இதிகாசங்கள் என்று சொல்லப்படுகிற இராமாயணம், மகாபாரதம் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றதாகக் கருதப் படுகின்ற காலங்களிலேயே தமிழ்த்திரையுலகம் இருந்திருந்து அந்த கதாபாத்திரங்களும் தமிழ்ப்படங்களைப் பார்த்து கெட்டுப் போயிருந்தா
எப்படி இருந்திருக்கும் என்று ஒரு கற்பனை!
-------------------------------------------------------------------------------------------------
தர்மன் : "துரியோதணா! ஆண்டவன் நல்லவங்களை சோதிப்பான்! ஆனா கைவிட மாட்டான்! கெட்டவங்களுக்கு நிறைய கொடுப்பான்! ஆனா...."
"எண்ணி பதினெட்டே நாள்ளா உன் கதையை முடிக்கிறேன் பாரு"
-------------------------------------------------------------------------------------------------
துரியோதனன் : "உள்ள மட்டும் நானே! உசிரைக் கூடத்தானே என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன்"
கர்ணன் : "என் நண்பன் போட்ட சோறு! நிதமும் தின்னேன் பாரு! நட்பைக் கூட கற்பைப் போல எண்ணுவேன்!
-------------------------------------------------------------------------------------------------
அசுரன் : "சுக்கிராச்சாரியாரே! எப்படி நம் வலிமை? இந்திரனை விரட்டி விட்டு இந்திரலோகத்தைக் கைப்பற்றி விட்டேன் பார்த்தீர்களா?
சுக்கிராச்சாரியார்(அதாங்க நம்ம ஹெரான் ராமசாமி) : "நாசமாப் போச்சு! அந்த இந்திரன் உன்னை நல்லா ஏமாத்திட்டான்! இது தோட்டா தரணி போட்ட செட்டு!"
-------------------------------------------------------------------------------------------------
முருகன் : "அசுரா! என்னோட அஞ்சு ஃபேஸ் பார்த்ததா சொன்னே இல்லை! எனக்கு ஆறாவதா இன்னொரு ஃபேஸும் இருக்கு! பார்க்க முயற்சி பண்ணாதே! தாங்க மாட்டே!"
அசுரா: "அடங்கொக்க மக்கா! உனக்கு ஆறுதாண்டி! என்கிட்ட பாரு அதுக்கு மேலயே பல ஃபேஸஸ் இருக்கு! நானே சும்மா இருக்கேன்!
------------------------------------------------------------------------------------------------
பாண்டிய மன்னன் : "என்ன இந்த மதுரை மண்ணில் பாணபத்திரருக்கு போட்டி போட்டு பாட ஆளே இல்லையா! வெட்கம்! வெட்கம்!
அமைச்சர் : "மன்னா! சென்னை கோடம்பாக்கத்துலே மைக் மோகன்னு ஒருத்தர் இருக்காரு! பிறந்தப்போ கைல எடுத்த மைக்கை இன்னும் கேழேயே வைக்கலையாம்! அவரைக் கூட்டிட்டு வந்து பாடச் சொல்லுவோம்! இந்த பாண பத்திரரு அதுக்கப்புறம் பாட்டை நினைச்சி கூட பாக்க மாட்டாரு!
------------------------------------------------------------------------------------------------
முருகன்(செந்தில்) : " நான்தான் இளையபிள்ளை! பழம் எனக்குத்தான்"
பரமசிவன் : "ஏண்டா! பழம்னாலே உங்கிட்டே பிரச்சினைதானா? கடவுளே நான் எங்க போயி முட்டிக்குவேன்"
------------------------------------------------------------------------------------------------
கிராம மக்கள்: "ஆத்தா! உன் புருஷன் சொல்றாருன்னு நீ தீமிதிச்சித்தான் ஆகணுமா?"
சீதாப்பிராட்டியார்: "வேற வழியில்லை! நான் நிரூபிச்சே ஆகணும்! அதனாலதான் கனகாகிட்டே கரகத்தை கடனா வாங்கிட்டு வந்திருக்கேன்!
மாரியம்மா... மாரியம்மா..."
---------------------------------------------------------------------------------------------
வைத்தியர் : "ஏம்பா! துரியோதனா! பீமன் அத்தனை அடி அடிச்சும் நீ ஒரு அடி கூட அவனை திருப்பி அடிக்கலையா?"
துரியோதணன்: "அதில்லேங்க வைத்தியரே! அடிக்கும்போது பீமன் சொன்னான்! இவன் எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாண்டா! இவன் ரொம்ப நல்லவண்டான்னு"
----------------------------------------------------------------------------------------------
விசுவாமித்திரர் : "தசரதா! இராமனின் கல்யாணத்தை நான் தான் முன்னிருந்து நடத்தி வைப்பேன்"
வசிஷ்டர்: "முடியாது கல்யாணம் என் தலைமைலதான் நடக்கும்"
வையாபுரி : "ஹிஹி நீங்க சண்டைபோட்டிகிட்டிருங்க! எங்க இளையதளபதி ஷாஜஹான் ரெஜிஸ்டர் ஆஃபீஸ்லயா கல்யாணத்தை முடிச்சி வெச்சிட்டார்"
-----------------------------------------------------------------------------------------------
கும்மியடிக்க யோசிக்காதீங்க மக்களே! அதுக்காகத்தான் இந்த போஸ்ட் போட்டதே!
