ஆணிகளின் எண்ணிக்கை திரும்ப அதிகமானதால் இன்னும் கொஞ்ச நாள் மலேசியாவை விட்டு வரமுடியாதுன்னு விசா எக்ஸ்டெண்ட் பண்ணனுமேன்னு தாய்லாந்து போயிட்டு அப்படியே பினாங்க்ல இருக்குற டிபிசிடி வீட்டுக்கும் ஒரு நடை போயிட்டு செரம்பான் வந்து சேர அதிகாலை 4.30 மணி ஆயிடுச்சு!

பஸ் ஸ்டாண்டுலேர்ந்து ஒரு டாக்ஸி பிடிச்சி ஹோட்டலுக்குப் போகச் சொன்னேன். அவனும் ஹோட்டலுக்கு கூட்டிட்டு வந்தான். ஹோட்டல் பக்கம் வந்ததும் அப்படியே ஒரு டீ குடிச்சிட்டு அப்புறமா ரூமுக்குப் போலாம்னு

"அப்படியே பக்கத்துல இருக்குற அல் வஜார்" ரெஸ்டாரொன்ல விட்டுடுப்பான்னு சொல்ல அவனும் அங்கே போய் டாக்ஸியை நிறுத்தினான்.

இனி நம்மளோட ஆங்கில(!?) பேச்சும் அவனோட மலாய் பேச்சும்.

நான் : "எவ்ளோப்பா ஆச்சு?"

டா.டிரைவர்: "11 வெள்ளி (11 Ringgits)"

நான் : "வழக்கமா 8 வெள்ளிதானே வாங்குறாங்க"

டா.டிரைவர்: "அது சாதாரண நேரம், இது நைட் சர்வீஸ் சேர்த்து"

நான்: "என்னவோ போ! சரி 50 வெள்ளிக்கு சில்லறை இருக்கா, இந்தா 51 வெள்ளி மீதி 40 வெள்ளி கொடு"

டா.டிரைவர் : "இந்தா மீதி 40 வெள்ளி"

நான் : " ரசீது இருக்கா?"

டா.டிரைவர்: "இதுக்கெல்லாம் ரசீது கொடுக்க முடியாது?"

நான்:" ஏன்? 10 வெள்ளிக்கு கம்மின்னாதான் கொடுக்க மாட்டீங்க, இப்ப 11 வெள்ளிதானே, கொடுக்குறதுக்கு என்ன?"

இதுக்கு மேல கொஞ்சம் நானா புரிஞ்சிகிட்டது, அப்புறம் நானா சேர்த்த மசாலா எல்லாம்


டா.டிரைவர் : "அடங்கொய்யால! ஒரு வெள்ளி சேர்த்து கொடுத்துட்டா ரசீது கேப்பியா நீயி"

நான்: "ஏய்! தோ பாரு கொய்யாலே எல்லாம் சொல்லப் பிடாது! அது கெட்ட வார்த்தையாம்! இன்னிக்குத்தான் டிபிசிடி சொன்னாரு! அப்புறம் நானும் பேசிப்புடுவேன்"

டா.டிரைவர்: "என்ன பேசுவே நீயி! அதான் ரசீது இல்லைன்னு சொல்லிட்டனல்ல! இன்னமும் ஏன் டாக்ஸிக்குள்ளயே உக்காந்திருக்கே! மரியாதையா கீழே இறங்கு"

நான் : "உன்னைப் பார்த்தா பாவமா இருக்கு! நீ யார்கிட்டே பேசிகிட்டிருக்கேன்னு தெரியாம பேசிகிட்டிருக்கே!"

டா.டிரைவர்: "இப்போ நீ இறங்கப் போறியா இல்லை"

நான் : "நீ ரசீது கொடுக்காம இறங்க மாட்டேன்"

டா.டிரைவர் : "மவனே! இப்ப நீ இறங்கலைன்னா ஒரு வழி பண்ணிடுவேன்டா டுபுக்கு"

நான் : " ஹே! நான் ஏதோ உனக்கு பயந்துகிட்டு இறங்குறேன்னு மட்டும் நினைச்சிடாதே! எனக்கும் வேலை இருக்கு! அப்போ நீ ரசீது தர மாட்டே இல்லை! நீயே வெச்சிக்கோ!"

