சிவாஜிக்குக் கிடைத்த விருதும், உண்மைத் தமிழனின் வயிற்றுப் போக்கும் (ச்சே) மன்னிக்க வயிற்றெரிச்சலும்!

சிவாஜி படத்துல "இப்பொ நான் பச்சைத் தமிழேஏஏன்"னு எழுதினதுக்கு பதிலா "இப்போ நான் உண்மைத் தமிழேஏஏன்" ன்னு பாடி இருந்தா சிவாஜிக்கு கொடுத்த விருது சரிதான்னு ஒத்துக்கிட்டிருப்பீங்களா?

போலிப் பிரச்சினையை கிண்டி முடிஞ்சாச்சு! இந்த வருத கோட்டா அவ்வளவுதான்! (ஏன்னா எல்லாருக்கும் அலுத்துப் போச்சு, உங்களுக்கு அலுத்திருக்காது)
அடுத்ததா உன்னைப் போல் ஒருவனுக்கு படம் ரிலீசான நாளிலிருந்து இன்று வரையான நாட்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கையில் பதிவு எழுதியாச்சு! (ஸ்ஸ்ஸப்பா தாங்கலை) டிக்கெட் வாங்கின கதையில இருந்து இடைவேளையில எழுந்து பாத்ரூம் போயிட்டு வந்து பாப்கார்ன் வாங்கி தின்னு, படம் முடிஞ்சி வீட்டுக்கு வந்து வாந்தி எடுத்தது வரைக்கும் சிலாகிச்சி(!? :( ) எழுதியாச்சு! (எல்லாம் எங்க காலக் கொடுமை! என்ன பண்ணுறது! எல்லாம் அந்த வேலன் பார்த்துகிட்டு சும்மா இருக்கானே, அவனைச் சொல்லணும், இதுல அவனுக்கும் ரெண்டு திட்டு வேற)

உமக்குன்னே டென்ஷன் ஆகி வடைசட்டில போட்ட சோளம் மாதிரி தைய தக்கன்னு குதிக்கிறதுக்கு மேட்டர் கிடைக்குது பாரும்! (கரெக்டா வெறும் வாயை மென்னவனுக்கு அவலை அள்ளி கிலோ கணக்கா கொட்டுனா மாதிரி!) தமிழக அரசு திரைப்பட விருதுகள்! நான் நினைக்கிறேன் கலைஞர் சொல்லிக் கூட அந்த மாதிரி தேர்வு செஞ்சிருக்க மாட்டாங்க! உம்மை டென்ஷன் ஆக்கிப் பார்க்கணும்னே அந்த முருகன் சொல்லி கொடுத்த செலக்ஷனா இருக்கும்! அவனுக்குக் கூட நீரு டென்ஷன் ஆகி குத்தாட்டம் போடுறதைப் பார்க்க வேடிக்கையா இருக்கும் போல!

வெட்டியா உலக விஷயங்களைப் பார்த்து டென்ஷன் ஆகி உடம்பை மேல மேல கெடுத்துக்காம உருப்படியான விஷயத்துல பொழுதை ஓட்டலாம்ல! இந்த மாதிரி கத்தி கத்தி என்ன காசு பணமா கிடைக்குது! அதுவும் இல்லை! அல்லது உம்மைப் பதிவையும், நீரு ஆகுற டென்ஷனையும் பார்த்து யாராச்சும் சீரியசாத்தான் எடுத்துக்கப் போறாங்களா?

ஏன் இந்த வேலை?
நல்லா யோசிச்சிப் பாருமைய்யா!

சின்னக் குழந்தைகளுக்கான கார்டூன் நெட்வெர்க் இருக்கு! சார்லி சாப்ளின், லார்ல் ஹார்டி ன்னு எத்தனை காமெடி படங்கள் இருக்கு! அதையெல்லாம் பார்த்து சிரிச்சா மனசும் ரிலாக்சா இருக்கும்! உடம்பும் ஆரோக்கியமா இருக்கும்!

இல்லை தெரியாமத்தான் கேக்குறேன்! கலைஞருக்கு அண்ணா விருது கொடுத்த மாதிரி உமக்கு யாராச்சும் "சமூகப் போராளி"ன்னு விருது ஒண்ணு ரெடி பண்ணி வெச்சி காத்துகிட்டிருக்காங்களா?

This entry was posted on 6:14 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

16 பின்னூட்டங்கள்:

On Tue Sep 29, 08:56:00 PM , சென்ஷி said...

சூப்பர் ;-)

 
On Tue Sep 29, 08:56:00 PM , ஆயில்யன் said...

/உம்மை டென்ஷன் ஆக்கிப் பார்க்கணும்னே அந்த முருகன் சொல்லி கொடுத்த செலக்ஷனா இருக்கும்!//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்! :))))

 
On Tue Sep 29, 08:56:00 PM , ஆயில்யன் said...