This entry was posted on 7:18 PM and is filed under
காமெடி கீமெடி
. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
24 பின்னூட்டங்கள்:
இருங்க படிச்சிட்டு வர்ரேன்.. :))
//வைத்தியர் : "ஏம்பா! துரியோதனா! பீமன் அத்தனை அடி அடிச்சும் நீ ஒரு அடி கூட அவனை திருப்பி அடிக்கலையா?"
துரியோதணன்: "அதில்லேங்க வைத்தியரே! அடிக்கும்போது பீமன் சொன்னான்! இவன் எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாண்டா! இவன் ரொம்ப நல்லவண்டான்னு"//
செம கலக்கல்
///அசுரன் : "சுக்கிராச்சாரியாரே! எப்படி நம் வலிமை? இந்திரனை விரட்டி விட்டு இந்திரலோகத்தைக் கைப்பற்றி விட்டேன் பார்த்தீர்களா?
சுக்கிராச்சாரியார்(அதாங்க நம்ம ஹெரான் ராமசாமி) : "நாசமாப் போச்சு! அந்த இந்திரன் உன்னை நல்லா ஏமாத்திட்டான்! இது தோட்டா தரணி போட்ட செட்டு!"///
செம காமெடி தள!
\\டிபிசிடி : "உள்ள மட்டும் நானே! உசிரைக் கூடத்தானே என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன்"
சிபி : "என் நண்பன் போட்ட சோறு! நிதமும் தின்னேன் பாரு! நட்பைக் கூட கற்பைப் போல எண்ணுவேன்!///
இதெப்படி இருக்கு.... :))))))))))
என்னை வச்சு ஏதும் காமெடி கீமெடி பண்ணலையே?
///சீதாப்பிராட்டியார்: "வேற வழியில்லை! நான் நிரூபிச்சே ஆகணும்! அதனாலதான் கனகாகிட்டே கரகத்தை கடனா வாங்கிட்டு வந்திருக்கேன்!///
எத்தனை தடவைதான் என்னை தீக்குழி இறங்க சொல்வீங்களோ? இந்த தடவை ராமனை இறக்கி விடுங்கப்பா
வாங்க தமிழ் பிரியன்!
வாங்க தமிழ் பிரியன்!
அய்யோ! அய்யோ! செம காமெடியா போச்சு
கலக்கல்
:)
//நாமக்கல் சிபி said...வாங்க தமிழ் பிரியன்!///
சொல்லுங்க தள
நீங்கல்லாம் இப்படி பண்ணுவீங்கனு தெரியும். அதான் எங்களை அப்பவே எழுதிட்டாங்க.
இன்னும் நிறைய எழுதியிருக்கலாமே சிபி.. நல்லாயிருந்தது.. குட்வொர்க்.. மலேசியால நிறைய 'ப்ரீ' போலிருக்கு..
:))))))
:))))
கலக்குறீங்க சிபி
:))
கலக்கல்
/////தமிழ் பிரியன் said...
\\டிபிசிடி : "உள்ள மட்டும் நானே! உசிரைக் கூடத்தானே என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன்"
சிபி : "என் நண்பன் போட்ட சோறு! நிதமும் தின்னேன் பாரு! நட்பைக் கூட கற்பைப் போல எண்ணுவேன்!///
இதெப்படி இருக்கு.... :))))))))))///
இல்லையே TBCD நாமக்கல் சிபிக்கு ஒரு நாள் தானே சாப்பாடு போட்டதா பதிவு போட்டு எல்லோருக்கும் சொல்லி இருந்தாரு?அப்புறம் எப்படி நிதமும்......பு.த.செ.வி.
//
நிஜமா நல்லவன் said...
இல்லையே TBCD நாமக்கல் சிபிக்கு ஒரு நாள் தானே சாப்பாடு போட்டதா பதிவு போட்டு எல்லோருக்கும் சொல்லி இருந்தாரு?அப்புறம் எப்படி நிதமும்......பு.த.செ.வி.
//
கண்ணா நான் ஒரு நாள் சோறு போட்டா நூறு நாள் போட்ட மாதிரி.
என் வழி............. தனி.. வழி.
என்ன சொல்ல வாரீங்க அப்ப நூறு நாள் முடிஞ்சி தல திரும்பவும் தாய்லாந்து போய்ட்டு உங்க வீட்டுக்கு வரணுமா? அப்படின்னா தானே நீங்க திரும்ப ஒரு நாள் சோறு போடுவீங்க அதவச்சி இன்னொரு நூறு நாள் ஓட்ட முடியும்.
சகுனி: தருமனுக்கு கட்டம் சரியில்லை. நம்ம கூட விளையாடுறதே வேலையாய் போச்சு.
சிபி சார், நீங்க யாரு? உங்க அந்தஸ்து என்ன? தமிழ்மணத்துல் உங்க மரியாதை என்ன? நீங்க பாக்காத மலேசியாவா? நீங்க பாக்காத தாய்லாந்தா? (கிளப்பை சொல்லை தள) உங்க பதிவுக்கு வெறும் 22 பின்னூட்டமா?
பொறுத்தது போதும் பொங்கி எழுங்கள்.
(அப்பாடா ஏதோ நம்மால் ஆன உசுப்பேத்துவது)
:-))
எஸ்கூஸ்மி இங்கே என்னா நடக்குது?