டாக்ஸியை விட்டு இறங்கி அப்படியே பின்னால் வந்து வண்டி எண்ணை குறித்துக் கொண்டேன்!

டா.டிடைவர் : "ஏய்! இப்ப எதுக்கு நீ டாக்ஸி நம்பரை நோட் பண்ணுறே? வந்தனா மிதிச்சிப்பிடுவேன் மிதிச்சி"

நான் : "அட போப்பா! எனக்கு வேலை இருக்கு! நீ போயி உன் வேலையைப் பாரு!"

கடையில் எதிர்பட்ட சர்வரிடம்

"அண்ணே! அந்த ஆளு திட்டுறான் பாருங்க! எதுக்கு திட்டுறான்னு கொஞ்சம் வெளக்கமா கேளுங்க! எனக்கு ஒண்ணுமே புரியலை"



டா.டிரைவர்: " டேய்! உள்ளே போயி உக்காந்துட்டா விட்டுடுவேன்னு நினைச்சியா? இந்தா பாரு இருந்த லிவராலியே உன்னை அடிச்சி கொன்னுடுவேன்"

நான் : "டாய்! நான் இந்தக் கடை வாசலைத் தாண்டி வர மாட்டேன்! நீயும் அதைத் தாண்டி வரக் கூடாது! பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்!
இந்த லிவர் எடுத்து காட்டுற வேலையெல்லாம் என்கிட்டே வாணாம்! அப்புறம் நானும் லிவர், கிட்னி, ப்ரெய்னெல்லாம் எடுத்து காட்டுவேன்"

டா.டிரைவர்: "டேய்! எதுனா இருந்தாலும் வெளியே வந்துடா பேசுடா முதல்ல"

நான் : "வெளியே நின்னு பேச நான் என்ன உன்னை மாதிரி வெவெரம் கெட்டவனா? என்னை அடிக்க கை ஓங்கிட்டில்ல நான் யாருன்னு தெரியுமா? எனக்கு இன்னொரு பேரும் இருக்கு"

டா.டிரைவர் : " தோ பாரு! இந்த வெங்காயமெல்லாம் இங்கே வேண்டாம்! உனக்கு ஒரு பேரு இல்லை! பல பேரு இருக்குன்னு தமிழ்மணத்துல இருக்குற எல்லாத்துக்கும் தெரியும்"

நான்: (மனதிற்குள்) "அடப்பாவி இவன் வரைக்கும் தெரிஞ்சிடுச்சா"

"அதான் தெரிஞ்சி போச்சுல்ல! கெட் அவுட்! கெட் அவுட்"

டா.டிரைவர்: "நான் ஏற்கனவே வெளியதாண்டா இருக்கிறேன் வெண்ணெய்! நீ வா வெளியா! உன்னை மிதிக்காம போறனா இல்லையா பாரு!"

நான்: "தம்பி! இந்த உலகத்துல எந்த நாட்டுக்குப் போனாலும் நமக்கு ஆளுங்க இருக்காங்க! ஒரு ஸ்டேட்டஸ் மெசேஜ் போட்டுட்டா போதும்! பத்திகிட்டு எரிடும் தெரியுமா! உன்னால எங்கயும் போக முடியாது"

டா.டிரைவர் : "உலகம் பூரா எதுக்குடா போறே! உன்னை உதைக்க இந்த ஊர் பூரா நான் ஆள் வெக்கிறேன் இரு!"

