தமிழ்மண முகப்பில் நிரந்தர இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள சில எளிய வழி முறைகள்!

1. எல்லாப் பதிவுகளின் தலைப்புகளிலும் "A" என்ற எழுத்தைச் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் தலைப்பின் முடிவில் தொடர் எண்களை வரிசையாச் சேர்த்துக் கொள்ளவும். அப்போதுதான் "A", "B", "C" என்ற வரிசைகளில் சீரியல்கள் போல தொடர்ந்து எழுதுகிறேன் என்று சமாளித்துக் கொள்ளலாம்! ஆனால் "A" வுடன் நின்று கொள்ள வேண்டும்!

2. புதியதொரு வார்த்தைப் பட்டியல் ஒன்றை உருவாக்கி வைத்துக் கொள்ளவும். அதில் உள்ள வார்த்தைகளை அவ்வப்போது(எப்பொழுதெல்லாம் புதிய வார்த்தைகள் கிடைக்கும்போதோ அல்லது தோன்றும்போதோ அப்டேட் செய்து கொள்ளுங்கள். அதில் சேர்க்கப் படும் வார்த்தைகள் "PBW*" களாக இருக்க வேண்டும்.

*PBW = Polished BAD Words

2. ஒவ்வொரு பதிவின் தலைப்பிலும் அல்லது பதிவின் முதல் இரண்டு வரிகளில் எங்கேனும் இந்த வார்த்தைப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ஏதானும் ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளைப் பயன்படுத்திக் கொள்ளவும்.

3. அவ்வப்போது சில மஞ்சள் பத்திரிக்கைகளையும் புரட்டிப் பார்த்து லேட்டஸ்ட் ட்ரெண்டில் புழக்கத்தில் உள்ள சில வார்த்தைகளையும் குறித்து வைத்துக் கொண்டு பின் அவற்றை பதிவுகளில் பயன்பாடுத்தலாம்! அதுக்காக யெல்லோ பேஜஸ் எடுத்து வெச்சி தேடிகிட்டிருந்தீங்கன்னா அதற்கு நான் பொறுப்பாளி அல்ல!

5. இது போன்ற பாயிண்டுகளைப் பட்டியலிட்டு எழுதும் பதிவுகளில் எண்களைத் தவறாக இட்டுவிடுங்கள். எவரேனும் தவறைச் சுட்டிக் காட்டுகிறேன் என்ற வகையில் இடும் பின்னூட்டங்களின் எண்ணிக்கை கூட வாய்ப்பிருக்கிறது!


**** கதைகள் தொடரும்...................!
This entry was posted on 3:17 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

15 பின்னூட்டங்கள்:

On Sun Jul 06, 03:55:00 PM , Anonymous said...

நெம்பக் கடுப்பாய்ட்டீங்க போலருக்கு.

 
On Sun Jul 06, 03:59:00 PM , நாமக்கல் சிபி said...

//நெம்பக் கடுப்பாய்ட்டீங்க போலருக்கு.//

ரெண்டாவது பகுதி எப்போன்னு கேட்டாங்க! ஹிஹி அதான்!

இந்த மாதிரி ஏதாச்சும் போட்டுகிடே இருந்தாதான் நாமளும் முகப்பு பக்கத்துலயே இருப்போம்!

 
On Sun Jul 06, 04:22:00 PM , Selva Kumar said...

நா இதப்படிச்சேன்..
நா இதப்படிச்சேன்..
நா இதப்படிச்சேன்..

//இந்த மாதிரி ஏதாச்சும் போட்டுகிடே இருந்தாதான் நாமளும் முகப்பு பக்கத்துலயே இருப்போம்!
//

சூப்பர் டெக்னிக்...:-))

 
On Sun Jul 06, 04:35:00 PM , நாமக்கல் சிபி said...

/சூப்பர் டெக்னிக்...:-))//

நன்றி வழிப்போக்கன்

 
On Sun Jul 06, 04:48:00 PM , கிரி said...

ஹா ஹா ஹா

நாமக்கல் சிபி பேரை இனிமே ஐடியா சிபி ன்னு மாத்திட வேண்டியது தான் :-)))

 
On Sun Jul 06, 04:53:00 PM , Selva Kumar said...

