ம்ஹூம்! ஏமாற்றமே மிஞ்சியது!
ஒற்றைப் பதிவெழுதிவிட்டு எத்தனை நேரம் காத்துக் கிடப்பது! சரியான நேரத்தில் வெளியிடவில்லையோ என்று யோசித்தேன்! இல்லையே! நேற்று பகற்பொழுதில் கூட ஒரு முறை மீள் இடுகை செய்தேனே! அட! நேற்று திங்கள்! வாரத்தின் முதல் நாள்! வேலையில் கவனமாயிருப்பார்கள்! அது கூட காரணமாக இருக்கும்!
ம்ம்! இன்று ஒரு கை பார்த்து விடலாம்! மீண்டும் மீள் பதிவு செய்தாயிற்று! தமிழ்மணம், தங்கிலீஸ், மற்றும் என்னென்ன உண்டோ அனைத்திலும் பதிவு செய்து விட்டாயிற்று! அட! அந்தத் தமிழ் உலவு போடும் கடமைப் பின்னூட்டம் கூட வரவில்லையே! மூன்று பின்னூட்டங்களைத் தாண்ட மாட்டேன் என்கிறதே!
தெரிந்த தெரியாத அனைவருக்கும் உரலை அனுப்பிப் படிக்கச் செல்லியாயிற்று! ஆயினும்....! சேட்டில் வந்த அனைவருமே படித்தேன், படிக்கிறேன் என்று சொல்கிறார்கள்! மீண்டும் மீண்டும் வற்புறுத்தினால் அமைதியாகி விடுகிறார்கள்! அல்லது பிஸியாகி விடுகிறார்கள்! என்னதான் செய்வது!
விடுவதாயில்லை! செய் அல்லது செத்து மடி! இறுதி முடிவுக்கு வந்தேன்! அது உறுதியானதும் கூட! கொஞ்சம் மனசாட்சியை மட்டும் கழற்றி அப்பால் வைக்க வேண்டும்! செய்தாயிற்று!
"அடடே! அபாரம் உங்கள் இடுகை! தொடர்ந்து பதிவிடுங்கள்!" என்ற ஒற்றை வரிப் பின்னூட்டத்தை நானே தட்டச்சினேன்! முதல் மூன்று பின்னூட்டங்களைப் போலவே!
20 பின்னூட்டங்கள்:
இப்போ எத்தனை தடவ ரிஃப்ரெஸ் பண்ணீங்க உண்மையச் சொல்லுங்க...
பழைய நினைப்ப வைச்சே சிறுகதையா நடந்துங்க, நீங்க உண்மையாவே படைப்பாளியேதான் ;)
"அடடே! அபாரம் உங்கள் இடுகை! தொடர்ந்து பதிவிடுங்கள்!"
4???
5வது பின்னூட்டம்...! (3 & 4 were me too:-)
அடடே!
அபாரம் உங்கள் இடுகை!
தொடர்ந்து பதிவிடுங்கள்!
வெல்கம் பேக் தள !!!
தொடர்ந்து எழுதுங்கள் !!
இருங்க படிச்சிட்டு வந்து பின்னுட்டம் போடுகிறேன் :)
ஆஹா...
அட....உண்மையிலயே அசத்தல் தல.... :)))
தல உங்க இந்த பதிவை புல்லா காப்பி பேஸ்ட் பண்ணி பஸ்ஸில் பகிர்ந்திருக்கிறேன்... ஹிட்ஸ் கொறையுதேன்னு திட்டாதீங்க :))
உலக பதிவுலக வரலாற்றிலேயே பின்னூட்டத்தை வெச்சே எழுதப்பட்ட முதல் சிறுகதை,, .. உங்களை.. நற நற
அடடே, தல திரும்பி ஃபார்ம்க்கு வந்தாச்சா? குட் குட்!
//அடடே, தல திரும்பி ஃபார்ம்க்கு வந்தாச்சா? குட் குட்//
//அட....உண்மையிலயே அசத்தல் தல.... :)))//
//அடடே, தல திரும்பி ஃபார்ம்க்கு வந்தாச்சா? குட் குட்//
//அட....உண்மையிலயே அசத்தல் தல.... :)))//
அவ்வ்வ்.. நான் தல இல்லை! தல இல்லை!
த ள
பதிவெழுதிவிட்டு இந்த பாடுபடறீங்களா ஐய்யோ பாவம்...
அண்ணே.. உனக்கு ஏண்ணே இந்தச் சோகம்..? மனசைத் தேத்திக்கண்ணே..!
உன் ஜோடி ஆளுக எல்லாம் கண்ணாலம் கட்டிக்கின்னு டாட்டா காட்டின்னு போனதாலதான் இவ்வளவு பிரச்சினையும்..!
ஒவ்வொருத்தரையும் வூட்டாண்டை போயி கையைப் பிடிச்சு இட்டாந்து விடு. அப்பால பாரு.. நாலாவது என்ன நாப்பதாவது பின்னூட்டமே தானா வரும்..!
wow
a
b
c
சூப்பர் . (உண்மைத்தமிழன் கமெண்ட சொன்னேன்)
அட நாங்கல்லாம் எதுக்கு இருக்கோம்? ப்ளஸ் ல ஒரு செய்தி முன்னேயே போட்டு இருந்தா கமென்ட் குவிச்சு இருப்போமே?
:-))