நான்: "இந்த உள்குத்துப் பேச்செல்லாம் இங்க வேணாம்! என்னால இந்த ஊரை விட்டுப் போக முடியாதுன்னு சொல்றியா? கொஞ்சம் அந்தப் பக்கம் ஒதுங்கி நின்னு வேடிக்கை பாரு! நான் எப்படி ஓடுறேன்னு"

டா.டிரைவர் : "என்ன கொடுமை சார் இது! ஓடுறதைப் பெருமையா பேசுறான்! இவன்கிட்டே இவ்ளோ நேரம் சண்டை போடுறேனே என்னைச் சொல்லணும்!"

நான்: "இப்பக் கூட ஒண்ணும் கெட்டுப் போயிடலை! மரியாதையா மன்னிப்புக் கேட்டுட்டு ரசீதை கொடுத்துட்டு ஓடிப் போயிடு!"

டா.டிரைவர் :" அடங்கொக்க மக்கா! அதைத்தான் தர முடியாதுன்னு அப்பவே சொல்லிட்டேன்ல!"

நான்: "அப்ப நான் குடுத்த 11 வெள்ளியைத் திருப்பிக் கொடு"

டா.டிரைவர்: "டேய்! என்னை என்ன சர்தார்னு நினைச்சியா! நிஜமாவே கொலை பண்ணிடுவேன்! அப்ப உன்னை பஸ் ஸ்டாண்டுல இருந்து கொண்டு விட்டேனே அந்த சார்ஜ் யாரு கொடுப்பா"

நான்: "ஓ! இதான் உன் பிரச்சினையா! இதை முதல்லியே சொல்றதுக்கு என்ன! ஒண்ணு பண்ணுவோம்! திரும்ப என்னை ஏத்திகிட்ட இடத்துடல்யே கொண்டு போயி விட்டுடு! சரியாப் போயிடும்"

டா.டிரைவர்(மனதிற்குள்) :"!? இவன் என்ன லூசா இருப்பான் போல இருக்கே"

"டேய் வெளங்காதவனே! வந்துத் தொலை! உன்னை அங்கயே கொண்டு போயி விடுறேன்"

நான்: "அது இப்ப வேணாம்! இன்னொரு நாள் நிதானமா பஸ் ஸ்டாண்ட் போவ தேவைப் படுறப்போ கூப்பிடுறேன்! இப்ப காசை மட்டும் கொடு போதும்!"

டா,டிரைவர் : "இதுக்கு மேல பேசிகிட்டிருந்தேன்னா எனக்கு பைத்தியமே பிடிச்சிடும்! உனக்கென்ன ரசீதுதான வேணும்! இந்தா வெறும் ரசீது தரேன்! என்ன வேணும்னாலும் எழுதித் தொலைச்சிக்கு! என்னை ஆளை விடு!"

நான் : "இதைத்தானய்யா நான் முதல்லயே கேட்டேன்! அப்பவே கொடுத்திருந்தைன்னா பிரச்சினையே இல்லை பாரு! இப்ப அநியாயத்துக்கு மிரட்டி பயந்து போயி அப்புறமா கொடுக்குறியே"

டா.டிரைவர் : "என்ன! நீ மிரட்டி நான் பயந்தனா"

நான் : "அடப் போப்பா! ரசீதுதான் கொடுத்துட்டேல்ல! இன்னமும் என்ன பேச்சு போயிகிட்டே இரு!"

அப்பாடா! ஒரு வழியா ரசீதையும் வாங்கிட்டேன்!
ஒரு நிமிஷம் கொலை நடுங்கிப் போச்சுல்ல!
This entry was posted on 6:36 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

43 பின்னூட்டங்கள்:

On Fri Mar 14, 07:32:00 PM , Anonymous said...

//அப்புறம் நானும் லிவர், கிட்னி, ப்ரெய்னெல்லாம் எடுத்து காட்டுவேன்"//
இதில் பொருள் குற்றம் இருக்கு தள. என்னன்னு சொல்லுங்க

 
On Fri Mar 14, 07:36:00 PM , Anonymous said...

DashBoard,
Layout,
Edit html,
Click Edit.. Find on this page,
Type Justify..
Replace 'Justify' with 'Left'
and save.
நெருப்பு நரி கடிச்சு துப்புதய்யா உங்க பதிவை. காதுல நெருப்பு வராத குறைதான் போங்க...

