம்
////குசும்பனுக்கு ஒரு பகிரங்க கடிதம்னு பதிவு போட்டுட வேண்டியதுதான்.. //
இந்த வாரம்
பகிரங்க வாரம் //
கூடவே விடை பெறுகிறேன் மற்றும் சீரியஸா எடுத்துக்காதீங்கப்பா வாரம்
வெண்பூவுக்கு ஒரு பகிரங்க பின்னூட்டம்!
எப்படியோ குசேலனை பிளாப் ஆக விடாம தடுத்துட்டீங்க நீங்களும் வால்பையனும்! நன்றி!
//நான் ராசிபுரத்துகாரன்.//
உன்னோட ராசி நல்ல ராசி
//வெண்பூவுக்கு ஒரு பகிரங்க பின்னூட்டம்!
எப்படியோ குசேலனை பிளாப் ஆக விடாம தடுத்துட்டீங்க நீங்களும் வால்பையனும்! நன்றி! //
ரஜினி ரசிகர்கள் என்றால் சும்மாவா?
/கூடவே விடை பெறுகிறேன் மற்றும் சீரியஸா எடுத்துக்காதீங்கப்பா வாரம்//
((" / "))
( )
-
//வால்பையன் said...
உன்னோட ராசி நல்ல ராசி
//
கடக ராசி நல்ல ராசிங்களா?
//எப்படியோ குசேலனை பிளாப் ஆக விடாம தடுத்துட்டீங்க நீங்களும் வால்பையனும்! நன்றி! //
இதே மாதிரி எங்க ஒலகநாயகன் படத்தையும் பெரிய ஹிட் ஆக்கணும்
//ரஜினி ரசிகர்கள் என்றால் சும்மாவா? //
நான் நயன்தாரா ரசிகன்
நம்மளது மகர ராசி!
அப்போ நீங்க?
//கடக ராசி நல்ல ராசிங்களா? //
ஐயோ உங்களுக்கு கேன்சரா
//நான் நயன்தாரா ரசிகன்//
கெளம்பீட்டாங்கைய்யா கெளம்பீட்டாங்கைய்யா
//இதே மாதிரி எங்க ஒலகநாயகன் படத்தையும் பெரிய ஹிட் ஆக்கணும் //
அட எத்தன பேரு இப்பவே மொக்க விமர்சனத்த போட்டு வெச்சிகிட்டு வெய்ட் பண்ணிட்டு இருக்காங்களோ?? அட நானாத்தான் உளறிட்டனா?
//அப்போ நீங்க? //
பிகருகளுக்கு எது புடிக்குமோ அந்த ராசி
//இதே மாதிரி எங்க ஒலகநாயகன் படத்தையும் பெரிய ஹிட் ஆக்கணும்//
பின்னே ஒலக நாயகன்னா சும்மாவா!
//அட எத்தன பேரு இப்பவே மொக்க விமர்சனத்த போட்டு வெச்சிகிட்டு வெய்ட் பண்ணிட்டு இருக்காங்களோ?? அட நானாத்தான் உளறிட்டனா? //
முன்கனிப்புகளுக்கு இங்கே இடமில்லை, படம் சூப்பர் டூப்பர் ஹிட் என்பது உறுதி
எங்க போயிட்டிங்க எல்லாம்
//வால்பையன் said...
ஐயோ உங்களுக்கு கேன்சரா
//
ஆமான்னு சொன்னா உடனே என் செலவுல திருப்பதி போயிட்டு ஜிலேபி ..ச்சீ.. லட்டு வாங்கிட்டு வரப்போறீங்களா?
இன்னும் நூறு கூட ஆவல
அதுக்குள்ள ரெஸ்டா
//எங்க போயிட்டிங்க எல்லாம்
//
நடுவுல ஒரு போனு அதுக்குள்ள எல்லாரும் காணாம போயிட்டீங்க?
