**** கதைகள் (1)
10:42 AM | Author: நாமக்கல் சிபி
சமீப காலமாக(!?) தமிழ் மணம் முகப்புப் பக்கத்தில் ஏதாவது ஒரு மூலையிலேனும் **** கதைகள் என்ற வார்த்தைகள் கட்டாயமாக இடம்பெற்று வருவது அனைவரும் அறிந்ததே! இது பற்றி வாசகர்கள் சிலரிடம் கருத்து கேட்டபோது!

சேகர், சென்னி மலை (கல்லூரி மாணவர்): "அடப் போங்க சார்! **** கதைகள்னு தலைப்புதான் இருக்கே ஒழிய உள்ளே போயி படிச்சிப் பார்த்தா வெறும் மொக்கைதான்! இதுக்காக நான் தினமும் வீட்டுல எல்லாரும் தூங்கின பிறகு திருட்டுத் தனமா தமிழ்மணத்தைத் திறந்து பார்த்து, எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து போனதுதான் மிச்சம் தயவு செஞ்சி தலைப்பை மாத்தச் சொல்லுங்க நாட்டாமை!"

ராஜசேகரன், ராசாக் கவுண்டனூர் : "எங்க ஊர்ல இண்டர்நெட்டு இல்லைன்னு சைக்கிள் எடுத்துகிட்டு பக்கத்து ஊரு பிரவுசிங் செண்டருக்கு போயி முக்காடு போட்டுகிட்டு படிச்சிப் பார்த்தேன், அப்படி ஒண்ணும் எதிர்பார்த்த அளவு இல்லை! வெறும் தலைப்பைப் படிச்சி ஏமாந்துடாதீங்க, அவ்வளவுதான் சொல்லிட்டேன்"

கணபதி(குடும்பத் தலைவர்) : "என்னடா எப்பப் பார்த்தாலும் என் மவன் தமிழ்மணமே கதின்னு கிடக்கறானேன்னு ஒரு நாள் நானும் எட்டிப்பார்த்தேன்! அப்புறம்தான் தெரிஞ்சது அதுல நிறைய **** கதைகள்னு வருதேன்னு! அப்புறம் பெல்ட்டாலே அவன் தோலை உறிச்சிட்டம்ல! படிக்குற வயசுல எதை எதை படிக்கணும்னு ஒரு வரைமுறை இருக்குல்ல! அதையும் வீட்டுலயே வேற தைரியமா படிச்சிகிட்டி இருக்கான்னா பார்த்துக்குங்க! எந்த அளவுக்கு கெட்டுப் போயி கிடக்குறான்னு"


மலேசியாவில் இருந்து விக்னேஷ்வரன்: இப்போது தமிழ் மணத்தில் இது ஒரு வியாதினு நினைக்கிறேன். **** என்ற சொல்லுக்குதான் அதிக ஹிட் கிடைக்கிறதாம். என் கருத்து என்ன என்றால் தமிழ் மணத்தில் சேர்க்கும் பதிகளுக்கு தலைப்பு இல்லாமல் இருந்தால் நல்லது...

லேட்டஸ்ட் செய்தி : இது போன்ற கதைகளையோ அல்லது தலைப்புகளைக் (உம். **** கதைகள், 18/21 வயது கதைகள்/ **** ...) கொண்ட பதிவுகளையோ தமிழ்மணம் திரட்டக் கூடாது என்று தமிழ்-கதைகள் திரட்டி நிர்வாகிகள் தமிழ்மணத்திற்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இதனால் தங்கள் திரட்டிக்கு வாசகர் வருகை குறைந்து வருவதையும் சுட்டிக்காட்டி உள்ளார்களாம்!
This entry was posted on 10:42 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

45 பின்னூட்டங்கள்:

On Sun Jul 06, 11:01:00 AM , VIKNESHWARAN ADAKKALAM said...

மலேசியாவில் இருந்து விக்னேஷ்வரன்: இப்போது தமிழ் மணத்தில் இது ஒரு வியாதினு நினைக்கிறேன். காமம் என்ற சொல்லுக்குதான் அதிக ஹிட் கிடைக்கிறதாம். என் கருத்து என்ன என்றால் தமிழ் மணத்தில் சேர்க்கும் பதிகளுக்கு தலைப்பு இல்லாமல் இருந்தால் நல்லது...

 
On Sun Jul 06, 11:05:00 AM , கூடுதுறை said...

ஆகா உங்களூக்கும் ஒரு சாக்கு கிடைத்துவிட்டதா?

இப்படி ஆரம்பிக்க?