 
On Fri Mar 14, 07:40:00 PM , நாமக்கல் சிபி said...

/நெருப்பு நரி கடிச்சு துப்புதய்யா உங்க பதிவை.//

மாத்திட்டேன்! தகவலுக்கு நன்றி!

 
On Fri Mar 14, 07:40:00 PM , நாமக்கல் சிபி said...

//இதில் பொருள் குற்றம் இருக்கு தள. என்னன்னு சொல்லுங்க
//

எனக்கு என்னன்னு தெரியலையேப்பா! நீங்களே சொல்லுங்க!

என்ன பொருள் குற்றம் கண்டீர்?

 
On Fri Mar 14, 07:41:00 PM , நாமக்கல் சிபி said...

//இதில் பொருள் குற்றம் இருக்கு தள. என்னன்னு சொல்லுங்க
//

அடப் பாவி!

இல்லாத ஒண்ணை எப்படி எடுத்துக் காட்டுவேன்னு கேக்குறீயளா?

யூ மீன் ப்ரெயின்?

 
On Fri Mar 14, 07:45:00 PM , சென்ஷி said...

//சிங்கத்தைக் கொல்ல முயற்சி : சங்க உறுப்பினர்கள் அதிர்ச்சி"//

அப்படியா........! (இதுக்கு பேர் அதிர்ச்சி....)

 
On Fri Mar 14, 07:47:00 PM , சென்ஷி said...

//Collapse comments

Anonymous said...
//அப்புறம் நானும் லிவர், கிட்னி, ப்ரெய்னெல்லாம் எடுத்து காட்டுவேன்"//
இதில் பொருள் குற்றம் இருக்கு தள. என்னன்னு சொல்லுங்க//

இது பொருள் குற்றம் இல்ல கண்ணா... பொருள் குறையுது :))

 
On Fri Mar 14, 07:48:00 PM , TBCD said...

சிங்கத்தை டாக்ஸியில் பின் சீட்டில் வைச்சுக் கூட்டிட்டு வந்தது தான் தப்பு..

டாப்புலே ஏத்தி விட்டுறுக்கனும்... :)

 
On Fri Mar 14, 07:48:00 PM , சென்ஷி said...

கடைசில அந்த டிரைவர சும்மாவா விட்டீங்க.. அட்லீஸ்ட் ஒரு மன்னிப்பாச்சும் கேட்டிருக்கணும் இல்ல ஓ சாரி வாங்கியிருக்கணுமில்ல்ல்ல :)

 
On Fri Mar 14, 07:48:00 PM , Anonymous said...

//நாமக்கல் சிபி said...

/நெருப்பு நரி கடிச்சு துப்புதய்யா உங்க பதிவை.//

மாத்திட்டேன்! தகவலுக்கு நன்றி!///
இப்ப சூப்பராகீது தள நெருப்பு நரில! நன்னி!

 
On Fri Mar 14, 07:49:00 PM , சென்ஷி said...

//சிங்கத்தை டாக்ஸியில் பின் சீட்டில் வைச்சுக் கூட்டிட்டு வந்தது தான் தப்பு..

டாப்புலே ஏத்தி விட்டுறுக்கனும்... :)//

அந்த டிரைவர் மாதிரியே வண்டிக்கும் டாப் கழண்டு போச்சோ என்னமோ :))

 
On Fri Mar 14, 07:49:00 PM , கோவி.கண்ணன் said...

சின்னப் புள்ளக்கிட்ட மோதுன கட்டதுரை யாரு ?

லாரியில் ஆள் ஏற்றி வரவா ?

 
On Fri Mar 14, 07:51:00 PM , நாமக்கல் சிபி said...

//கடைசில அந்த டிரைவர சும்மாவா விட்டீங்க.. அட்லீஸ்ட் ஒரு மன்னிப்பாச்சும் கேட்டிருக்கணும் இல்ல ஓ சாரி வாங்கியிருக்கணுமில்ல்ல்ல //

நினைச்சேன்யா சென்ஷி!

