1 . வணக்கம் தோழி! முதல்ல உங்களைப் பத்தி ஒரு சின்ன அறிமுகம் கொடுங்க!

வணக்கம் சிபி அவர்களே, நான் கொழும்பில் வசிக்கிறேன். மருத்துவ கலாசாலை இறுதி ஆண்டு மாணவி.


2 . உங்களுக்கு வலைப்பூ அறிமுகம் எப்படி ஏற்பட்டது? யாருடைய பிளாக் பார்த்து எழுத ஆரம்பிச்சீங்க?
(க்ர்ர்...அவங்க மட்டும் என் கைல கிடைக்கட்டும்)

ஒரு வலைத் தள குழுமத்தில் சிறிய அளவில் இயங்கிக் கொண்டிருந்தேன்.அப்போது நண்பர் திரு.விவேகானந்தன் அவர்கள் தனியே பதிவு ஒன்றை துவக்கி எழுதிடுமாறு அறிவுறுத்தி, தனியே எனக்கென ஒரு பதிவினையும் உருவாக்கித் தந்தார். அவரது வழிகாட்டுதலில்தான் நான் பதிவுலகத்திற்கு வந்தேன்.


3 . எல்லோரும் பிளாக் எழுத வரும்போது சீரியஸா கதை, கவிதை(ம்க்கும்) னு எதையாவது ஆரம்பித்து, ஒன்னு தீவிர இலக்கியம்னு போறாங்க, அல்லது மொக்கை, கும்மின்னு போயிடுறாங்க! ஆனா நீங்க வித்தியாசமான சப்ஜெக்ட்ல ஆரம்பிச்சி அதை அப்படியே மெயின்டெயின் பண்ணுறீங்க! இந்த வித்தியாசமான சப்ஜெட்ல எப்படி ஆர்வம் வந்தது? எதனால இதைத் தேர்வு செய்தீர்கள்?

எனது குடும்பத்தாரின் பரம்பரை சேமிப்பான சித்தர் நூல்களை மின்னூடகத்தில் பதிந்து வைக்க பதிவுகள் சரியான இடமாக தோன்றியது.அப்படி ஆரம்பித்ததுதான் இந்த சித்தர்கள் ராச்சியம்.எனக்கு தெரிந்ததை எழுதுகிறேன் அவ்வளவுதான் மற்றபடி சிறப்பான காரணங்கள் ஏதும் இல்லை.


4 . கடந்த ஒரு வருடத்தில் 400 இடுகைகள். எப்படியும் தினமும் ஒன்று என்ற வீதத்தில்? தினந்தோறும் எப்படி உங்களுக்கு நேரம் கிடைக்கிறது? கல்லூரிக்கும் போய்க்கொண்டு இருக்கிறீர்கள்! அசாத்தியமான உழைப்பு அவசியம் அல்லவா? அது மட்டுமின்றி இன்னும் சில வலைப்பூக்களும் இருக்கின்றன அல்லவா?

வார நாட்களில் பதிவுகளில் கவனம் செலுத்த இயலாது. அதனால் சனிக் கிழமைகளில் புத்தகங்களை தேடி குறிப்பெடுத்து, ஞாயிற்று கிழமைகளில் ஒரே மூச்சில் எழுதி,அவற்றை அதை ஆறு பதிவுகளாய் பிரித்து நாளும் நேரமும் குறிப்பிட்டு வலையேற்றுவதுடன் என் வேலை முடிந்து விடுகிறது.ப்ளாக்கர் அவற்றை தினம்தோறும் குறிப்பிட்ட நேரத்தில் பதிப்பித்து விடுவதால் வாரம் ஆறு பதிவுகள் சாத்தியமாகிறது.

சித்தர்களைத் தாண்டிய தனித் தகவல்களை தொகுத்து வைக்க தங்கதமிழ், சித்த ஜோதிடம், ஆலயம், ஆன்மீகம், மனக்கனவுகள் ஆகிய பதிவுகளை வைத்திருக்கிறேன்.அவற்றில் மாதம் ஒரு பதிவு போடுவது கூட சிரமமாயிருக்கிறது.


