ஒரு கட்டத்துலே எனக்கு பொறுமை போயிடுச்சு! சரி! இனிமேலும் காத்திருந்தா நல்லா இருக்காது! நாமளே எழுதிடுவோம்னு கீபோர்டும் கையுமா இன்னிக்கு உக்காந்துட்டேன்!
இனி குறுந்தொகை பத்தி!
ஆமாங்க! குறுந்தொகை என்பது ஒரு சிம்பிள் மேட்டர்தான்! குறுகிய தொகை! அதாவது சிறிய தொகை!
இந்த குறுந்தொகை நம்ம வாழ்க்கைல எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துதுன்னு இப்ப பார்க்கலாம்!
நாம வழக்கமா யாருக்காவது ஒரு ஐம்பது ரூபாயோ அல்லது நூறு ரூபாயோ அதற்கும் மேலயோ கடனா/கை மாத்தா கொடுத்தம்னா உடனே என்ன பண்ணுவோம்! எங்கியாவது குறிச்சி வெச்சிக்குவோம். பின்னாடி மறந்துடக் கூடாது இல்லையா! ஏனா அமவுண்ட் பெரிசு! குறைஞ்ச பட்சம் நம்ம மூளையில எங்கியாவது ஒரு பக்கம் கிறுக்கு வெச்சிக்குவோம்!
ஆனா இதே ஒரு அஞ்சோ/பத்தோ கொடுத்தம்னா இந்த அளவுக்கு முக்கியத்தும் கொடுத்துக்க மாட்டோம்! கடைசில நமக்கும் மறந்து போகும்! வாங்கினவருக்கும் மறந்து போகும்!
ஒரே ஒருத்தர்கிட்டே ஒரு தடவை அஞ்சோ அல்லது பத்தோன்னா விட்டுடலாம்!
இதே மாதிரி 5 பேருகிட்டே அஞ்சு அஞ்சு தடவை குடுத்துட்டு மறந்து போனா என்ன ஆகும்?
அதே ஒரு பத்து பேருகிடே பத்து பத்து தடவை குடுத்துட்டு மறந்து போனா என்ன ஆகும்?
சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் நாம மறந்து போய் விட்ட குறுந்தொகையெல்லாம் சேர்ந்து ஒரு பெருந்துகையா போய் நிக்கும்!
நமக்குத்தான் நஷ்டம்! வாங்கினவங்ககிட்யும் கறாறா கேக்கவும் முடியாது! அசிங்கமா நினைச்சிட்டா என்ன பண்ணுறதுன்னு நமக்கு நாமே ஒரு தடுப்பு போட்டுக்குவோம்!
அப்புறம் அமவுண்டுக்கு சங்குதான்!
ஆகவே மக்களே! கடன் குடுக்குறது/வாங்குறது குறுந்தொகையா இருந்தாலுமே அப்பப்போ பைசல் பண்ணிக்கணும்! இல்லாட்டி ஒருவருக்கொருவர் மனத்ததங்கல்தான் ஏற்படும்! குறுந்தொகைன்னா உடனே உஷார் ஆகிடுங்க!
இதாங்க குறுந்த்கை பத்தி நான் உங்களோட பகிர்ந்துக்க நினைச்சது!
8 பின்னூட்டங்கள்:
\\நம்ம கவிதாயிணி அக்கா குறுந்தொகை பத்தி எழுதப் போறதா நகைச்சுவவ ததும்ப(நன்றி : விகடன்)ச் சொன்னாலும் சொன்னாங்க!\\
விகடன்லயும் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா!!
வெளியூர் போயிட்டீங்க போல இருக்கு. ரொம்ப நாளா பதிவு பக்கம் காணோம்
சிபி, குறுந்தொகை பற்றிய ஒரு எளிய அறிமுகம் - தமிழாய்ந்த புலவர்களுக்கும் புரியா வண்ணம் எளிமையான அறிமுகம். அறிமுகத்தைத் தொடர்ந்து ஆய்வுகளும் மறுமொழிகளுமாக களை கட்டட்டும்.
இனிய தமிழர் திருநாள் நல் வாழ்த்துகள்.
ஹா ஹா ஹா.. சூப்பர்!
//சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் நாம மறந்து போய் விட்ட குறுந்தொகையெல்லாம் சேர்ந்து ஒரு பெருந்துகையா போய் நிக்கும்//
குறுந்தொகையை பெருந்தொகை ஆக்குறது நாம தான் சொல்லுறீங்க. ஹா ஹா ஹா...சூப்பர்!
அடங்க மாட்டீங்களா நீங்க?
//அடங்க மாட்டீங்களா நீங்க?//
He He Never!
அட இதுக்கு தான் கவிதாயினி அந்த பில்ட் அப் குடுத்தாங்களா? நான் கூட என்னவோ ஏதோனு நெனச்சி பதறி போய்ட்டேன் ப்போங்க.. :))
மாம்ஸ்.. அப்போப்போ வந்து தரிசனம் குடுத்துட்டு போங்க.. :)
முடியல...
:)))))))))
அது எப்படி சிபி, குறுந்தொகை ஓர் அறிமுகம் அப்படினு தலைப்பை பார்த்ததும் சிபி வழக்கம் போல கை மாத்தா வாங்கின குறுந்தொகைனு மொக்கைத்தான் போட்டு இருப்பார்னு நினைச்சுட்டே படிச்சேன் அதே போல எழுதி இருக்கிங்க :-))(எனக்கு கூட "esp power" இருக்கு போல , அப்போ நானும் ஒரு அழகிய தமிழ் மகன் தானா( ஏற்கனவே ரொம்ப அழகு!!??)