வானத்துல இருந்து தண்ணி விழுந்தா அது மழை
அதே இடியா வந்தா அது ரித்தீஷ்
//ஆமான்னு சொன்னா உடனே என் செலவுல திருப்பதி போயிட்டு ஜிலேபி ..ச்சீ.. லட்டு வாங்கிட்டு வரப்போறீங்களா?//
மலேசியாவுல ஒரு முருகன் கோவில் இருக்காம்ல
உங்க புண்ணியத்துல அங்கே போக வேண்டியது தான்
சிபிக்கு ஒரு அந்தரங்க பின்னூட்டம்
உங்களுக்கு வரும் பின்னூட்டங்களில் 3% க்கு குறைவா நீங்க பின்னூட்டம் போட்டு இருந்தா பதிவை விட்டு நீங்க வேலை பார்க்கிறீங்க என்று அர்த்தம். இனி அப்படி இருக்க கூடாது இதுதான் வயசு இந்த வயசில்தான் கும்மனும்:))
இப்படிக்கு
அட்வைஸ் ஆறுமுகம்
தமிழ் மணத்துல இருக்கும் என் ரசிகர்களின் அன்புக்கு முன்னாடி தலை குப்புற விழுகிறேன்
Anonymous ரித்தீஷ் said...
வானத்துல இருந்து தண்ணி விழுந்தா அது மழை
அதே இடியா வந்தா அது ரித்தீஷ//
என் வாயிலேந்து அசிங்கமா வருது அதுக்குள்ள ஓடி போய்டு!!!
///குசும்பன் said...
சிபிக்கு ஒரு அந்தரங்க பின்னூட்டம்
உங்களுக்கு வரும் பின்னூட்டங்களில் 3% க்கு குறைவா நீங்க பின்னூட்டம் போட்டு இருந்தா பதிவை விட்டு நீங்க வேலை பார்க்கிறீங்க என்று அர்த்தம். இனி அப்படி இருக்க கூடாது இதுதான் வயசு இந்த வயசில்தான் கும்மனும்:))
இப்படிக்கு
அட்வைஸ் ஆறுமுகம்///
என்னோட அடுத்த படத்துல இதுதான் ஹிட் வசனம்
குசும்பனுக்கு ஒரு கெஸ்ட் ரோல் கொடுக்கிறேன்
//தமிழ் மணத்துல இருக்கும் என் ரசிகர்களின் அன்புக்கு முன்னாடி தலை குப்புற விழுகிறேன் //
ஐயோ தலைவா உங்களுக்கு ஏதாவது ஆகிட்டா, நான் பத்து பேர்த்த தீ குளிக்க வைப்பேன்
அந்தரங்க பின்னூட்டத்த எதுக்குங்க பப்ளிக்ல போடுறீங்க?
//ரித்தீஷ் said...
தமிழ் மணத்துல இருக்கும் என் ரசிகர்களின் அன்புக்கு முன்னாடி தலை குப்புற விழுகிறேன்
//
மீசையில மண்ணு ஒட்டிக்க போவுது..
///குசும்பன் said...
Anonymous ரித்தீஷ் said...
வானத்துல இருந்து தண்ணி விழுந்தா அது மழை
அதே இடியா வந்தா அது ரித்தீஷ//
என் வாயிலேந்து அசிங்கமா வருது அதுக்குள்ள ஓடி போய்டு!!!///
என்னோட சேர்ந்து டபுள் ஹீரோ கேரக்டரில் போட்டுக்கிறேன். இந்த வ்சனமும் சூப்பர்
//என் வாயிலேந்து அசிங்கமா வருது அதுக்குள்ள ஓடி போய்டு!!!//
தலைவா என்ன இது நீங்களே கோபப்படலாமா
//வால்பையன் said...
ஐயோ தலைவா உங்களுக்கு ஏதாவது ஆகிட்டா, நான் பத்து பேர்த்த தீ குளிக்க வைப்பேன்
//
பத்து பேர் தீக்குளிக்கறது இருக்கட்ட்டும்.. இன்னிக்கு நீங்க குளிச்சீங்களா?
நான் அடிச்சா அது மரணஅடி
நான் கொடுத்தா அது வள்ளல்படி
//என்னோட அடுத்த படத்துல இதுதான் ஹிட் வசனம்
குசும்பனுக்கு ஒரு கெஸ்ட் ரோல் கொடுக்கிறேன்//
ஸாரி.. அவரு ரோபோ படத்துல ரொம்ப பிஸி..
///வெண்பூ said...
//வால்பையன் said...
ஐயோ தலைவா உங்களுக்கு ஏதாவது ஆகிட்டா, நான் பத்து பேர்த்த தீ குளிக்க வைப்பேன்
//
பத்து பேர் தீக்குளிக்கறது இருக்கட்ட்டும்.. இன்னிக்கு நீங்க குளிச்சீங்களா?///
என்னது குளிப்பதா? இது ரசிகர் மன்ற கொள்கைக்கு எதிரானது. யாரும் நாயகன் வரும்வரை குளிக்கக் கூடாது
100
100
வெண்பூ said...
