சிவாஜிக்குக் கிடைத்த விருதும், உண்மைத் தமிழனின் வயிற்றுப் போக்கும் (ச்சே) மன்னிக்க வயிற்றெரிச்சலும்!

சிவாஜி படத்துல "இப்பொ நான் பச்சைத் தமிழேஏஏன்"னு எழுதினதுக்கு பதிலா "இப்போ நான் உண்மைத் தமிழேஏஏன்" ன்னு பாடி இருந்தா சிவாஜிக்கு கொடுத்த விருது சரிதான்னு ஒத்துக்கிட்டிருப்பீங்களா?

போலிப் பிரச்சினையை கிண்டி முடிஞ்சாச்சு! இந்த வருத கோட்டா அவ்வளவுதான்! (ஏன்னா எல்லாருக்கும் அலுத்துப் போச்சு, உங்களுக்கு அலுத்திருக்காது)
அடுத்ததா உன்னைப் போல் ஒருவனுக்கு படம் ரிலீசான நாளிலிருந்து இன்று வரையான நாட்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கையில் பதிவு எழுதியாச்சு! (ஸ்ஸ்ஸப்பா தாங்கலை) டிக்கெட் வாங்கின கதையில இருந்து இடைவேளையில எழுந்து பாத்ரூம் போயிட்டு வந்து பாப்கார்ன் வாங்கி தின்னு, படம் முடிஞ்சி வீட்டுக்கு வந்து வாந்தி எடுத்தது வரைக்கும் சிலாகிச்சி(!? :( ) எழுதியாச்சு! (எல்லாம் எங்க காலக் கொடுமை! என்ன பண்ணுறது! எல்லாம் அந்த வேலன் பார்த்துகிட்டு சும்மா இருக்கானே, அவனைச் சொல்லணும், இதுல அவனுக்கும் ரெண்டு திட்டு வேற)

உமக்குன்னே டென்ஷன் ஆகி வடைசட்டில போட்ட சோளம் மாதிரி தைய தக்கன்னு குதிக்கிறதுக்கு மேட்டர் கிடைக்குது பாரும்! (கரெக்டா வெறும் வாயை மென்னவனுக்கு அவலை அள்ளி கிலோ கணக்கா கொட்டுனா மாதிரி!) தமிழக அரசு திரைப்பட விருதுகள்! நான் நினைக்கிறேன் கலைஞர் சொல்லிக் கூட அந்த மாதிரி தேர்வு செஞ்சிருக்க மாட்டாங்க! உம்மை டென்ஷன் ஆக்கிப் பார்க்கணும்னே அந்த முருகன் சொல்லி கொடுத்த செலக்ஷனா இருக்கும்! அவனுக்குக் கூட நீரு டென்ஷன் ஆகி குத்தாட்டம் போடுறதைப் பார்க்க வேடிக்கையா இருக்கும் போல!

வெட்டியா உலக விஷயங்களைப் பார்த்து டென்ஷன் ஆகி உடம்பை மேல மேல கெடுத்துக்காம உருப்படியான விஷயத்துல பொழுதை ஓட்டலாம்ல! இந்த மாதிரி கத்தி கத்தி என்ன காசு பணமா கிடைக்குது! அதுவும் இல்லை! அல்லது உம்மைப் பதிவையும், நீரு ஆகுற டென்ஷனையும் பார்த்து யாராச்சும் சீரியசாத்தான் எடுத்துக்கப் போறாங்களா?

ஏன் இந்த வேலை?
நல்லா யோசிச்சிப் பாருமைய்யா!

சின்னக் குழந்தைகளுக்கான கார்டூன் நெட்வெர்க் இருக்கு! சார்லி சாப்ளின், லார்ல் ஹார்டி ன்னு எத்தனை காமெடி படங்கள் இருக்கு! அதையெல்லாம் பார்த்து சிரிச்சா மனசும் ரிலாக்சா இருக்கும்! உடம்பும் ஆரோக்கியமா இருக்கும்!

இல்லை தெரியாமத்தான் கேக்குறேன்! கலைஞருக்கு அண்ணா விருது கொடுத்த மாதிரி உமக்கு யாராச்சும் "சமூகப் போராளி"ன்னு விருது ஒண்ணு ரெடி பண்ணி வெச்சி காத்துகிட்டிருக்காங்களா?