5. உங்களுடைய இந்த வலைப்பூவை ஏறத்தாழ 750 க்கும் மேற்பட்டோர் பின்தொடர்கிறார்கள். தமிழ் வலைப்பூக்களில் மிக அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட மிகச் சிலரில் உங்க வலைப்பூவும் ஒன்றாக இருக்கிறது! குறிப்பா பெண் பதிவர்களில் முதலிடம் உங்க வலைப்பூவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்! எப்படி உங்களுக்கு இது சாத்தியமாயிற்று? (எப்படி இவ்வளவு பேரை மிரட்டி பின் தொடர வைத்தீர்கள்?)

இது எனக்கே ஆச்சர்யமான ஒன்று, சமயங்களில் மிரட்சியாக கூட இருக்கிறது. இங்கே சித்தர்களைப் பற்றி அனுபவம் வாய்ந்த மூத்தவர்கள் பலர் எழுதிக் கொண்டிருக்கும் சூழலில் என் மாதிரியான சிறியவளின் பதிவுகளும் கவனிக்கப் படுகிறதென்றால் அதற்கு குருவருள் மட்டுமே காரணம் என நினைக்கிறேன். அவரின்றி ஓர் அணுவும் அசையாது என்பதை எனக்கு உண்ர்த்திய இன்னொரு நிகழ்வாகவே இதை பார்க்கிறேன்.


6. பொதுவா ஆன்மிகம் தொடர்பான விஷயங்களுக்கு அவ்வளவு வரவேற்பு இருப்பதில்லை! அப்படி இருந்தும் இவ்வளவு வரவேற்பு இருக்கும்னு எப்படி தொடங்கினீர்கள்? இத்தனைக்கும் நீங்க எந்த திரட்டியிலும் இணைக்கவும் இல்லை

இத்தனை பெரிய வரவேற்பு நான் முற்றிலும் எதிர்பார்க்காதது என்பதுதான் உண்மை. ஆரம்பத்தில் தகவல்களை மட்டும் பதிந்து வைக்க நினைத்த நான், ஒரு கட்டத்தில் வாசிப்பவர்களை மனதில் கொண்டு எழுத ஆரம்பித்தேன்.எளிய தமிழில் எழுதுவதுதான் பதிவின் வெற்றிக்கு காரணம் என ஒரு நண்பர் மின்னஞ்சலில் தெரிவித்திருந்தார்.எனக்கும் அதுவே சரியென படுகிறது.மேலும் திரட்டிகளின் வாக்கு பட்டையை இணைப்பதனால் வரும் வாசகர்களை,ஆர்வத்துடன் தகவல்களைத் தேடிவரும் வாசகரகளையே நான் பெரிதும் விரும்புகிறேன்.அதன் பொருட்டே திரட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வில்லை.



7 . இவ்வளவு சீரியஸா ஒரு பக்கம் எழுதினாலும் கூகிள் பஸ்ல கொலைவெறியோட மொக்கை போடுறீங்க! எப்படி ஒரே பெயரில் ரெண்டு பர்சனாலிட்டி மெயின்டெயின் பண்ண முடியுது?

எங்கும் இயல்பாகத்தான் இருக்கிறேன்.எனக்கு வித்தியாசம் தெரியலை.


8 . ஒரு வருட பதிவுலக வாழ்க்கையில் சந்திச்ச சுவாரசியமான விஷயங்கள் ஏதாவது இருந்தால் பகிர்ந்துக்குங்க.

பல இனிய நண்பர்களை இந்த வலைப்பூ முயற்சி எனக்கு தந்திருக்கிறது. இந்த பதிவின் வளர்ச்சியில் அவர்களின் தொடர்ச்சியான விமர்சனங்களும்,கருத்துக்களும் பங்களித்திருக்கின்றன என்றால் மிகையில்லை. குறிப்பாக சொல்வதானால் எனது இனிய நண்பராக திரு. சரவணகுமார் அவர்கள் கிடைத்தது மறக்கமுடியாத நிகழ்வு.


9 . பதிவுலக நண்பர்களுக்கு நீங்க சொல்ல ஆசைப்படுற மெசேஜ் என்ன?

ஒரே ஒரு செய்தி இருக்கிறது, திரு. நாமக்கல் சிபி ரொம்ம்ம்ம்ம்ப நல்லவர்.



பின் குறிப்பு: இது ஒரு சீரியஸ் பேட்டி!

பேட்டி எடுத்தவர் : நாமக்கல் சிபி
This entry was posted on 1:14 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

17 பின்னூட்டங்கள்:

On Wed Feb 23, 02:51:00 AM , ILA (a) இளா said...