 
On Sun Jul 06, 11:05:00 AM , VIKNESHWARAN ADAKKALAM said...

xxx என திரு ஹரி அவர்கள் ஒரு கொலை வெறி கதையை எழுதி வருகிறார். ஜட்டிக் கதைகள் என லக்கி லுக் ஒரு தீவிர ஜட்டி ஆராய்ச்சியில் இரங்கி இருக்கிறார்... இப்படியே போனால் இன்னும் ஓர்ரிரு வருடத்தில் தமிழ் மணம் தமிழர்களின் செக்ஸ் போர்ட்டல் (portal) என பெயர் பெற்றுவிடும்...

 
On Sun Jul 06, 11:07:00 AM , நாமக்கல் சிபி said...

//xxx என திரு ஹரி அவர்கள் ஒரு கொலை வெறி கதையை எழுதி வருகிறார். ஜட்டிக் கதைகள் என லக்கி லுக் ஒரு தீவிர ஜட்டி ஆராய்ச்சியில் இரங்கி இருக்கிறார்... இப்படியே போனால் இன்னும் ஓர்ரிரு வருடத்தில் தமிழ் மணம் தமிழர்களின் செக்ஸ் போர்ட்டல் (portal) என பெயர் பெற்றுவிடும்...//

கண்டிப்பா விக்னேஷ்வரன்! கருத்துக்கு நன்றி!

 
On Sun Jul 06, 11:07:00 AM , VIKNESHWARAN ADAKKALAM said...

இதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் கோவி.கண்ணனும் 18 வயது கதைகள் 21 வயது கதைகள்னு கலக்கிட்டு வராரு... அவரையும் பேட்டி எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்...

 
On Sun Jul 06, 11:08:00 AM , நாமக்கல் சிபி said...

//இதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் கோவி.கண்ணனும் 18 வயது கதைகள் 21 வயது கதைகள்னு கலக்கிட்டு வராரு... அவரையும் பேட்டி எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்...//

:) எடுத்துடுவோம்!

 
On Sun Jul 06, 11:09:00 AM , VIKNESHWARAN ADAKKALAM said...

இல்லை இது சரிபட்டு வராது.... நானும் இனிக் காமக் கதைகள் எழுத போறேன்....

 
On Sun Jul 06, 11:10:00 AM , VIKNESHWARAN ADAKKALAM said...

நானும் காமக் கதைகள் எழுத விரும்புவதால் மேல் காணும் பின்னூட்டங்களை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்...

 
On Sun Jul 06, 11:13:00 AM , நாமக்கல் சிபி said...

//இல்லை இது சரிபட்டு வராது.... நானும் இனிக் காமக் கதைகள் எழுத போறேன்....//

அது சரி!

 
On Sun Jul 06, 11:14:00 AM , நாமக்கல் சிபி said...

//நானும் காமக் கதைகள் எழுத விரும்புவதால் மேல் காணும் பின்னூட்டங்களை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்...//

ஆஹா! இவரையும் கெளப்பீட்டான்ங்கைய்யா! கெளப்பீட்டாங்கைய்யா!

 
On Sun Jul 06, 11:30:00 AM , நிஜமா நல்லவன் said...

தள சூப்பர்!

 
On Sun Jul 06, 11:30:00 AM , நிஜமா நல்லவன் said...

பின்னிட்டீங்க!!!

 
On Sun Jul 06, 11:31:00 AM , நிஜமா நல்லவன் said...

கல(ந)க்கல் பதிவு!!!

 
On Sun Jul 06, 11:31:00 AM , நிஜமா நல்லவன் said...

இத இதை தான் நான் உங்க கிட்ட எதிர்பார்த்தேன்!!!!

 
On Sun Jul 06, 11:35:00 AM , நிஜமா நல்லவன் said...

///லேட்டஸ்ட் செய்தி : இது போன்ற கதைகளையோ அல்லது தலைப்புகளைக் (உம். காமக் கதைகள், 18/21 வயது கதைகள்/ ஜட்டி...) கொண்ட பதிவுகளையோ தமிழ்மணம் திரட்டக் கூடாது என்று தமிழ்-கதைகள் திரட்டி நிர்வாகிகள் தமிழ்மணத்திற்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இதனால் தங்கள் திரட்டிக்கு வாசகர் வருகை குறைந்து வருவதையும் சுட்டிக்காட்டி உள்ளார்களாம்!///


:))))))))))))))))))))))

 
On Sun Jul 06, 11:36:00 AM , VIKNESHWARAN ADAKKALAM said...

//இது போன்ற கதைகளையோ அல்லது தலைப்புகளைக் (உம். காமக் கதைகள், 18/21 வயது கதைகள்/ ஜட்டி...) கொண்ட பதிவுகளையோ தமிழ்மணம் திரட்டக் கூடாது என்று தமிழ்-கதைகள் திரட்டி நிர்வாகிகள் தமிழ்மணத்திற்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இதனால் தங்கள் திரட்டிக்கு வாசகர் வருகை குறைந்து வருவதையும் சுட்டிக்காட்டி உள்ளார்களாம்!//

இதை நான் ரிப்பீட்டுகிறேன்....