அந்தரங்க பின்னூட்டத்த எதுக்குங்க பப்ளிக்ல போடுறீங்க?//
ஹலோ வாரமலரில் அந்தரங்க கடிதம் என்று எனக்கு பக்கத்து வீட்டுக்காரன் மேல ஒரு இது அதனால நான் அவர் கூட ஓடி போய்விடலாமா என்று கேள்வி கேட்கிறார்கள், நான் பின்னூட்டம் போட்டா தப்பா:(((
என்ன கொடுமை இது
வாரமலருக்கு ஒரு சட்டம் இந்த அப்பாவி சிறுவனுக்கு ஒரு சட்டமா?
மிஸ்டர் வால் என்னான்னு கேளுங்க!!!
/பத்து பேர் தீக்குளிக்கறது இருக்கட்ட்டும்.. இன்னிக்கு நீங்க குளிச்சீங்களா?//
என்ன கேட்டிங்க ஸாரி நான் டீ குடிக்கிறதில்ல
//ரித்தீஷ் said...
நான் அடிச்சா அது மரணஅடி
நான் கொடுத்தா அது வள்ளல்படி
//
எட்டாவது வள்ளல் அண்ணன் ரித்தீஷ்.. வால்க வால்க...
என்னோட படங்கள் நூறு அடிப்பது மாதிரி நானும் நூறு அடிக்காம போக மாட்டேன்
வால்பையன் said...
//என் வாயிலேந்து அசிங்கமா வருது அதுக்குள்ள ஓடி போய்டு!!!//
தலைவா என்ன இது நீங்களே கோபப்படலாமா//
இல்லீங்க அவரு டான்ஸ் ஆடும் அழகை ஒரு பதிவில் பார்த்தேன் அதான் அதில் இருந்து இன்னும் மீண்டு வரவில்லை:(((
//ஹலோ வாரமலரில் அந்தரங்க கடிதம் என்று எனக்கு பக்கத்து வீட்டுக்காரன் மேல ஒரு இது அதனால நான் அவர் கூட ஓடி போய்விடலாமா என்று கேள்வி கேட்கிறார்கள், நான் பின்னூட்டம் போட்டா தப்பா:(((//
நீங்களும் அதை படிச்சிருவீங்களா? நானும் தவறாம... ஹி.ஹி..
//வாரமலருக்கு ஒரு சட்டம் இந்த அப்பாவி சிறுவனுக்கு ஒரு சட்டமா?
மிஸ்டர் வால் என்னான்னு கேளுங்க!!!//
அதானே
இனிமேல் எங்கள் அந்தரங்கங்கள் அனைத்தும் அவுத்து வெளியே காட்டப்படும்
Blogger வெண்பூ said...
//என்னோட அடுத்த படத்துல இதுதான் ஹிட் வசனம்
குசும்பனுக்கு ஒரு கெஸ்ட் ரோல் கொடுக்கிறேன்//
ஸாரி.. அவரு ரோபோ படத்துல ரொம்ப பிஸி..//
ரொம்ப பசிக்குது அல்லீஸ்ட் இப்ப ஒரு சிக்கன் ரோலாவது கொடுங்கப்பா!!!
//வால்பையன் said...
என்ன கேட்டிங்க ஸாரி நான் டீ குடிக்கிறதில்ல
//
நீங்க என்ன குடிப்பீங்கன்னுதான் ஊருக்கே தெரியுமே???
வெண்பூ said...
நீங்களும் அதை படிச்சிருவீங்களா? நானும் தவறாம... ஹி.ஹி..//
ஆமாங்க ரொம்ப காமெடியா இருக்கும்:))
//குசும்பன் said...
Blogger வெண்பூ said...
//என்னோட அடுத்த படத்துல இதுதான் ஹிட் வசனம்
குசும்பனுக்கு ஒரு கெஸ்ட் ரோல் கொடுக்கிறேன்//
ஸாரி.. அவரு ரோபோ படத்துல ரொம்ப பிஸி..//
ரொம்ப பசிக்குது அல்லீஸ்ட் இப்ப ஒரு சிக்கன் ரோலாவது கொடுங்கப்பா!!!