//ஒரே ஒரு செய்தி இருக்கிறது, திரு. நாமக்கல் சிபி ரொம்ம்ம்ம்ம்ப நல்லவர்//
பாவம், யாரோ விவரம்/உலகம் தெரியாதவங்க போல

 
On Wed Feb 23, 03:25:00 AM , Thekkikattan|தெகா said...

:) ரொம்ப சீரியஸாத்தான் கேள்விகளும் பதிலும் இருக்கூஊ...

ஆனா, கடைசியா ரொம்ம்ம்மப நல்ல்வர்னு யாரச் சொல்லுறாங்கவோய் :D

 
On Wed Feb 23, 08:44:00 AM , Anonymous said...

நல்லா இருக்கு பதிவும் பதில்களும்..:-)

 
On Wed Feb 23, 11:59:00 AM , Anonymous said...

ஆள் அவச்சு பேட்டி எடுத்த மாறி இருக்கே. சுய விளம்பரம் தேவையா உனக்கு :)))

 
On Wed Feb 23, 01:31:00 PM , Unknown said...

/ஆள் அவச்சு பேட்டி எடுத்த மாறி இருக்கே. சுய விளம்பரம் தேவையா உனக்கு :)))//

அதானே! சூரியனுக்கே டார்ச் லைட் அவசியமா?

 
On Wed Feb 23, 01:31:00 PM , Unknown said...

/பாவம், யாரோ விவரம்/உலகம் தெரியாதவங்க போல
/

@ILA : akkang!

 
On Wed Feb 23, 01:32:00 PM , Unknown said...

எட்டு கேள்விகள்தான் அவங்ககிட்டே கேட்டது! கடைசி கேள்வி ஹிஹி.. நானா சிந்திச்சது!

 
On Wed Feb 23, 02:42:00 PM , Anonymous said...

ஆடாதடா ஆடாதடா மனிதா.. ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா....

 
On Wed Feb 23, 03:36:00 PM , Unknown said...

/ஆடாதடா ஆடாதடா மனிதா.. ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா.... /


தெய்வமே! இதெல்லாம் மனுஷங்களுக்குத்தனே! நம்மை மாதிரி தெய்வங்களுக்கு இல்லையே!

 
On Wed Feb 23, 09:36:00 PM , தமிழ் அமுதன் said...

கேள்விகள் எல்லாம் கலக்கல்...!

 
On Wed Feb 23, 09:37:00 PM , தமிழ் அமுதன் said...

பதில்கள் எல்லாம் பொறுப்புடன் உள்ளது...!

 
On Wed Feb 23, 09:41:00 PM , தமிழ் அமுதன் said...

///7 . இவ்வளவு சீரியஸா ஒரு பக்கம் எழுதினாலும் கூகிள் பஸ்ல கொலைவெறியோட மொக்கை போடுறீங்க! எப்படி ஒரே பெயரில் ரெண்டு பர்சனாலிட்டி மெயின்டெயின் பண்ண முடியுது?

எங்கும் இயல்பாகத்தான் இருக்கிறேன்.எனக்கு வித்தியாசம் தெரியலை.///

ஒஹ்ஹ் அவங்க அப்போ ரெண்டயும் மொக்கைனு சொல்லுராங்களா..! இல்ல சீரிய
ஸ் னு சொல்லுராங்களா...!

நாமதான் குழப்பிகிறோமோ..!;;))

 
On Wed Feb 23, 09:50:00 PM , ராம்ஜி_யாஹூ said...

nice

 
On Wed Feb 23, 10:35:00 PM , chandru2110 said...

சரியான கேள்வி தமிழ் அண்ணா. இதுக்கும் தோளிட்ட பதில வாங்கிடுங்க. நல்ல சுவாரஸ்யமான பேட்டி(இதுக்கு பஸ்ல போடுற மொக்கையே மேல். )

 
On Thu Mar 10, 11:59:00 PM , மரா said...

நல்லதொரு அறிமுகத்திற்கு நன்றி அருணையடி.வாழ்க வளமுடன் மும்பையிலேயே :-)

 
On Tue Apr 12, 12:13:00 AM , சி.பி.செந்தில்குமார் said...

என்னது? இது இல்லாம இன்னும் சில பிளாக் இருக்க? அய்யய்யோ..

 
On Thu Sep 15, 08:10:00 AM , தமிழ்த்தோட்டம் said...

நல்ல முயற்சி பாராட்டுக்கள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in