நீராத்தான் இருக்கும்னு!

அடிக்காம போனானேன்னு நிம்மதியா இருக்கேன்!

கூப்பிட்டு மன்னிப்பு வேற கேக்கச் சொல்லணுமா!

பாவம் பிழைச்சிப் போகட்டும்னு விட்டுட்டேன்! (ஹிஹி)

 
On Fri Mar 14, 07:51:00 PM , சென்ஷி said...

//கோவி.கண்ணன் said...
சின்னப் புள்ளக்கிட்ட மோதுன கட்டதுரை யாரு ?

லாரியில் ஆள் ஏற்றி வரவா ?//

இல்ல ஒட்டகத்துல ஷேக்க ஏத்தி அனுப்பவா..

(ஹி..ஹி.. நான் கொஞ்சம் பிஸி.. இங்க கும்மணும்ல) :))

 
On Fri Mar 14, 07:53:00 PM , நாமக்கல் சிபி said...

//டாப்புலே ஏத்தி விட்டுறுக்கனும்//

:)

அது சரி! அவன் டாப் கீர் போட்டு மேல ஏத்தலாம்னு கூட நினைச்சிருப்பான்!

 
On Fri Mar 14, 07:54:00 PM , நாமக்கல் சிபி said...

சென்ஷி ரொம்ப நாளா ஆளைக் காணோமே? எங்கே போனீங்க?

 
On Fri Mar 14, 07:56:00 PM , Thamiz Priyan said...

///டா.டிரைவர் : " தோ பாரு! இந்த வெங்காயமெல்லாம் இங்கே வேண்டாம்! உனக்கு ஒரு பேரு இல்லை! பல பேரு இருக்குன்னு தமிழ்மணத்துல இருக்குற எல்லாத்துக்கும் தெரியும்"

நான்: (மனதிற்குள்) "அடப்பாவி இவன் வரைக்கும் தெரிஞ்சிடுச்சா"///

ஓ இது தான் உலகப் புகழா? நடக்கட்டும்

 
On Fri Mar 14, 08:02:00 PM , தணிகை said...

நல்லா தான்யா கலாய்க்கறீரும்..மாமோய்

 
On Fri Mar 14, 08:05:00 PM , சென்ஷி said...

இங்க தான்பக்க்கத்த்லுல ஷார்ஜா
:))

 
On Fri Mar 14, 08:05:00 PM , நாமக்கல் சிபி said...

/நல்லா தான்யா கலாய்க்கறீரும்..மாமோய்//

வாய்யா மாப்பீ!

நன்னி!

 
On Fri Mar 14, 08:40:00 PM , தருமி said...

சே...! அநியாயமா போச்சே... உங்கள இப்படி உட்டுட்டு போய்ட்டானே அந்த ஆளு........

:(

 
On Fri Mar 14, 09:01:00 PM , மங்களூர் சிவா said...

//
தருமி said...
சே...! அநியாயமா போச்சே... உங்கள இப்படி உட்டுட்டு போய்ட்டானே அந்த ஆளு........

:(
//
:))))))))))))

 
On Sat Mar 15, 09:06:00 AM , ரசிகன் said...

ஹா..ஹா..:)))))
மாம்ஸ் கலக்கிட்டிங்க..
சூப்பரு

 
On Sat Mar 15, 09:06:00 AM , ரசிகன் said...

// நாமக்கல் சிபி said...

//இதில் பொருள் குற்றம் இருக்கு தள. என்னன்னு சொல்லுங்க
//

அடப் பாவி!

இல்லாத ஒண்ணை எப்படி எடுத்துக் காட்டுவேன்னு கேக்குறீயளா?

யூ மீன் ப்ரெயின்?//

:)))))))))

 
On Sat Mar 15, 09:07:00 AM , ரசிகன் said...