//நாமக்கல் சிபி பேரை இனிமே ஐடியா சிபி ன்னு மாத்திட வேண்டியது தான் :-)))
//


"காமக்கதை கலாய்த்தல் சிபி"னு வெச்சுகலாம்..

 
On Sun Jul 06, 05:00:00 PM , இலவசக்கொத்தனார் said...

18+ அப்படின்னு தலைப்பில் போடணும் என்பதை விட்டுப்புட்டீயளே!!

 
On Sun Jul 06, 05:59:00 PM , Sanjai Gandhi said...

பின்னூட்டம் தொடரும்...:)

 
On Sun Jul 06, 06:42:00 PM , முத்துலெட்சுமி/muthuletchumi said...

சரி மூணாவது பதிவும் உண்டா..:)விட்டா சூடான பதிவில் எல்லாமே உங்க பதிவு .. 1 .. 2.. 33...என்று வரும் போலயே

 
On Sun Jul 06, 07:37:00 PM , வெண்பூ said...

நல்ல டெக்னிக்... முயற்சி செய்து பார்த்துட வேண்டியதுதான்..

 
On Sun Jul 06, 10:21:00 PM , சென்ஷி said...

அண்ணே.. என்னோட‌ ப‌ங்குக்கு நான் எழுதின‌ காம‌க்க‌தையை நாளைக்கு கண்டிப்பா ப‌ப்ளிஷ் ப‌ண்ணிட‌றேண்ணே :))

 
On Sun Jul 06, 11:03:00 PM , King... said...

:))

 
On Sun Jul 06, 11:05:00 PM , King... said...

நாமக்கல் சிபி...said..

//நெம்பக் கடுப்பாய்ட்டீங்க போலருக்கு.//

ரெண்டாவது பகுதி எப்போன்னு கேட்டாங்க! ஹிஹி அதான்!

இந்த மாதிரி ஏதாச்சும் போட்டுகிடே இருந்தாதான் நாமளும் முகப்பு பக்கத்துலயே இருப்போம்!///

தமிழ்மணம் பற்றிய தெளிவு...;)

 
On Wed Jul 09, 10:32:00 PM , இவன் said...

//அவ்வப்போது சில மஞ்சள் பத்திரிக்கைகளையும் புரட்டிப் பார்த்து லேட்டஸ்ட் ட்ரெண்டில் புழக்கத்தில் உள்ள சில வார்த்தைகளையும் குறித்து வைத்துக் கொண்டு பின் அவற்றை பதிவுகளில் பயன்பாடுத்தலாம்! அதுக்காக யெல்லோ பேஜஸ் எடுத்து வெச்சி தேடிகிட்டிருந்தீங்கன்னா அதற்கு நான் பொறுப்பாளி அல்ல!//

அப்போ மஞ்சள் பத்திரிகை என்னா யெல்லோ பேஜஸ் இல்லையா??

 
On Thu Jul 10, 06:51:00 AM , Subbiah Veerappan said...

நாள் ஒன்றுக்கு 580 பதிவுகள் என்றால் சும்மாவா?
தினமும் திருவிழாக் கூட்டம்தான்!

பதிவு போட்டால் 16 பதிவுகளுக்கு மட்டும்தான் முகப்பில் இடம்.
அதற்குள் யாராவது பார்த்துப் பின்னூட்டம் இட்டால்தான் உண்டு.
அப்படிப் பின்னூட்டம் இட்டாலும் அங்கே 25 மறுமொழிகளுக்கு மட்டுதான்
இடம் உள்ளது

மொத்தத்தில் ஒரு மணி நேரம் செலவழித்து எழுதிய பதிவு அரை மணி நேரத்தில்
காணாமல் போய்விடும் அபாயம் உள்ளது!

தமிழ்மணத்திடம் சொல்லி இட ஒதுக்கீட்டை அதிகப் படுத்தச் சொல்ல வேண்டும்
ஸ்க்ரோல் டவுன் செய்து பார்த்தால் 160 பதிவுகளாவது முகப்பில் தெரிய வேண்டும்!
அதற்கு உங்கள் யோசனை என்ன சிபியாரே?