//
ஸாரி.. கெட்டப் சேஞ்சுக்காக நீங்க 6 மாசம் சாப்பிடாம இருக்கணும்னு ஷங்கர் சொல்லியிருக்காரு...
//இல்லீங்க அவரு டான்ஸ் ஆடும் அழகை ஒரு பதிவில் பார்த்தேன் அதான் அதில் இருந்து இன்னும் மீண்டு வரவில்லை:(((//
நீங்க தப்பா புரிஞ்சிகிட்டிங்க
அவரு எப்படி ஆடகூடாதுன்னு சொல்லி கொடுத்தார்
வால்பையன் said...
அதானே
இனிமேல் எங்கள் அந்தரங்கங்கள் அனைத்தும் அவுத்து வெளியே காட்டப்படும்///
அவ்வ்வ்வ்வ்வ்வ் நான் வரல இந்த விளையாட்டுக்கு!!!
//கெட்டப் சேஞ்சுக்காக நீங்க 6 மாசம் சாப்பிடாம இருக்கணும்னு ஷங்கர் சொல்லியிருக்காரு... //
கொஞ்சம் நாட்ல சாப்பாட்டு பஞ்சமும் தீர வாய்பிருக்கு
வெண்பூ said...
ஸாரி.. கெட்டப் சேஞ்சுக்காக நீங்க 6 மாசம் சாப்பிடாம இருக்கணும்னு ஷங்கர் சொல்லியிருக்காரு...///
ஹோ பிணமா நடிக்க ரியலா ஒரு பாடி வேணும் அதுதானே உங்க குறிக்கோள்!!!
நல்லா இருங்க!
//வால்பையன் said...
அதானே
இனிமேல் எங்கள் அந்தரங்கங்கள் அனைத்தும் அவுத்து வெளியே காட்டப்படும்
//
நாளைக்கு தினமலர்ல ஈரோட்டு நீயூஸ் பாக்கணும்டோய்.. எத்தன பேருக்கு கண்ணு நொள்ளயா போச்சின்னு
//அவ்வ்வ்வ்வ்வ்வ் நான் வரல இந்த விளையாட்டுக்கு!!!//
விடுங்க தலைவா மத்தவங்களுத அவுத்து விட்ருவோம்
ரைட்டு அப்ப கிளம்புறேன் டாட்டா பை பை
// குசும்பன் said...
வால்பையன் said...
அதானே
இனிமேல் எங்கள் அந்தரங்கங்கள் அனைத்தும் அவுத்து வெளியே காட்டப்படும்///
அவ்வ்வ்வ்வ்வ்வ் நான் வரல இந்த விளையாட்டுக்கு!!!
//
பின்ன அது என்னா ஈரோடா? கட்டிங் பண்ணிட்டா என்னா பண்றதுன்னு ஒரு பயம் இருக்கத்தானு செய்யும்..
//பின்ன அது என்னா ஈரோடா? கட்டிங் பண்ணிட்டா என்னா பண்றதுன்னு ஒரு பயம் இருக்கத்தானு செய்யும்.. //
எங்க குசும்பனோட அழுக்குக்கு ஸாரி ஸ்பெல்லிங் மிஸ்டேக் அழகுக்கு நீ நானு போட்டி போடுவாங்க,
ஒவ்வொரு வீட்லயும் ஐஞ்சு ஐஞ்சு நாலு வச்சு அழகு பாப்பாங்கன்னா பாத்துகேங்க்களேன்
சரிப்பா.. நானும் கெளம்புறேன்.. நன்றி.. பை.பை...
கும்மி குத்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி
வால்பையன்
//தமிழன்... said...
///அப்போதே என் நண்பர்களிடம் சொல்லி வைத்திருந்தேன். மச்சான் வழக்கம்போல படம் அட்டர் ஃபிளாப் ஆகப் போகிறது என்று!///
நானும்..:)//
நானும்..:)
இந்தப் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை:)
ஏற்கெனவெ கொத்து பரோட்டா போட்டுடங்க.
நீங்க நாமக்கல் சார்ப்பா கொத்து கறி போட்டுட்டிங்க. ( நாமக்கல் மானத்த காப்பத்திட்டிங்க)
நல்ல கலாய்ப்பு.
நாமக்கல்ல எந்த தியேட்டர்ல படம் போட்ருக்கான்?
சாந்தியா? ஜோதியா?
( நான் சென்னை-ல் உள்ள நாமக்கல்லான்)