//சின்னக் குழந்தைகளுக்கான கார்டூன் நெட்வெர்க் இருக்கு! சார்லி சாப்ளின், லார்ல் ஹார்டி ன்னு எத்தனை காமெடி படங்கள் இருக்கு! அதையெல்லாம் பார்த்து சிரிச்சா மனசும் ரிலாக்சா இருக்கும்! உடம்பும் ஆரோக்கியமா இருக்கும்!//

அதே! அதே! ரெக்கமண்டேஷன் எல்லாருக்கும் பொருந்தும் :)

 
On Tue Sep 29, 08:59:00 PM , ஆயில்யன் said...

//தமிழக அரசு திரைப்பட விருதுகள்! நான் நினைக்கிறேன் கலைஞர் சொல்லிக் கூட அந்த மாதிரி தேர்வு செஞ்சிருக்க மாட்டாங்க!//

அட தேர்வுக்குழுவெல்லாமா உண்டு தமிழக அரசு விருதுகள் சம்பவத்துக்கு :)))

 
On Tue Sep 29, 09:01:00 PM , மின்னுது மின்னல் said...

வடை சட்டியில் ஏன் பாஸ் சோளம் போடனும்..?

 
On Tue Sep 29, 09:02:00 PM , மின்னுது மின்னல் said...

சோளத்தை வடை சட்டியில் போட்டுட்டு எதுக்கு பாஸ் அவலை மெல்லனும்..?

 
On Tue Sep 29, 09:04:00 PM , முருகன் said...

அப்பா உண்மைதமிழா.. என்னா ஏம்ப்பா டரியலாக்குறே?

 
On Tue Sep 29, 09:06:00 PM , க்விக்”கன்” முருகன் said...

உ.த வா டுபாக்கில எல்லாரையும் சுடலாம்

 
On Tue Sep 29, 09:08:00 PM , பொலம்பல் தமிழன் said...

இந்த உலகம் அழியப்போகுதுடா, பூகம்பம் வரப்போகுதுடா, இந்த பூமி பொளந்து எல்லாரும் உள்ள போகப்போறீங்கடா. மொத்தமா நாசமா போகப்போறீங்கடா

 
On Tue Sep 29, 09:10:00 PM , மின்னுது மின்னல் said...

க்விக்”கன்” முருகன் said...

உ.த வா டுபாக்கில எல்லாரையும் சுடலாம்
//

missing same word

mind it :)

 
On Tue Sep 29, 09:30:00 PM , துபாய் ராஜா said...

முருகா,முருகா... நீதான்பா எல்லாருக்கும் நல்லவழி காட்டணும். அப்படியே எனக்கும் ஒரு வழி காட்டுய்யா சீக்கிரம்.....

 
On Tue Sep 29, 09:50:00 PM , தருமி said...

அட! நாலு பேரு வயிற்றெரிச்சலை அவர் தனதாக்கி பேசுறது தப்பே இல்லீங்க. அவரு இந்த விஷயத்தில சொன்ன எல்லாமே சரி.

 
On Tue Sep 29, 11:02:00 PM , நாமக்கல் சிபி said...

//அட! நாலு பேரு வயிற்றெரிச்சலை அவர் தனதாக்கி பேசுறது தப்பே இல்லீங்க. அவரு இந்த விஷயத்தில சொன்ன எல்லாமே சரி.//

வர் சொன்னது தப்பு இல்லைதான்! ஆனா இவரு ஏன் டென்ஷனாயி உடம்பைக் கெடுத்துக்கணும்!

 
On Tue Sep 29, 11:40:00 PM , உடன்பிறப்பு said...

நம்ம உண்மை தமிழனை ஒரு நாள் முதல்வர் ஆக்கினால் என்ன? மனுசன் தானாவே திருந்திடுவாரு

 
On Wed Sep 30, 12:26:00 PM , Anonymous said...

எல்லரோடைய ஒட்டுமொத்த கருத்தின் பிரதிபலிப்பாக உ.த.வின் பதிப்பை எடுத்துகொள்ளலாம். இவரைப்போல மற்றவர்களும் கண்டிருத்திருக்கிறார்கள்.

திரைப்பட பரிசுகள் ‘சிறந்த படம்’ என்ற போர்வையில் பலகாரணங்களுக்கான் கொடுக்கப்படுகின்றன.

இரசனி, கமலஹாசன் போன்றோருக்கு, அவர்கள குஷிபடுத்தி, தி.மு.கவுக்கு எதிராக திரும்பாமல் பண்ணவைக்கும் தந்திரம் என இதைச்சொல்லலாம்.

 
On Wed Sep 30, 02:16:00 PM , தருமி said...

சிபி,
//இவரு ஏன் டென்ஷனாயி உடம்பைக் கெடுத்துக்கணும்!//

ஒரு ஜாதி இருக்குங்க. இந்த மாதிரி நேரத்தில அட்லீஸ்ட் கொஞ்சம் சவுண்டாவது கொடுத்தாதான் மனசு கொஞ்சமாவது ஆறும். உ.த. அந்த ஜாதி. (எனக்கும் கொஞ்சூண்டு அது உண்டு!)