மாம்ஸ் பதிவு மட்டுமில்ல.. பின்னூட்டங்களும் பின்னுது:))))

 
On Sat Mar 15, 09:07:00 AM , ரசிகன் said...

//நெருப்பு நரி கடிச்சு துப்புதய்யா உங்க பதிவை...//
:))))))

 
On Sat Mar 15, 09:34:00 AM , Sivamurugan said...

//நாமக்கல் சிபி said...

//இதில் பொருள் குற்றம் இருக்கு தள. என்னன்னு சொல்லுங்க
//

அடப் பாவி!

இல்லாத ஒண்ணை எப்படி எடுத்துக் காட்டுவேன்னு கேக்குறீயளா?

யூ மீன் ப்ரெயின்?//

என்னய்யா 'சிவா' (நாந்தான்) தனியா சிரிப்பு பலர் ஒரு மாதிரியா பாக்குராய்ங்க. :)

 
On Sat Mar 15, 11:50:00 AM , Santhosh said...

இன்னும் எங்க வீட்டு நெருப்பு நரி கடிச்சி துப்பிட்டு தான் இருக்கு.

 
On Sat Mar 15, 11:52:00 AM , Anonymous said...

வளைச்சி வளைச்சி எப்படி அடிச்சாலும் தாங்குறான்யா சிபி ரொம்ப நல்லவன்யாஆஆஆஆஆஆஆஆ..

 
On Sat Mar 15, 04:02:00 PM , குசும்பன் said...

அந்த டாக்சி காரன் TBCD செட் செஞ்ச ஆள், உங்களை காலி செய்ய.

ரகசிய தகவலுக்கு நன்றி கோவி.கண்ணன் சார்.

 
On Sat Mar 15, 05:42:00 PM , Anonymous said...

//குசும்பன் said...
அந்த டாக்சி காரன் TBCD செட் செஞ்ச ஆள், உங்களை காலி செய்ய.

ரகசிய தகவலுக்கு நன்றி கோவி.கண்ணன் சார்.
// டாய் எங்க சித்தப்பு சிங்கிளா இருந்தாலும் சிங்கம் டா! தில் இருந்தா அவர துப்பாக்கி வச்சி சுடுங்கடா பாப்போம்.. சித்தப்பு நீங்க குடுத்த 20 ரூபாய்க்கு பேசியாச்சு இனிமெ பேசனும்னா அதுக்கு தனிகாசு

 
On Sat Mar 15, 08:23:00 PM , நாமக்கல் சிபி said...

// டாய் எங்க சித்தப்பு சிங்கிளா இருந்தாலும் சிங்கம் டா! தில் இருந்தா அவர துப்பாக்கி வச்சி சுடுங்கடா பாப்போம்//

இளைய கவி! ஏன்யா என்மேல இம்புட்டு கொலை வெறி?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

(ஆஹா! தலைக்கு நாம ஆப்பு வாங்கிக்கொடுக்கறது மாதிரி நமக்கு வாங்கிக் கொடுக்க நாலு பேர் கெளம்பிட்டாங்க போல இருக்கே!)

 
On Sat Mar 15, 08:24:00 PM , நாமக்கல் சிபி said...

//ரகசிய தகவலுக்கு நன்றி கோவி.கண்ணன் சார்.//

இது ரகசியத் தகவலா?

அது ஊரறிஞ்ச விஷயமய்யா!

ரெண்டு மாசமா என் மேல கருவிகிட்டிருந்தாரு அந்த மனுஷன்!

 
On Sat Mar 15, 08:25:00 PM , நாமக்கல் சிபி said...

//வளைச்சி வளைச்சி எப்படி அடிச்சாலும் தாங்குறான்யா சிபி ரொம்ப நல்லவன்யாஆஆஆஆஆஆஆஆ..//

இதைச் சொன்னதாலதான் அடிவாங்காம திரும்பிப் போனே!

 
On Sat Mar 15, 08:26:00 PM , நாமக்கல் சிபி said...