 
On Sun Jul 06, 11:57:00 AM , முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) இதுக்கு பாகம் எண்ணிக்கையெல்லாம் வேற போட்டிருக்கீங்க பேட்டி தொடருமோ..?

 
On Sun Jul 06, 12:07:00 PM , நாமக்கல் சிபி said...

//:) இதுக்கு பாகம் எண்ணிக்கையெல்லாம் வேற போட்டிருக்கீங்க பேட்டி தொடருமோ..?//

கண்டிப்பா தொடரும்!

 
On Sun Jul 06, 12:17:00 PM , Anonymous said...

:)



minnal

 
On Sun Jul 06, 12:24:00 PM , நாமக்கல் சிபி said...

மின்னல்!
.
.
.
.
.
.
!
?

நம்ம மின்னலா?
நம்ம பழைய மின்னலா?

 
On Sun Jul 06, 12:52:00 PM , Sanjai Gandhi said...

ஆஹா.. அற்புதம்.. "ஆனந்தம்.. பேரானந்தம்.. பிரேமானந்தம்.."
கலக்கிட்டிங்க சிபி.. அற்புதமான காமக் கதை. :P

 
On Sun Jul 06, 01:23:00 PM , Selva Kumar said...

தல நீங்களும் அதே பேர்ல தலைப்பு வெச்சிட்டு கலாய்க்கறீங்க....
.
ஏன்?
.
ஏன்?
.
ஏன்?
.
ஏன்?
.
வேற தலைப்புல வெச்சா யாருமே படிக்க மாட்டாங்கனா ???

 
On Sun Jul 06, 01:27:00 PM , Selva Kumar said...

"ஆனந்தம்.. பேரானந்தம்.. பிரேமானந்தம்.."
கலக்கிட்டிங்க .. சிபியானந்தம்

 
On Sun Jul 06, 01:45:00 PM , நாமக்கல் சிபி said...

//வேற தலைப்புல வெச்சா யாருமே படிக்க மாட்டாங்கனா ???//

இப்ப அதான் டிரெண்டு போல! விட்டா எல்லாரும் இதே மாதிரி கெளம்பிடுவாங்க போல!

அந்த பொதுப்புத்தியை உடைக்கத்தான் இந்த கட்டுடைப்பு பதிவு!

விஷத்தை விஷத்தால முறியடிக்கிற மாதிரி!

 
On Sun Jul 06, 01:47:00 PM , நாமக்கல் சிபி said...

//வேற தலைப்புல வெச்சா யாருமே படிக்க மாட்டாங்கனா ???//

ச்ச்சின்னப்பையன்!

மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்க!

என் பதிவுகள எத்தனை பதிவு வாசிச்சிருக்கீங்க?

:)

இந்தப் பதிவுல மட்டும் வந்து ரெண்டு கும்மு கும்மி இருக்கீங்க!

ஒரு வகைல ஏமாற்றத்தையும் உணருகிறீர்கள் அல்லவா!

:P

 
On Sun Jul 06, 01:56:00 PM , Selva Kumar said...

//இந்தப் பதிவுல மட்டும் வந்து ரெண்டு கும்மு கும்மி இருக்கீங்க!

//

உங்க பதிவுல எல்லாத்தயும் படிச்சதில்ல...ஆனா இது டூ மச் கலாய்ப்புன்றதால கும்மிட்டு போனேன.

என்ன பாத்து நீங்க இப்படி கேட்டதுனால அடுத்த பதிவுல கும்மு கும்முனு கும்ம போறேன...

 
On Sun Jul 06, 01:58:00 PM , Selva Kumar said...

//ஒரு வகைல ஏமாற்றத்தையும் உணருகிறீர்கள் அல்லவா!
//

இதெல்லாம் புதுசு இல்லயே :-))

 
On Sun Jul 06, 02:03:00 PM , Selva Kumar said...

//இப்ப அதான் டிரெண்டு போல! விட்டா எல்லாரும் இதே மாதிரி கெளம்பிடுவாங்க போல!
//

ரொம்பச் சரி!!!!..

 
On Sun Jul 06, 02:07:00 PM , Anonymous said...

:-)

 
On Sun Jul 06, 02:16:00 PM , கொழுவி said...

ம்..
நிஜமாவே யாரும் காமக் கதை எழுதினால் கூட நான் போய் பார்க்க மாட்டேன். அந்தளவிற்கு வெறுப்பேத்திட்டாங்கப்பா..
சே.. இந்த உலகத்தில யாரும் சொல்வதை செய்யிறதில்லை..

 
On Sun Jul 06, 02:20:00 PM , cheena (சீனா) said...

ஆமா சிபி - சூடான இடுகைல்லே வந்திடுச்சில்ல - அப்ப எப்ப இரண்டாம் பகுதி ?

 
On Sun Jul 06, 10:27:00 PM , King... said...

சிபி அண்ணன் உங்கடை ஸ்டைல்ல கலக்கிட்டிங்க ...

 
On Sun Jul 06, 10:30:00 PM , King... said...

கொழுவி...said..
///
ம்..
நிஜமாவே யாரும் காமக் கதை எழுதினால் கூட நான் போய் பார்க்க மாட்டேன். அந்தளவிற்கு வெறுப்பேத்திட்டாங்கப்பா..
சே.. இந்த உலகத்தில யாரும் சொல்வதை செய்யிறதில்லை///

யோவ் கொழுவி நீ உசிரோடதான் இருக்கியா இப்படி ஏதாவது 'கட்டுடைப்பு' பதிவு வந்தா தான்யா உம்மை பாக்க முடியுது!!:)

 
On Sun Jul 06, 11:31:00 PM , கொழுவி said...

king
கொழுவி செத்துவிடத் தீர்மானித்து விட்ட போதும் இப்படி யாராவது வந்து உயிர்ப்பித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
காமம் செத்தவனையும் உயிர்ப்பிக்கும்
சாகாதவனை உயிர்... பிய்க்கும்

 
On Mon Jul 07, 01:07:00 AM , ALIF AHAMED said...

நம்ம மின்னலா?
நம்ம பழைய மின்னலா?
//

thanks

 
On Tue Jul 08, 09:41:00 PM , இவன் said...

அடப்பாவிகளா ஒரு பதிவு போட இப்படி ஒரு சாக்கு இருக்குதா?? கடைசீல நீங்களும் ஜோதில அய்க்கியம் ஆகீட்டீங்க

 
On Tue Jul 08, 11:17:00 PM , நாமக்கல் சிபி said...

//கடைசீல நீங்களும் ஜோதில அய்க்கியம் ஆகீட்டீங்க//

இவண்!

நீங்க பரங்கமலை ஜோதியையா சொல்றீங்க!

 
On Wed Jul 09, 04:52:00 AM , தமிழன்-கறுப்பி... said...

அண்ணே உங்க ஸ்டைலே தனிண்ணே...

 
On Wed Jul 09, 04:54:00 AM , தமிழன்-கறுப்பி... said...

சூப்பரு...

 
On Wed Jul 09, 04:56:00 AM , தமிழன்-கறுப்பி... said...

@ விக்னேஷ்வரன்...

///இல்லை இது சரிபட்டு வராது.... நானும் இனிக் காமக் கதைகள் எழுத போறேன்....///

இதுக்கு 'ரிப்பீட்டு' போடலாமா... வேண்டாமா....????????????

 
On Wed Jul 09, 05:01:00 AM , தமிழன்-கறுப்பி... said...

@ கொழுவி...
//
ம்..
நிஜமாவே யாரும் காமக் கதை எழுதினால் கூட நான் போய் பார்க்க மாட்டேன். அந்தளவிற்கு வெறுப்பேத்திட்டாங்கப்பா..
சே.. இந்த உலகத்தில யாரும் சொல்வதை செய்யிறதில்ல
///

எல்லாரும் ரொம்ப நொந்திருக்காய்ங்க... ;)

 
On Wed Jul 09, 05:03:00 AM , தமிழன்-கறுப்பி... said...

அண்ணே என்ன புரொபைல் படம்லாம் மாத்திட்டிங்க...:)

 
On Wed Jul 09, 05:05:00 AM , தமிழன்-கறுப்பி... said...

///
இது போன்ற கதைகளையோ அல்லது தலைப்புகளைக் (உம். காமக் கதைகள், 18/21 வயது கதைகள்/ ஜட்டி...) கொண்ட பதிவுகளையோ தமிழ்மணம் திரட்டக் கூடாது என்று தமிழ்-கதைகள் திரட்டி நிர்வாகிகள் தமிழ்மணத்திற்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இதனால் தங்கள் திரட்டிக்கு வாசகர் வருகை குறைந்து வருவதையும் சுட்டிக்காட்டி உள்ளார்களாம்!///

;))

 
On Wed Jul 09, 05:07:00 AM , தமிழன்-கறுப்பி... said...

காமக்கதைகள்...(45)

 
On Wed Jul 09, 11:54:00 AM , Selva Kumar said...

Display pictureல முன்னாடி ஒரு Gentleman போட்டோ இருந்துச்சு..

இப்போ ஒரே இருட்டா இருக்கே ??????????????????