//இன்னும் எங்க வீட்டு நெருப்பு நரி கடிச்சி துப்பிட்டு தான் இருக்கு.//

அட சந்தோஷ்!

ரொம்ப நாளா ஆளைக் காணோம்?

பிரச்சினையெல்லாம் சால்வ் ஆயிடுச்சா?

 
On Sat Mar 15, 08:27:00 PM , நாமக்கல் சிபி said...

//என்னய்யா 'சிவா' (நாந்தான்) தனியா சிரிப்பு பலர் ஒரு மாதிரியா பாக்குராய்ங்க. :)
//

நன்றி சிவமுருகன்!

ரொம்ப நாள் கழிச்சி எட்டிப் பாக்குறீங்க!

சேப்ல ஆணி அளவுக்கதிகம் போல!

 
On Sat Mar 15, 08:28:00 PM , நாமக்கல் சிபி said...

//லாரியில் ஆள் ஏற்றி வரவா ?//

அந்த நேரத்துல ஒருத்தரும் வந்துடாதீங்க!

அப்புறமா எல்லாம் பேசுவீங்க!
:)

 
On Sat Mar 15, 09:19:00 PM , Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இன்னமும் ஏன் டாக்ஸிக்குள்ளயே உக்காந்திருக்கே! மரியாதையா கீழே இறங்கு//

அண்ணாச்சி, நியாயமாப் பாத்தா எக்ஸ்ட்ரா கொஞ்ச நேரம் டாக்சிக்குள்ள உக்காந்ததுக்கு நீங்க தான் டா.டி-க்கு எக்ஸ்ட்ரா போட்டுத் தரணும்! 15 வெள்ளி!

ஆனா இப்படி ரவுசு பண்ணி தமிழகத்தின் தன்மானத்தை அடகு வச்சிட்டு வந்திருக்கீக!
சரி பரவாயில்லை! இதே தில்லோடு நீங்க சென்னைக்கும் வந்து மீட்டருக்கு மேல பீட்டர் விட வேணுமாய் ஆ.டி-கள் யூனியன் சார்பாக் கேட்டுக்கறேனுங்க!

 
On Sat Mar 15, 09:23:00 PM , Kannabiran, Ravi Shankar (KRS) said...

நீங்க இம்புட்டு பேசனதுக்கு, பேசாம டிபிசிடி அண்ணாச்சிக்கு ஒரு போனைப் போட்டிருந்தா, பினாங்கில் இருந்தே பஞ்சாயத்து பண்ணி வச்சிருப்பாரு!
அதை வுட்டுப்போட்டு சிங்கத்தைக் கொல்ல முயற்சி, சங்கத்தை அள்ள முயற்சி, தங்கத்தைக் கிள்ள முயற்சி-ன்னு பதிவு போட்டிக்குனு இருக்கீங்க! டூ பேட் சிபி அண்ணா :-(((

 
On Sat Mar 15, 09:44:00 PM , SP.VR. SUBBIAH said...

:-)))))))))))))))))))))))))

 
On Sat Mar 15, 10:28:00 PM , நிஜமா நல்லவன் said...

தாங்க முடியல. எப்பவுமே இப்படித்தானா? நான் இப்ப தான் உங்க ப்ளாக் பக்கம் வந்திருக்கிறேன். தூசி தட்டி படிக்க ஆரம்பிக்கிறேன்.

 
On Mon Mar 17, 01:53:00 AM , நாமக்கல் சிபி said...

//எப்பவுமே இப்படித்தானா//

ஹிஹி அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லைங்க நல்லவன்!

நான் இப்படித்தான் எப்பவுமே!

 
On Mon Mar 17, 06:56:00 PM , நிஜமா நல்லவன் said...

///நாமக்கல் சிபி said...
//எப்பவுமே இப்படித்தானா//

ஹிஹி அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லைங்க நல்லவன்!

நான் இப்படித்தான் எப்பவுமே!///



ம்ம் இப்படி ஒரு கமெண்ட் வரும்னு நெனைச்சேன். வந்துடுச்சு.